வியாழன், 13 மார்ச், 2014

அற்புதங்களுக்கு துஆ செய்வோம்


இறை நம்பிக்கை அதிகமிருப்பதாய் வாயால் சொல்கிறோம், ஆனால் நம்மில் பலரது நடவடிக்கையானது, அந்த நம்பிக்கையின் முழு பரிணாமத்தையும் கொண்டிருக்கிறதா? என்றால் இல்லை !

நம் தகுதியை மீறி நாம் பிரார்த்தனை செய்யக்கூடாது என்று நாம் நினைக்கிறோம்.

மனித சக்திக்கு உட்பட்டு எவையெல்லாம் சாத்தியம் என்று நாம் கருதுகிறோமோ அந்த வரைமுறையை தாண்டி நாம் என்றைக்காவது இறைவனிடம் கோரிக்கை வைத்திருக்கிறோமா?

வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் நாம், ஊரில் நமது கடன்கள் எல்லாம் தீர வேண்டும், நான் கட்டிக்கொண்டிருக்கும் வீடு அதிக செலவில்லாமல் முடிந்து விட வேண்டும் என்கிற குறுகிய வட்டத்துடன் துஆ செய்து முடித்துக் கொள்கிறோம்.

நான் வேலை செய்யும் நிறுவனம் போல் ஒரு நிறுவனத்தை நான் துவங்க வேண்டும் என்று நாம் பிரார்த்தித்திருக்கிறோமா? இல்லை !

80 வயதில் நம் பெற்றோர் சக்கராத் நிலைக்கு சென்றால், அது தான் 80 வயது ஆகி விட்டதே , இனி இறப்பது தானே அல்லாஹ்வின் விதி என்று நாமாக ஒரு வட்டத்தை வைத்து, அதன் பிறகு 100 வயது வரை வாழ வை என்று யாருமே துஆ செய்வதில்லை.
ஏன், அல்லாஹ் நாடினால் ஒருவருக்கு 200 ஆண்டுகள் கூட ஆயுள் வழங்க முடியாதா?

குழந்தையில்லாத சகரிய்யா நபி தள்ளாத வயதில் துஆ செய்ததை அல்லாஹ் 19:3 வசனத்தில் சொல்கிறான்,

தகுதியை மீறிய பிரார்த்தனை என்று தான் நாம் இதை கருதுவோம், ஆனால் அல்லாஹ் இதற்கும் பதிலளித்தான் என்றால் நமக்கு வியப்பாக இருக்கிறதல்லவா!

மனித சக்திக்கு உட்பட்டதை தான் அல்லாஹ்விடமும் கோரிக்கையாக வைப்பேன் என்றால் அப்படி ஒரு இறைவன் நமக்கு அவசியமேயில்லையே?

மனிதனுக்கு இயலாத, அவன் கற்பனையில் கூட அடங்காத அற்புதங்களை நிகழ்த்தும் பேராற்றல் கொண்டவன் தான் நம்மைப் படைத்த இறைவன் !

அற்புதங்களுக்கு துஆ செய்வோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக