இன்று உயரிய பல பதவிகளை வகிப்போரும், கை நிறைய பணம் சம்பாதிப்போரும் தங்கள் பிளஸ்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இல்லை.
மதிப்பெண்களுக்கும் வருங்காலத்தில் நாம் அடையப்போகும் இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இன்றைய சமூக சூழல் நமக்கு கற்றுத் தருகிறது.
இதை இன்றைய பெற்றோரும் புரிய வேண்டும், புரிவதோடு அதையே தங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைக்கவும் வேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்தால் மன உளைச்சல் அடைவதற்கு காரணம், தமது வாழ்க்கையே இத்தோடு இருண்டு விட்டது என்று அவன் எண்ணுவதால் தான்.
இந்த எண்ணத்தில் சிறு அளவு தான் அவன் சுயமாக சிந்தித்து முடிவுக்கு வந்தது.
மீதமுள்ள பெரும் பகுதியானது, பெற்றோர், உற்றார், உறவினர்,ஆசிரியர்கள் போன்ற்றோரின் மனப்போங்கினாலும் அவர்கள் தரும் அழுத்தத்தினாலும் தான் ஏற்படுகிறது.
மிக அதிக மார்க் வாங்கினால் மருத்துவராகவோ பொறியாளராகவோ மட்டும் தான் ஆகலாம்.
மார்க் குறைவாக எடுத்தால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். எதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதே இன்றைய நிதர்சன உண்மையாக இருக்கிறது !
இதை பெற்றோரும் தேர்வை எழுதி முடித்த மாணவர்களும் மனதில் கொண்டால் தேர்வில் அடையும் தோல்வி அதிகம் பாதிக்காது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக