சனி, 24 மே, 2014

தோல்வி உண்டென்றால் வெற்றியும் உண்டு


தாங்கவே இயலாத துன்பம் நமக்கு நேர்ந்து விட்டதாய் கருதுவோர் அதையும் கூட சகித்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்கு உயரிய சொர்க்கத்தை வழங்குவான்.

அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (நூல் : புகாரி 5653)

மிகப்பெரிய சோதனையை தந்த இறைவனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தருவது சிரமமான காரியமில்லை..!
எதிர்பாராத தோல்விகளை அல்லாஹ் நமக்கு தருகிறான் என்றால் நாம் கற்பனையிலும் எண்ணிடாத அளப்பரிய வெற்றிகளையும் அவனால் தர முடியும் என்கிற அர்த்தம் அதிலேயே அடங்கித்தான் உள்ளது ..!!

இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது.
அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. (நூல் : முஸ்லிம் 7692)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக