வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (C)


Date 09/05/2014 தொடர் – 4 பாகம் - 1 
அன்புள்ள nashid , உன் 4 ஆவது தொடரில் 
நீ என்னிடம் கேட்காத விஷயங்களை கேட்டதாகவும் , இப்போது 5 ஆவது தடவை கேட்பதாகவும் எழுதுகிறாய். நேர்மையான எழுத்தாக தெரியவில்லை.

1 )
நீ எழுதிஉள்ளாய் : “ஹதீஸ்களில் ஈஸா நபி இவ்வுலகிற்கு மீண்டும் வருவார்கள் என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது, குர் ஆனுடன் சேர்த்து ஹதீஸையும் நம்புகிறேன் என்று சும்மா பொய் சொல்கிறீர்களா அல்லது நிஜமாகவே ஹதீஸ்களையெல்லாம் ஏற்பவர் தானா நீங்கள்?” என்பது நான் பலமுறை எழுப்பி வரும் கேள்வி. 

என் பதில் : a ) நாம் குரானை பின்பற்றவேண்டுமா or ஹதீஸை பின்பற்றவேண்டுமா என்றா விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் இந்த புது கேள்வி ?

.
ஆரம்பத்திலிருந்தே ஈஸா நபி மரணித்து விட்டார் என்று தெளிவான 5 குரான் வசனங்களை எடுத்து வைத்தேன். நீ அந்த வசனங்களுக்கு குதர்க்கமாகவும் , காய்ந்து போன கருத்துக்களையும் ,உலகில் உள்ள ஆட்களையூம், உதாரணம் காட்டி இத்தனை நாள் வீணடித்து உள்ளாய். 

ஒரு வசனமாவது ஈஸா உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைத்தாயா ? 

b )
குரானையும் ஹதீசையும் ஏற்றுக்கொள்வேன். அதில் சந்தேகம் வேண்டாம். 
ஆனால் குரானில் ஈஸா மரணித்து விட்டார் என்று தெளிவாக கூறியிருக்கும்போது , நீ எப்படி ஈஸா உயிரோடு இருக்கிறார் , உயிரோடு இருக்கிறார் என்று சொல்லுவாய்?

அப்படி என்றால் குரான் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? 

(
குரான் 47.24) , அவர்கள் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா ? அல்லது அவர்களது உள்ளங்கள் உள்ளிருந்தே பூட்டப்பட்டிருக்கின்றனவா? –என்ற வசனத்தை சிந்தித்து பார் ! ============================================================
2 )
நீ எழுதி உள்ளாய் : “ முஹம்மது நபிக்கு பிறகு இன்னொரு நபி வருவார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டிருந்தேன் பதில் இன்னும் வரவில்லை. (உங்கள் தொடர்கள் 5, 6 இலும் இல்லை !)”

என் பதில் : நான் (ஏப்ரல் 26 ,, தொடர் 3) இல் நபிக்கு பிறகு நபி வருவார்கள் என்பதற்கு சான்றாக , ( குரான் 7.36 ) ”ஆதமின் மக்களே! என் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்ட கூடிய தூதர் உங்களிடமிருந்தே உங்களிடம் நிச்சயமாக வரும்போது இறையச்சத்தை மேற்கொண்டு திருந்தி கொள்பவருக்கு எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் கவலை அடையவும் மாட்டார்கள்..” என்ற வசனத்தை எடுத்து வைத்தேன். 

அதற்கு உன் பதிலில் (ஏப்ரல் 27, , தொடர் 3 இல்), நீ இவ்வாறு எழுதி உள்ளாய், “மிர்சா சாஹிப் நபி தான் என்பதற்கு என்ன சான்று என்று கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக உங்களிடம் கேட்டு வருகிறேன். 
பதில் என்கிற பெயரில் 7:36 வசனத்தை காட்டுகிறீர்கள். 

அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை பேணி நடப்போருக்கு அச்சமில்லை என்று இதில் அல்லாஹ் சொல்கிறான். இதிலிருந்து, மிர்சா சாஹிப் தான் அல்லாஹ்வின் நபி என்று எப்படி நிரூபணம் ஆகிறது என்பதை விளக்குங்களேன். “ 

என் பதில் :நான் மிர்சா சாஹிப் க்கு ஆதாரமாகவா இந்த வசனத்தை எழுதினேன் ? நபிக்கு பிறகு நபி வருவார்கள் என்பதற்கு சான்றாகத்தானே இந்த வசனத்தை எழுதினேன் . 
ஆனால் நீயோ வெறும் குதர்க்கத்திலும் , கிண்டலிலும் நேரத்தை வீணாக்குகிறாய். 
இதற்கு என்ன காரணம்? நபிக்கு பின் நபி வரமாட்டார்கள் என்பதற்கான ஒரு வசனமும் உன்னிடம் இல்லை என்பதுதான். ============================================================
3 )
மிர்சா சாஹிப் விஷயம் : நான் பல தடவை எழுதினேன், குரான் , ஹதீஸ், மிர்சாசாகிப் நூல்கள் ,இவற்றிலிருந்து ஆதாரம் காட்டும்போது , பக்கம் மட்டும் எழுதினால் போதாது, முழுமையாக எழுதி ,உன் ஆட்சேபனைகள் மற்றும் சந்தேகங்களை கேட்டால் பதில் எழுதுவேன் என்று. 

அதற்கு நீமிர்சா சாஹிபின் நூல்களை நான் நேரடியாக படிக்க வேண்டும் எனவும் அவரது நூலிலிருந்து மேற்கோள் காட்டும் போது வாசகத்தை அப்படியே தர வேண்டும் எனவும் கேட்டுள்ளீர்கள். இது உங்கள் கொள்கை பலகீனத்தையே காட்டுகிறது. “

என் பதில் : இன்று குரானுக்கு தர்ஜுமாக்கள், தப்சீர்கள் என்று வருடா வருடம் புதுசு புதுசா வந்து கொண்டிருக்கும்போது, நீ எந்த தர்ஜுமாவிலிருந்து எந்த கருத்தை எடுத்து வைத்து பேசுகிறாய் என்பது எனக்கு என்ன தெரியும்? உனக்கு கிண்டல் பண்ண மட்டும் தான் தெரியுமா?

இது வரையிலும் ஒரு குரான் வசனத்தையாவது முழுமையாக எழுதி உள்ளாயா? ஏன் , குரான் மீது உனக்கு நேசமே இல்லையா? இது விவாதத்திற்குரிய அழகா ? 

எல்லா காலத்திலும் நபிமார்களை ,அந்தந்த காலத்து ஆலிம்கள் பொய் படுத்தியது போல் இக்காலத்திலும் பொய் படுத்துகிறார்கள். நீயோ அந்த ஆலிம்கள் எழுதி வைத்த ஆட்சேபனைகளை எனக்கு எழுதுகிறாய். இது உனமையை அறிவதற்கான அளவு கோலா? Or விவாதத்திற்கான முறையா? 
எதிரிகள் மிர்சா சாகிபின் நூல்களிருந்து முன் பின் கருத்துகளை சொல்லாமல், இடையில் உள்ள விஷயங்களை மட்டும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற விஷயத்தை முன்னர் நான் குறிப்பிட்டுள்ளேன். 
எனவே எதிரிகளின் கருத்துக்களை உள் வாங்கிக்கொண்டு நீ ஆட்சேபிப்பது ஆரோக்யமான விவாதம் ஆகாது. , மாறாக மிர்சா சாஹிப் மீதுள்ள வெறுப்பை மட்டுமே காட்டுகிறது . ============================================================
4 )
உனது 27 தேதி பதிப்பில் மிர்சா குலாம் சாஹிப் எப்படி நபி ஆனார் ? என்று ஒரு கேள்வி எழுப்புகிறாய். 

நீ உண்மையாகத்தான் கேட்கிறாய் என்று எண்ணி நானும் பதில் எழுத முற்பட்டால் அடுத்த நாளே , மிர்சா சாகிபை பற்றி தூற்றி எழுதுகிறாய். இப்படியா விவாதம் செய்வது ? 

எனவே, இப்போது நான் கேட்கிறேன் , முதலில் முஹம்மத் ஸல் எப்படி நபி ஆனார் ? என்பதற்கு நீ முதலில் பதில் எழுது, 
அப்போது உனக்கு புரியும், உன் கேள்வியும் உன் பதிலும் பொருத்தமற்றவை என்று……

09/05/2014 தொடர் - 4 பாகம் - 2 
அன்புள்ள nashid 
(
முந்திய தொடர் 4 இன் , பாகம் 1 இன் தொடர்ச்சி )

5 )
எனக்குள் அல்லாஹு புகுந்து விட்டான், நானே அல்லாஹு என்றெல்லாம் மிர்சா சாஹிப் சொன்னதற்கு என்ன பொருள் என்று கேட்டுள்ளாய் . 

என் பதில் : a ) விவாதத்திற்கான ஒழுங்கு முறையின் படி நீ எந்த ஆட்சேபனைகளையும் , முழுமையாக ஆதாரத்தோடு எடுத்து வைத்தால் நான் பதிலளிப்பேன் ..

B ) கருத்தை புரிய வைப்பதற்காக ஒரு விஷயத்தை கூறுகிறேன் . suppose என்னை வைத்துக்கொள். நான் குமார் என்ற ஹிந்து சகோதரருக்கு 6 மாதங்களாக தப்லீக் பண்ணிக்கொண்டு வருகிறேன்

அவரோ சிலை வழிபாடு உடையவர். மேலும் மோசமான பழக்கமும் கொண்டவர். பல மாதங்களாக நான் அவரை தப்லீக் செய்தும், உபதேசம் செய்தும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.
தொடர்ந்து துஆ செய்து கொண்டிருந்த நான் ,மிகவும் நொந்து போய் விட்டேன்
அன்றிரவு நான் தூங்கும்போது ஒரு கனவு கண்டேன்
அதில் நான் கத்தியால் அந்த குமாரை குத்தி கொன்று விடுகிறேன். இவ்வாறு கனவு கண்டு விழித்த பின் , முதலில் எனக்கு கவலையாக இருந்தது, பின்னர் எனக்கு புரிந்தது, இது ஒரு நல்ல கனவு , தொடர்ந்து குமாருக்கு தப்லீக் பண்ணினால் அவனிடம் மாற்றம் ஏற்படும், எனவே அவனை குத்துவது என்று கனவில் வந்ததன் பொருள், ‘அவனுடைய தீமைகள் அவனை விட்டு அகலும்என்பது தான் என்று என் மனதில் தோன்றியது
அதனடிப்படையில் அவனுக்கு தொடர்ந்து தப்லீக் மற்றும் , வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருந்தேன் .. 

கடைசியில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி , பின்னர் இஸ்லாத்தில் இணைந்தான். இந்த சம்பவத்தை வைத்து நான் 100 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் வெளியிட்டேன்

இந்த புத்தகத்தை படித்த என் நண்பர்கள் என்னை பாராட்டினார்கள். குமாரை நான் தீமையிலிருந்து காப்பாற்றி விட்டேன் என்றும் , அல்லாஹு எனக்கு கனவு மூலம் காட்டி தராவிட்டால், நான் என் முயற்சியை கை விட்டுருப்பேன் ; ஆனால் அல்லாஹு எனக்கு உதவி செய்தான், எனவே தான் நான் குமாருக்கு தொடர்ந்து வழிகாட்டினேன், என்றெல்லாம் கூறி என் நண்பர்கள் என்னை பாராட்டினார்கள்

ஆனால் என் விரோதிகளோ , அந்த புத்தகத்திலிருந்து முன் பின் உள்ளதை விட்டு விட்டு , “நான் குமாரை குத்தினேன்என்ற வாக்கியத்தை பிடித்துக்கொண்டு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்

நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன், உண்மையில் நான் குமாரை கொல்லவில்லை; அவ்வாறு நான் எழுதி உள்ளது கனவை பற்றி தான் என்று. எவ்வளவு தான் சொன்னாலும் அந்த தீயவர்கள் தூற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

Nashd, மேலே குறிப்பிட்டது போன்று நான் ஒரு நூல் வெளியிட்டால், அதனை நீ முழுமையாக படிக்காவிட்டால் , நீ என்னை பற்றி என்ன சொல்வாய் என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்

============================================================

C .) நீ எழுதி உள்ளாய்: ( குரான் 8.18 ) “நீர் எறிந்த போது உண்மையில் நீர் எறியவில்லை, அல்லாஹ் தான் எறிந்தான் என்று அல்லாஹ்வே சொல்வதும், நான் தான் அல்லாஹ் என்று ஒரு மனிதன் சொல்வதும் சமமா??”

என் பதில் : குரான் எல்லா மக்களுக்கும் வழி காட்டக்கூடியது , மேலும் நபி ஸல் அவர்களும் எல்லோருக்கும் அருட்கொடையாகவும் வழிகாட்டவும் வந்தவர்கள். குரான் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கிறது

நீ இப்போது ஒரு யூதனிடம் இறை அழைப்பு விடுக்கிறாய். அவன் முதலில் உன்னிட கேட்கக்கூடிய கேள்வி என்ன தெரியுமா ?

உங்கள் நபியை பேச வந்துவிட்டீர்களா, யுத்த களத்தில் அல்லாஹு எப்படி நுழைந்தான் ? என்று முதலில் சொல்லு

ஏன் அவன் அப்படி கேட்டான் தெரியுமா

நீ ஒவ்வொரு தொடரிலும்பொய்யையே மூலதனமாக கொண்ட மிர்சா சாஹிப்என்று கூறி உள்ளது போன்றே, அந்த யூதனும் நபி ஸல் மீதும் அதே கருத்தை தான் கொண்டிருந்தான் 

எனவே விவாதத்தின் 3- ஆவது விஷயமான மிர்சா சாஹிப் பற்றி எந்த ஆட்சேபனையையும், ஒருவருக்கொருவர் விவாதிக்கவே இல்லை, இப்படியிருக்க
அவர் பொய்யையே மூலதனமாக கொண்டவர் என்று நீ திரும்ப திரும்ப சொல்கிறாய்
எனவே நீ வெறுப்புடன் பார்க்காமல் நடு நிலைமையோடு பார்த்தால் தான் ,உண்மையை புரிந்து கொள்ள முடியும். ============================================================
ஏன் 3 சப்ஜெக்ட்- வரிசையாக பேசவேண்டும் ?

பதில் : a ) இப்போது ஒரு கிறிஸ்தவனிடம் சென்று நபி ஸல் பற்றியும் , குரானை பற்றியும் நேரடியாக தப்லீக் செய்தால் , அவன் ஏற்றுக்கொள்ளாமட்டான்
1000 க்கணக்கான ஆட்சேபனைகளை அவர்கள் குரான் மீதும் நபிசல் மீதும் வைத்துள்ளார்கள் என்பதை என்னால் கூற முடியும்

எனவே கிறிஸ்தவனிடம் , முதலில் அவனுடைய கடவுள் நம்பிக்கையான ஈஸா நபியை பற்றி பேச வேண்டும்

ஈஸா உயிரோடு இருக்கிறார் , எனவே அவர் உலக இரக்சகர் என்று நம்பி உள்ளார்கள். அவர்களின் ஈஸா மரணித்து விட்டார்கள் என்று bible இன் அடிப்படையில் ஆதாரம் காட்டி நிரூபித்து விட்டால் , அங்கே ஈசாவை வணங்கிய ஷிர்க் உடைந்து விடுகிறது

அவர்களின் அடுத்த நிலை என்ன? நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் வேறு வழி இல்லை

b) இப்போது யூத சகோதரனிடம் சென்று , நபி ஸல் பற்றியும் , குரானையும் பற்றியும் எடுத்து சொன்னால் அவர்கள் நம்புவார்களா ?
நிச்சயம் மாட்டார்கள் .
ஆனால் அவர்களிடம் சென்று , அவர்களுடைய இறுதி நபி கொள்கையை பற்றி பேசவேண்டும்
அவர்கள் மூஸா நபிக்கு பிறகு நபி வரமாட்டார்கள் என்று உறுதியான நம்பிக்கை உடையவர்கள்
எனவே அவர்களின் நபிக்கு பிறகு நபி வரமாட்டார்கள் என்ற கொள்கையை தவறு என்று நிரூபித்து விட்டால் , அவர்கள் ஈசாவை பற்றி கேட்பார்கள் . ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பது தான் அவர்களின் நம்பிக்கை . எனவே அவர்கள் நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் வழி இல்லை.

C ) எனவே ஒரு நபியை மறுப்பதும் ( மறுத்து இறைவனின் கோபத்திற்கு ஆளாவதும்), ஒருநபியை அதிகமாக நேசித்து உயிருடன் இருப்பதாக நம்பி இறை பண்பை கொடுப்பதும் ( வழிகேட்டில் செல்வதும் ), 
எக்காலத்திலும் உள்ள நடைமுறையாகும்
எனவே தான் சூரா ஃபாத்திஹாகடைசி வசனம் ஆன ஹைரில் மளூபி அலைஹிம் walallalleen என்ற துஆ கற்று தரப்பட்டுள்ளது . இந்த சூரா ஃபாத்திஹாஇன் இந்த துஆ நமக்கு இதை தான் கற்று தருகிறது

நபி ஸல் அவர்கள் புகாரி 3455 ஹதீஸை , இந்த முஸ்லிம் உம்மத்திற்கு எச்சரிக்கையாக கூறி உள்ளார்கள். ============================================================

எனவே 1)ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்ற சப்ஜெக்ட் முடித்துவிட்டு 
2) நபிக்கு பின் நபி வருவார்கள் என்ற சப்ஜெக்ட் முடித்துவிட்டு 
3) மிர்சா சாஹிப் விஷயத்தை பேசுவோம்.
இத்துடன் என் எல்லா பதிலும் முடிந்தது. உனது பதிலை எதிர்பார்க்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக