செவ்வாய், 18 மார்ச், 2014

தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்


"தற்பெருமை, மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அஹ்மத் 21356

1. கடுகளவு தற்பெருமை இருந்தாலும் நாம் சொர்க்கம் செல்ல முடியாது !

தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் (148

2. மோசடி செய்வது நயவஞ்சகனின் குணமாகும் !

"பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி (33)

3. அது போன்று, கடன் வாங்குவதால் ஒருவன் பொய் சொல்கிறான், நம்பிக்கை துரோகம் செய்கிறான் என்று நபியவர்கள் சொன்னார்கள் (பார்க்க புஹாரி 2397)

பிறருக்கு கெடுதல் செய்து அதை சரி செய்யாமலேயே இறந்து போனவர் நாளை மறுமையில் திவாலாக போவார் என்றும் பெருமானார் (சல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (பார்க்க முஸ்லிம் 5037)

கடனாளியாக இறந்து விட்ட ஒருவருக்காக ஜனாசா தொழுகை கூட நபியவர்கள் நடத்தவில்லை (பார்க்க புஹாரி 2289)

ஏகத்துவக் கொள்கையில் இருப்பவர்களை இணை வைப்பின் மூலம் இனி ஷைத்தானால் வழி கெடுக்க முடியாது என்கிற போது, அவன் கையில் எடுக்கும் ஆயுதம் இந்த மூன்று தான் !
இதில் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக