சவால் என்றால் இவர்கள் எதற்கெடுத்தாலும் சவால் விடுவார்கள் என்கிறார்கள் ;
விவாதிக்க தயாரா? என்று கேட்டால் விவாதம் செய்வதே இவர்களுக்கு பிழைப்பு என்கிறார்கள் ;
சரி, நீ எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவிப்பு செய்து விட்டு பின் எனது கேள்விகளுக்கு விடை சொல்லத் தயாரா? என்று கேட்டால் எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்கள்.
இப்படி நாம் எவ்வளவு முயற்சித்தாலும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டமெடுக்கும் அதி புத்திசாலிகள் தான் நாம் கண்டு கொள்ளாத மற்ற இடங்களில் நம்மை விமர்சனம் செய்து வருகின்றனர்.
ததஜவின் அரசியல் நிலைபாடு தவறு என்று கூறும் யாரானாலும் எங்களுடன் பேச முன் வரட்டும்.
இது தான் எனது நிலை, இது தான் சரி, இந்த கட்சிக்கு ஆதரவளிப்பது தான் நன்மை பயக்கும், அல்லாமல் ததஜவின் நிலைபாடு தவறு என்பதாக பேச எவர் முன்வருகிறாரோ அவரை இங்கே அழைத்து வாருங்கள்.
அதிமுகவும் இஸ்லாத்திற்கு ஆதரவானவர்கள் இல்லை என்பதும், அவர்களிடமும் ஏராளமான குற்றங்குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.
இருப்பினும் தற்போதைய சூழலில் அதிமுகவை ஆதரிப்பது தான் சரி என்று, அனைவருமே ஒப்புக் கொள்ளும் வகையில் எங்களால் நிரூபிக்க முடியும், இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டு அதிமுகவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருக்கும் யாரிடமும் முரண்பாடும் மார்க்கத்திற்கு எதிரான காரியங்களும் பெருமளவில் நிரம்பி நிற்கின்றன என்பதும் நிரூபிக்கப்படும் !
கண்ணியமாக பேசுவோருடன் அதே கண்ணியம் பேணப்படும்.
அதே சமயம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்க விஷயங்களில் நூறு சதவிகிதம் சரி ஒரு பக்கமும் நூறு சதவிகிதம் தவறு இன்னொரு பக்கமும் இருப்பது போல் அரசியல் நிலைபாடுகளில் அவ்வாறு பிரித்தறிய இயலாது.
அரசியல் என்பதே ஒரு சாக்கடை என்பதை ஒப்புக் கொண்டு, அதன் வரம்புகளில் நின்று கொண்டு தான் நாம் எவரையும் ஆதரிப்போம் ;
நாம் ஆதரிப்பவர்கள் ஆதரிப்பதற்கு நூறு சதவிகிதம் தகுதியானவர்கள் என்று யாரும் நம்பவில்லை, அப்படி நம்பவும் கூடாது !
மறுமையை இலக்காக கொண்டவர்களுக்கு இவையெல்லாம் அற்பத்திலும் அற்பமானவை ! இதை புரிந்து செயலாற்றுவோம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக