கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் வேறு எதையோ பதிலாக சொல்வது என்று பொழுது போக்காய் சிலர் விளையாடுவர்.
காலையில் என்ன சாப்பிட்டாய் ? என்று கேட்டால் இந்த சட்டை நீல கலர் என்று பதில் சொல்ல வேண்டும்.
நேற்று பள்ளிக்கூடம் போனாயா? என்று கேட்டால் ரசத்தில் உப்பில்லை என்று பதில் சொலல் வேண்டும்.
கிட்டத்தட்ட, இது போன்ற ஏறுக்கு மாறான பதில்களை தான் தவ்ஹீதுக்கு எதிரானவர்கள் நமக்கு தந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் வைக்கும் கேள்வியையும், அவர்கள் அதற்கு சொல்லும் விடையையும் எந்த காலத்திலும் பொருத்தவே இயலாது !
((இந்த கேள்வியும் பதிலும் உண்மையாகவே இணை வைப்பாளர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினருடனான விவாதங்களின் போது சொன்னது தான் !!))
கேள்வி : மத்ஹப் என்கிற பெயரில் இவ்வளவு அசிங்கங்களை எழுதி வைத்துள்ளீர்களே, இதை எப்படி பின்பற்றுவது ?
பதில் : இவர்கள் இமாம்களை இழிவுப்படுத்துகிறார்கள்
கேள்வி : வஹீ மட்டும் தான் மார்க்கம், சஹாபாக்களுக்கு வஹீ வருமா?
பதில் : சஹாபாக்களை இவர்கள் திட்டுகிறார்கள்
கேள்வி : மவ்லூத் என்கிற பெயரில் இணை வைப்பு பாடல்களை பாடுகிறீர்களே, இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கா?
பதில் : நபி (ஸல்) அவர்களை புகழ்வது குற்றமா?
கேள்வி : மீலாது விழா நபி காலத்தில் இருந்ததா?
பதில் : நபியை புகழ்ந்தாலே இவர்களுக்கு பிடிக்காது !
கேள்வி : இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு என்ன ஆதாரம் ?
பதில் : டாக்டரிடம் மருத்துவத்திற்கு செல்கிறோமே !
கேள்வி : செத்துப் போனவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் ?
பதில் : இறை நேசர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
கேள்வி : தர்கா கட்டலாம் என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில் : மூசா நபி தன் கப்ரில் தொழுததை நபி (சல்) அவர்கள் மிஹ்ராஜின் போது பார்த்தார்கள்.
கேள்வி : ஒற்றுமையாக இருக்க சொல்லி குர் ஆனில் எங்கே சொல்லப்பட்டுள்ளது ?
பதில் : அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி : சூனியத்தால் எத்தகைய அற்புதத்தையும் நிகழ்த்த முடியும் என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில் : சூனியத்தின் மூலம் கணவன் மனைவியை பிரிக்கலாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.
புஹாரி, முஸ்லிம் போன்ற கிதாபுகளிலும் பல தவறான செய்திகள் உள்ளதே, இதற்கு என்ன சொல்கிறீர்கள் ?
பதில் : அப்படியானால் புஹாரி இமாம் காஃபிரா?
கேள்வி : கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப சகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில் : எந்த இமாமாவது இதை சொல்லியிருக்கிறாரா?
கேள்வி : மார்க்கம் என்கிற பெயரில் தொப்பி அணிதல், இன்னும் நபி காட்டித்தராத ஏராளமான காரியங்களை செய்கிறீர்களே, இவை பித் அத் இல்லையா?
பதில் : பிறகு ஏன் நீங்கள் காரில் பயணம் செய்கிறீர்கள் ?
கேள்வி : இரவுத் தொழுகை 20 ரக்காஅத் என்று நிர்ணயம் செய்திருக்கிறீர்களே, இதற்கு நபியின் வழிகாட்டுதல் உண்டா?
பதில் : அதிகமாக தொழுதால் தவறா?
கேள்வி : அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் ?
பதில் : அவனைப் போல எதுவும் இல்லை
அனைத்தையும் விட ஹைலைட் இதோ..
கேள்வி : எங்கிருந்து, எத்தனை பேர் அழைத்தாலும் அவ்லியா கேட்டு பதில் சொல்வார் என்பதற்கு என்ன ஆதாரம் ?
பதில் : கூகுளில் எத்தனை பேர், ஒரே நேரத்தில் சேர்ச் செய்தாலும் விடை தருகிறதல்லவா !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக