வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 1

Nashid-ன் ஒரு உண்மையான நபி, அப்பழுக்கற்ற சித்தாந்தங்களை எடுத்து வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில்.....

முழு உலக முஸ்லீம்கள், அனைத்து கிறிஸ்தவர்களை போன்றே ஈஸா நபி உயிருடன் இருக்கிறார், அவரே திரும்பவும் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஹஸ்ரத் அஹ்மத் அவர்கள், ஈஸா நபி மரணித்துவிட்டார் என்று கூறியதுடன், ஆதாரபூர்வம் நிரூபித்துக்காட்டி உள்ளார்கள்.. இது அப்பழுக்கற்ற சித்தாந்தமாக தெரியவில்லையா? 

திருக்குரானின் அடிப்படையில், ஹதீஸின் அடிப்படையில், பைபிளின் அடிப்படையில் ,science ன் அடிப்படையில், மருத்துவத்தின் அடிப்படையில், தொல்பொருள் ஆராய்ச்சியின் அடிப்படையில், வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என நிரூபித்து காட்டினார்கள் என்பது மட்டுமல்ல, இறைவன் மீது ஆணையிட்டு கூறி, அறை கூவல் விடுத்தார்கள் என்றால் ஹஸ்ரத் அஹ்மத் அவர்களின் இந்த சித்தாந்தம் அப்பழுக்கற்றது என்று புரியவில்லையா?

உலகில் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள், நபியாகவும், கடவுளாகவும் ஈஸா நபியை மதித்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல அவரே உயிருடன் வருவார் எனவும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் , அந்த ஈஸா இறந்துவிட்டார், அவர் மீண்டும் வரமாட்டார் என்று ஒரு சாதாரண மனிதரால் கூற முடியும் என்று கற்பனையில் கூட செய்து பார்க்க முடியுமா?

அல்லாஹு ஒருவனே உயிருடன் இருப்பவன் என்ற அடிப்படை தவ்ஹீதுக்கு எதிராக, ஈஸா உயிருடன் இருக்கிறார் என்ற உலகளாவிய ஷிற்கான கொள்கையை உடைத்தெறிந்தது அப்பழுக்கற்ற சித்தாந்தம் இல்லையா? 

முழு உலகிலும் பரவியுள்ள மூட நம்பிக்கை, பிதுஅத் , ஷிர்க் போன்ற அனைத்திற்கும் மூல காரணமானஈஸா உயிருடன் இருக்கிறார் என்றநம்பிக்கையை தகர்த்தெறிந்து தவ்ஹீதை நிலை நாட்டி உள்ளார்கள் என்பது , தவ்ஹீது வாதம் பேசுபவர்களுக்கு இன்னும் புரியாதது ஏன்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக