புதன், 19 மார்ச், 2014

கேரளாவில் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு


கேரளாவில் மாநில அளவில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் முஸ்லிம் லீக் இருக்கிறது, 

காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பிறகு, மூன்றாவது பெரிய கட்சியாக திகழும் முஸ்லிம் லீகை ஆதரித்தால் 25% முஸ்லிம் ஜனத்தொகையை கொண்ட அம்மாநிலத்தில் இஸ்லாமிய ஒற்றுமை தழைத்தோங்கும் தானே?

இஸ்லாமியர்களின் முன்னேற்றம், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு, முஸ்லிம் ஒற்றுமை என்று வாய் கிழிய பேசும் எஸ்டிபிஐ என்கிற இஸ்லாமிய துரோகிகள் தங்களை நேர்மையாளர்களாக காட்ட எண்ணினால், அங்கே முஸ்லிம் லீகிற்கு முழு ஆதரவை அளித்திருக்க வேண்டும். செய்தார்களா?

மாநிலத்தின் மொத்த பாராளுமன்ற தொகுதிகளான 20 தொகுதிகளிலும் முஸ்லிம் லீகிற்கு எதிராக தனித்து போட்டியிடப் போவதாக அறிவிப்பு செய்து தங்கள் அரசியல் சுய நலனை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

தமிழகத்தில் அந்த தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்காக விட்டுக் கொடுத்தோம், இந்த தொகுதியில் மமகவுக்கு விட்டுக் கொடுத்தோம் என்று படம் காட்டித் திரிவதெல்லாம் மக்களை ஏமாற்றி ஓட்டுப் பொறுக்க இவர்கள் நடத்தும் கபட நாடகமேயன்றி வேறில்லை.

இவர்களுக்கு ஒத்து ஊதும் மானங்கெட்ட தமுமுகவினருக்காவது, முதலில் நீ கேரள முஸ்லிம் லீகிற்கு ஆதரவு கொடு, பிறகு இங்கே வீர வசனம் பேசு, என்று எச்சரிக்கும் முதுகெலும்பு இருக்கிறதா?

அதுவும் இல்லை, ஏனெனில் இவர்கள், எஸ்டிபிஐயினரையும் விஞ்சுகிற சுய நலவாதிகள் !

சமுதாய ஒற்றுமை, சமுதாய அக்கறை, மண்ணாங்கட்டியெல்லாம் இவர்கள் விடும் வெற்று சவடால்கள் என்பதையும், ஓட்டுப் பொறுக்கி பதவி சுகம் பெற வேண்டும் என்பது மட்டும் தான் இவர்கள் இலக்கு என்பதையும் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக