தன் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை செய்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
வாழ்வில் தான் சந்திக்கும் துன்பங்களை சகித்துக் கொள்ள இயலாமல் போவதால் ஒருவன் தற்கொலை செய்வதில்லை.
மாறாக, அந்த துன்பங்களை தம்மால் சகித்துக் கொள்ள இயலாது என்று அவன் எண்ணுவதால் தான் தற்கொலை செய்கிறான்.
இந்த நுணுக்கமான வேறுபாடு தான் ஒரு இறை நம்பிக்கையாளனை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது.
வாழ்வில் ஏதும் துன்பம் ஏற்பட்டால் அதை நமக்கு வழங்கியிருப்பது நம்மை படைத்த இறைவன் என்று உளமாற நாம் நம்பும் போது, எத்தனை துன்பங்களையும் எதிர்கொள்ளும் துணிச்சலை அந்த ஒரு நொடி இறை நம்பிக்கையே நமக்கு வழங்கி விடும்.
ஒருவரால் சகித்துக் கொள்ளவே இயலாத எந்த துன்பத்தையும் இறைவன் அவருக்கு கொடுப்பதில்லை எனவும்
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்க உதவுகின்றன என்றும்,
இறை நம்பிக்கையுடையவனை, அவனது நம்பிக்கையின் அளவுக்கு ஏற்றவாறு துன்பங்கள் சென்று சேரும் என்று இஸ்லாம் சொல்கிறது.
இவ்வுலக வாழ்வை துச்சமாகவும், மறுமையில் நமக்கு கிடைக்கும் பேறினையே மகத்தானதாகவும் கருதும் ஒருவர், எந்த நிலையிலும் துன்பங்களை எதிர்கொள்வதில் சோர்வடைய மாட்டார்.
தற்கொலை செய்தால் அவன் நிரந்தர நரகத்திற்கு தள்ளப்படுவான் எனும் போது, அந்த நரகத்தை எதிர்கொள்வதை விட, இவ்வுலகில் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்களை எதிர் கொண்டு விட்டு போகலாமே !
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, அதுவும் பெற்றெடுத்த பிள்ளைகளை கூட பலி கொடுக்கும் அளவுக்கு நெஞ்சில் உரம் பெற்றவர்கள், அந்த உரத்தினை, தான் சந்தித்த துன்பத்தை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தக் கூடாதா?
இஸ்லாத்தில் இதற்கு அருமருந்திருக்கிறது என்கிற பேருண்மையை இவ்வுலகம் விளங்கிக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக