வியாழன், 22 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (D)


அன்புள்ள nashid க்கு,

1) “நீ எழுதி உள்ளாய்: வழிகேட்டில் சென்றவர்களை அல்லாஹ் மென்மேலும் தவறிழைக்க தான் செய்வான் “

என் பதில்:

a) அல்லாகுவின் நபியை ஏற்றுக்கொண்டவர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹு எங்கே சொல்கிறான்? குரானுக்கு தவறான பொருளை உங்களுக்கு கற்று தந்தது யார்?

குரானின் வசனங்களை, பாதியை மறைத்து, முழுமையாக எழுதாமல், தன் விருப்பம்போல் சொந்த கருத்தை வைத்து பொருள் கொள்ள வேண்டும் என்று உனக்கு கற்று தந்த வழிகேடர்கள் யார்?

நபி என்று வாதித்தவரை, கேள்வி மேல் கேள்வி கேட்டு, தூற்றி இழிவு படுத்துங்கள் என்று குரானில் அல்லாஹூ எங்கேயாவது சொல்லி இருக்கின்றானா?

ஆனால் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களை, நிராகரிப்பவர்கள் என்று பெயர் சூட்டியது மட்டும் இல்லாமல், அவர்களை பல விதங்களில் அழித்துள்ளதாக, திரும்ப திரும்ப அல்லாஹு சுட்டி கட்டவேண்டிய தேவை என்ன?

============================================================
2) ( குர்ஆன் 16: 21,22 ) “அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணம் அடைந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்ல. மேலும் எப்போது எழுப்பப்படுவர் என்பதனை கூட அவர்கள் அறிவதில்லை.”

இப்போது நீ கூறியுள்ள ஆர்க்கிமிடீஸ் கணக்கை பார்போம்.

நான் மேலே உள்ள வசனத்திற்கு தெளிவாக விளக்கம் தந்த பிறகும், நீ மீண்டும் சாய்பாபாவை இழுத்திருப்பது உனது சிந்தனை திறன் வெறும் பூஜியம் என்பதை காட்டுகிறது.

மேலும் மறுப்பதையே குறிக்கோளாக கொண்டு, ஆர்க்கிமிடீஸ், சாக்ரடீஸ், என்றெல்லாம் ஒப்பிட்டுள்ளாய்.

அந்த எல்லா தத்துவங்களை விட அற்புதமான தத்துவங்களை உள்ளடக்கியது தான் குரான் என்பதை நினைவில் கொள்.

அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்கள், என்று சொல்லும்போது, அதில் உனது கருத்தின் படி சாய்பாபா, அமிர்தானந்தமாயி எல்லோரும் வருகிறார்கள், ஆனால் இவர்கள் இறக்கவில்லையே, என்பது உனது கேள்வி.

எந்த மக்களாவது, சாய்பாபா, அமிர்தானந்தமாயி போன்றோர்கள் 1000, 2000 வருடங்கள் உயிரோடு இருப்பார்கள் என்று எண்ணுகிறார்களா? என்றால், நிச்சயமாக இல்லை. இந்த கருத்தை தான் நான் ஏற்கனவே விளக்கி இருந்தேன்.

============================================================

இப்போது எனது கேள்வி என்ன வென்றால், சாய்பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனபோது பிரார்த்தனை கூட்டம் நடத்தி இறைவனை அழைத்தார்களே, அது ஏன்?

============================================================
எனவே 2000 வருடங்களாக உண்ணாமல், குடிக்காமல் உயிரோடு இருக்கும் ஈஸா நபியை வணங்குவதற்கும், சாய்பாபா, அமிதானந்தமாயி போன்றோர்களை வணங்குவதற்கும் உள்ள வேற்பாடு புரிந்துவிட்டதா?

அதே மாதிரி சிலர் தாய், தந்தையரை கூட கடவுளாக நினைத்து வணங்குகிறார்கள் தான். ஆனால் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமலோ, அல்லது ஏதாவது accident ஆகிவிட்டாலோ, உடனே உண்மையான இறைவனை அழைத்து வேண்டுகிறார்களே !

எனவே தாய், தந்தையரை கூட கடவுளாக நினைத்து வணங்கு- கிறவர்கள் கூட, அவர்களுக்கு துன்பம் வந்துவிட்டால், உண்மையான இறைவன் பக்கம் திரும்புகிறார்கள், என்பதிலிருந்து தாய் தந்தை மீது கொண்டுள்ள பக்தியும் , இறைவனை வணங்குவதும் வெவ்வேறானது என்று தெளிவாக விளக்கியிருந்தேன்.

நீ எழுதி உள்ளாய்:

இந்த வசனமானது இன்றைய காலகட்டத்தில் கடவுளாக வணங்கப்படும் சாமியார்களையும் தான் குறிக்கும். அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் அவர்களும் இறந்து தான் போவார்கள். அதை தான் இந்த வசனம் சொல்கிறது என்று ...

என் பதில் :

அல்லாஹு அந்த வசனத்தில் என்ன சொல்கிறான்? அல்லாஹுவை அன்றி யாரையெல்லாம் அவர்கள் அழைக்கிறார்களோ ..... அவர்கள் இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்கள் அல்லர் என்று.

ஆனால் நீயோ, அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் அவர்களும் இறந்து போவார்கள், அதைத்தான் இந்த வசனம் சொல்கிறது என்கிறாய். இப்போது புரிகிறதா உனது புரிதலில் உள்ள குளறுபடி?

நீ பொருள் கொள்ளும் விதமே தவறு. அல்லாஹு என்ன கருத்தில் சொல்கிறான் என்பதை முன்னிறுத்தி பொருள் கொள்.

அதாவது அல்லாஹு சொல்கிறான், “அல்லாஹுவை அன்றி யாரையெல்லாம் அவர்கள் அழைக்கிறார்களோ ..... அவர்கள் இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்கள் அல்லர்” என்று.

ஆனால் நீயோ, அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் அவர்களும் இறந்து போவார்கள் என்று உனது எண்ணத்திற்கு ஏற்ப பொருள் கொடுத்து, அல்லாஹுவின் வசனத்தை குழப்புகிறாய்.

இறந்தவர்கள் என்று எப்படி பொருள் கொள்ள வேண்டும் என்றால், இறந்தவர்களால் எப்படி எதுவுமே செய்ய முடியாதோ அதே போல் உங்கள் பொய் கடவுளால் (சாய்பாபா, அமிதானந்தமாயி) எதையுமே செய்ய முடியாது என்பதாகும்.

மேலும் அல்லாஹு சொல்கிறான்,

“அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே படைக்கப்பட்டவர்கள்”

இந்த வசனத்திற்கு ஏற்ப, சாய்பாபா ஆகட்டும், எந்த போலி சாமியர்கள் ஆகட்டும், அவர்கள் அனைவருமே படைக்கபட்டவர்களே, மேலும் அவர்களால் எதையுமே படைக்கமுடியாது.

நீங்கள் அவர்களை உதவிக்கு அழைக்கிறீர்களா?, உங்கள் துயரங்களை அவர்களிடம் முறையிடுகிறீர்களா?, இறந்தவர்களுக்கு எவ்வாறு, உங்கள் முறையீடுகளை கேட்டு, உங்களுக்கு உதவி செய்யும் சக்தி இல்லையோ, அதே போல் எனக்கு நிகராக, அல்லது என் உதவி இல்லாமல் அவர்களால் எதையும் செய்யமுடியாது.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹுவிடமே உதவி கேளுங்கள், அவனே அதற்கு தகுதி உடையவன் என்பதே அந்த வசனத்தின் கருத்து ஆகும்.

============================================================

அடுத்து, முஸ்லிம்களின் கபரு வணக்கம், ஹிந்துக்களின் சிலை வணக்கம், கிறிஸ்தவர்களின் ஈசாவை வணங்குதல் போன்ற இறந்தவர்களை வணங்குவது.

நீங்கள் இறந்தவர்களை வணங்குவது, அவர்களை உதவிக்கு அழைப்பது, துன்பங்களை அவர்களிடம் முறையிடுவது, பாவங்களுக்கு ரட்சிப்பு தேடுவது – எதுவுமே பலனளிக்காது, ஏனென்றால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது, அவர்கள் இறந்துவிட்டார்கள்.

உயிரோடு இருப்பவர்கள் அல்லர்; எனவே என்றென்றும் உயிரோடு இருக்கும் எனக்கே அஞ்சுங்கள், என்னிடமே உதவி கேளுங்கள் என்று அல்லாஹு கூறுகின்றான்.

மேல் சொன்ன கருத்தில் ஈசாவும் அடங்குகிறார் தானே? எனவே ஈசாவை யாரெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களுக்கும் சேர்த்து தான் இந்த வசனம் கூறுகிறது.

எனவே சாய்பாபாவை உதாரணம் கட்டுகிறாய், அவரோ உண்டு உறங்கி இறந்துவிட்டார். ஆனால் ஈசாவோ உங்கள் நம்பிக்கை படி, 2000 வருடங்களாக உண்ணாமல், குடிக்காமல் உயிரோடு இருக்கிறார்.

எனவே பெரும்பான்மை மக்களால் கடவுளாக வணங்குபவர் ஈஸா நபி. எனவே அந்த பொய் கடவுள் ஈஸா இறந்துவிட்டார்.

எனவே புகாரி 3456-ன் படி நீங்கள் கிறிஸ்தவர்களை பின்பற்றுகிறீர்கள் என்பது தெளிவாகிறது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக