கர்த்தரின் பெயரால் .. என்று சொல்வது கூடாது என்றும், அப்படியானால் அல்லாஹ்வுக்கு பதில் முருகன், சிவன் என்கிற பெயரையோ பயன்படுத்துவீர்களா? என்றும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.
இது போல் ஒரு மடத்தனமான வாதம் வேறு இல்லை.
கிறித்தவர்கள் கர்த்தர் என்று சொல்வதும் ஹிந்துக்கள் முருகன் என்று சொல்வதும் ஒன்றல்ல.
கர்த்தர் என்பது கடவுள் என்பதன் திரிபு சொல்.
முருகன், சிவன் என்பதெல்லாம் அந்த கடவுளுக்கு இவர்கள் கொடுக்கும் பெயர்.
சரி, இவர்கள் பாணியிலேயே நாம் கேட்கிறோம்,
மனிதன் என்று சொல்வதை போல் ஜனம் என்றும் சொல்லலாம்.. இரண்டும் அர்த்தம் ஒன்று தான்.
இப்போது முருகன் என்றால் அழகன் என்று பொருள், சிவன் என்றால் உயிருள்ளவன் என்று பொருள்.
அழகன் என்றாலும் உயிருள்ளவன் என்றாலும் இரண்டுமே மனிதனை தான் குறிக்கும் என்று ஒரு அறிவாளி ஆய்வு செய்து விட்டு, ஆகவே இன்று முதல் மனிதன் என்று வரக்கூடிய எல்லா இடங்களிலும் முருகன் என்கிற வார்த்தையை நான் பயன்படுத்துவேன் என்று முடிவெடுத்தால் அந்த முடிவின் லட்சணம் என்ன என்பதை சிந்திக்கும் போது இது போன்ற வாதங்களிலுள்ள அபத்தம் நமக்கு விளங்குகிறது.
கர்த்தர் என்பதன் அகராதி அர்த்தமே கடவுள், ரக்ஷிக்கக்கூடியவன் தான். கடவுள் என்றாலும், இறைவன் என்றாலும், எல்லாம் ஒன்று தான்.
முருகன், கந்தன் என்பதெல்லாம் இவர்கள் சூட்டிக்கொண்ட புனைபெயர்கள்.
இவர்கள் இதே வாதப்படி சொல்வதாக இருந்தால் கடவுள் என்றும் சொல்லக்கூடாது என்று கூற வேண்டும். இறைவன் என்றும் சொல்லக்கூடாது என்று சொல்ல வேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக