வெள்ளி, 7 மார்ச், 2014

அது போன மாசம், நா சொல்றது இந்த மாசம்




கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலின் போது, நீங்க இன்னும் வளரணும் தம்பி, இப்பொதைக்கு ஒரு தொகுதி கூட தர முடியாது என கலைஞர் அவர்கள், வீட்டுக்கு அனுப்பிய போது,

இல்லாத மானம், போய் விட்டதாய் பொங்கி எழுந்தவர்கள் வெளியே சமுதாயத்திடம் நடத்திய வேஷம் பலருக்கும் மறந்திருக்காது.

நாங்கள் நான்கு கேட்டோம், பிறகு மூன்று கேட்டோம், ஆனால் கலைஞர் ஒன்றே ஒன்று தான் என்றார்.

ஒரு தொகுதிக்கா நாங்கள் கட்சி அமைத்தோம் ? நாங்கள் முஸ்லிம்களின் மானத்தை எப்பாடுபட்டாவது காத்தே தீருவோம் என சினிமா வசனங்கள் பேசிய பிறகு திமுகவிலிருந்தே வெளியேறி தனித்து (அதாவது, புதிய தமிழகம், கார்த்திக், சரத்குமார் என கூத்தாடி பட்டறைகளுடன் சேர்ந்து தான்) போட்டியிடப் போகிறோம் என்றனர்.

எல்லா கட்சியுடனும் சேர்ந்து கொண்டு மொத்தமாய் பத்தாயிரம் ஓட்டுக்கள் பெற்று சரித்திர சாதனை (?) நிகழ்த்திய மானெங்கெட்ட பிழைப்புகளுக்கு பிறகாவது திருந்தினார்களா என்றால் இல்லை.

தொடர்ந்து வந்த 2011 சட்டசபை தேர்தலில் அம்மாவே கதி என அடிமை சாசனம் எழுதி, தட்டில் 3 தொகுதி வாங்கி மானம் காக்க புறப்பட்டனர்.

அட மானமுள்ளவர்களா, நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதி என்றால் சட்டசபை தேர்தலில் அது 24 தொகுதிக்கு சமமல்லவா, 24 வாங்க தான் துப்பில்லை, ஒரு 20? அட, ஒரு 15 ? 10 ?

அல்லது குறைந்த பட்சம், ஒரு தொகுதிக்கு நாங்கல் மானமிழக்க மாட்டோம் என்று நீங்கள் வீராப்பு காட்டியபடி பார்த்தால் 1 பாராளுமன்றம் ஆறு சட்டமன்ற தொகுதிக்கு சமம் என்கிற வகையில் ஆறையாவது வாங்கி வந்தீர்களா?
ஒரு தொகுதிக்கு மானமிழக்க முடியாது என்று கோஷமிட்ட நீங்கள் இன்று அரை தொகுதி வாங்கி கேவலப்பட்டு நிற்கிறீர்களே?

என்று கேட்ட போது, இவர்களது சுயமரியாதை சந்தி சிரித்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

இத்தகைய சுய மரியாதை போராளிகள் (?) தற்போது கலைஞர் அய்யாவிடம் மீண்டும் சரணாகதியடைந்து வரும் தேர்தலில் பெற்றுக் கொண்ட தொகுதியின் எண்ணிக்கை அதே ஒன்று !!

நீங்கள் வெட்கமில்லாதவர்கள் என்றால் உங்கள் கெளரவ‌த்தையும் சுயமரியாதையையும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் முஸ்லிம்களுக்காக போராடப்போகிறோம், முஸ்லிம் சமுதாயத்தின் மானத்தை காக்கப் போகிறோம் என்று எங்களையும் சேர்த்து உங்களோடு இழுத்து எம் சமுதாயத்தை கேவலப்படுத்தாதீர்கள்.

இது ஒரு பக்கமிருக்க,
ஒரு தொகுதி வாங்கிய காலமெல்லாம் மலையேறி போச்சு என மானமுள்ள கட்சியின் தமீம் அன்சாரி என்பவரது வீர முழக்கம் உங்கள் பார்வைக்கு..
https://www.facebook.com/photo.php?v=663602047014203&set=vb.558567904155370&type=2&theater

சுயமரியாதை கிலோ எவ்வளவு ? என்று யாராவது கேட்டால் கவனித்துப் பாருங்கள், அது தமுமுக காரனாகத் தான் இருப்பான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக