புதன், 7 மே, 2014

மகிழ்வாய் ஏற்றுக்கொள்கிறேன்


அன்பு சிறிய தகப்பனார் Nizar Mohamed அவர்கள்,
பல வருடங்கள் எம்மோடு எந்த தொடர்புமில்லாமல் இருந்து, இப்போது அஹமதியா சித்தாந்தம் பற்றியும் குர்ஆன் ஹதீஸ் பற்றியும் உரையாட வலிய முன் வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி, அல்ஹம்துலில்லாஹ்.

உங்கள் தொடர் 1இல்,எது சரியான கொள்கையோ அதை தேர்வு செய்வேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்ல சொல்கிறீர்கள்.

நான் ஏற்றுக் கொண்டிருக்கும் ஏகத்துவ கொள்கை கூட அத்தகைய சத்தியத்தின் மீது நிறுவப்பட்டது தான். காரணம், அல்லாஹ்வின் கிருபையால் இதன் பல பரிமாணங்களையும் நுணுக்கங்களையும் இயன்ற வரை நானே புரிந்து, நம்பியவை தான்.

ஆக, அஹமதியா கொள்கை என்ன, நாத்திகம், சிலை வழிபாடு, ஹிந்து, கிருத்தவ மதம், தர்கா, தரீக்கா என எதைப் பற்றி யார் எனக்கு தெளிவாக்கினாலும் அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக அதை ஏற்றுக்கொள்ள தான் செய்வேன்.

இத்தகைய திறந்த மனதுடன் இருக்கும் படி தான் குர்ஆன் கூட நமக்கு கட்டளையிடுகிறது என்பதால் உண்மையை ஏற்றுக்கொள்ள எந்த தயக்கமும் எனக்கு இருக்காது.
நீங்களும் இதே மன நிலையுடன் முன் வாருங்கள்.

அல்லாமல், பிஜெ என்கிற தனி மனிதரைப் பற்றி பேசி காலத்தை கடத்தலாம் என்கிற மிகவும் அற்பமான எண்ணம் கொள்ளாதீர்கள்.

பிஜெ என்கிற மனிதர் பற்றி நீங்கள் அறிந்ததை விடவும் பல மடங்கு நான் அறிந்திருக்கிறேன் என்பதால் அவ்வாறு பேசுவதில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதால் சொல்கிறேன்.
அதோடு, 80களில் நீங்கள் கண்ட மார்க்க ஞானமல்ல இன்றைய தமிழக மக்களிடம் இருப்பது.
இன்று உங்கள் குடும்பத்திலுள்ள உங்கள் பிள்ளைகளும் உங்கள் பேரப்பிள்ளைகளும் கூட தவ்ஹீதை கற்றறிந்து பிறருக்கு எத்தி வைக்கவும் செய்கின்றனர் என்பதை மறவாதீர்கள்.

மேலும் சத்தியம் என்பது ஒரு முறை சொன்னால் போதுமானது, 1000 சத்தியம் என்பது அர்த்தமில்லாதது என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

உங்கள் மூன்று தொடர்களிலும் சில அடிப்படை தவறுகள் உள்ளன.

உதாரணமாக, சுன்னாஹ் வேறு , ஹதீஸ் என்பது வேறு என்று சொல்லியிருக்கிறீர்கள் - இது அடிப்படையிலேயே தவறு !
சுன்னாஹ் தான் ஹதீஸ் , ஹதீஸ் அனைத்தும் நபியின் சுன்னாஹ் தான்!

என்ன புரிதலில் அப்படி சொன்னீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. போகட்டும்.

கலந்துரையாட முன்வந்திருப்பதை மகிழ்வாய் ஏற்றுக்கொண்டு நேரம் கிடைக்கும் போது பேசலாம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக