வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (B)


05/05/2014 தொடர்- 2 
அன்புள்ள nashid, உன் தொடர் 2 க்கு எனது பதில்: 
1…………………………………………………………………………………….
நான் ஏப்ரல் 27 தேதியில், ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதற்கு குரான் 5.76 வசனத்தை ஆதாரமாக காட்டியிருந்தேன்.
மேற் சொன்ன வசனத்தை மறுப்பதாக இருந்தால், ஈஸா உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஒரு வசனத்தையாவது குரானிலிருந்து நீ காட்டியிருக்க வேண்டும்
உன்னால் காட்ட முடியாததால், உலகத்தில் சாதாரணமாக நடக்கும் விஷயத்தை உதாரணமாக காட்டினாய். அதாவது, நீ வைத்த கருத்தாவது, சகராத்து நிலையில் உள்ள ஒருவர் எப்படி உடனே இறக்காமல் சிறிது நாள் கழித்து இறப்பாரோ , அதே போன்று ஈசாவும் இப்போது இல்லை என்றாலும் பிறகு இறக்கக்கூடியவர் , எனவே ஈசாவை பற்றி இவ்வாறு நம்புவது ஷிர்க் இல்லை என்று நீ எழுதினாய்
அதற்கு என் ஏப்ரல் 30 தேதி பதிலில், சகராத்து நிலையில் இயற்கை விதிக்கு ( சுவாசித்தும்,உண்டும்,குடித்தும் ) உட்பட்டுதான் வாழ்ந்து மரணிக்க வேண்டும் , ஆனால் ஈஸா நபி இந்த இயற்கை விதிக்கு அப்பாற்பட்ட நிலையில் அவரால் வாழ முடியாது என்று தெளிவாக விளக்கியிருந்தேன்.. 
இப்போது உன் பதிலில் , நீ இவ்வாறு எழுதுகிறாய்
1) “குர்ஆன் ஹதீஸ்களில் இறக்கவில்லை என்று அல்லாஹ் சொல்கிறான் என்பதால் ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை என்று நாம் சொல்கிறோம்
என் பதில்: மேலே நீ எழுதி உள்ளதற்கு என்ன ஆதாரம் ?
விவாதத்தின் போது ஆதாரம் காட்டாமல் , சக்கராத் நிலை... என்றெல்லாம் உலக விஷயங்களை எழுதி திசை திருப்ப வேண்டாம்
2) நீ எழுதி உள்ளாய்இன்னும் இறக்கவில்லை என்று அவரைப் பற்றி நான் சொல்வதால் நான் ஷிர்க் வைத்தவனாகி விட மாட்டேன்என்று
என் பதில் : ஈஸா நபி இறந்து விட்டார் என்பதற்கு ஒரு வசனத்தையும் ( 5.76 ) , உயிருடன் இருக்கமாட்டார் என்பதற்கு, குரான் 7.26 ; 21.34 ; 20.56 போன்ற வசனங்களை காட்டியிருந்தேன்.
குரான் இப்படி தெளிவாக கூறி இருக்கும்போது, இன்னும் ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு ஆதாரமும் காட்டாமல் , ஈஸா உயிருடன் இருக்கிறார் என்று நீங்கள் கற்பனை பண்ணுவது ஷிர்க் அல்லாமல் வேறு என்ன ?
3) மேலும் நீ எழுதி உள்ளாய்அவரது ஆயுள் தான் நீட்டிக்கப்படிருக்கிறதே தவிர, மரணத்திலிருந்து விதிவிலக்கொன்றையும் அவர் பெறவில்லை” 
என் பதில் : a) அவருக்கு ஆயுள் நீட்டிக்கபட்டிருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்? சொந்த கற்பனை வேண்டாம்
b) உலகத்தில் ஆயுள் தண்டனை பெறபட்ட ஒரு கைதி கூட , அதாவது ஜயிலில் உண்பதற்கும், குடிபதற்கும், இயற்கை கடனை செலுத்துவதற்கும் கஷ்டப்படும் கைதி கூட, ஒரு நாள் விடுதலை ஆகிவிடுகிறார். ஆனால் வானத்தில் உண்ணாமல் குடிக்காமல் இயற்கை கடனை செலுத்தாமல் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் உங்கள் கற்பனை ( ஷிர்க் ) ஈசாவுக்கு எப்போது தான் விடுதலை ?

4) நீ எழுதி உள்ளது : “உண்ணாமல் குடிக்காமல் toilet போகாமல் ஈஸா நபி இருப்பதாக நான் சொல்லவில்லை. அப்படி அல்லாஹ் சொல்லவில்லை. அவரை இந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக மட்டும் தான் அல்லாஹ் சொல்கிறான்
என் பதில் : a) ஈசாவை,பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக அல்லாஹு சொன்னதாக எழுதி உள்ளதற்கு ஆதாரம் என்ன ?
b) நான் காட்டிய அல்லாஹுவின் 5 வசனங்களை, பொருளற்ற முறையில் உலக பார்வையுடன் மறுத்து விட்டு , ஈசாவை பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக கற்பனை சரக்கை நீ எழுதி இருப்பது, நீ அல்லாஹுவை விட்டு விட்டு ஈசாவை பலமாக கட்டிப் பிடித்துள்ளாய் என்பது தான் பொருள்
C) இவ்வுலகில் ஏதேதோ நோக்கத்திற்காக, kidnap செய்யப்படும் செய்திகள் எல்லோருக்கும் தெரியும். நீயோ உலகவாதியைப் போல், குரானின் அறிவு சிறிதும் இல்லாமல் , மார்க்க அறிவற்றவர்களைப் போல், ஈஸா நபியும் kidnap செய்யப்பட்டுள்ளகாக எழுதியுள்ளாய். இல்லை எனில்பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக அல்லாஹு சொன்னதாகநீ எழுதி உள்ளதற்கு ஆதாரம் காட்டு . ======================================================================================================================================================
2………………………………………………………………………………நீ ( குரான் 2.260 ) வசனத்தின் படி ஒருவர் 100 வருடங்கள் தூக்கத்தில் இருந்தார் என எழுதி உள்ளாய். நீ எழுதி உள்ளதில் சில தவறுகள் உள்ளது. எனவே முதலில் வசனத்தை முழுமையாக எழுதி , அதன் பிறகு நீ புரிந்து கொண்ட கருத்து என்ன என்பதியும் எழுதி , அதன் பிறகு உன் ஆட்சேபனைகளையோ சந்தேகங்களையோ எழுதினால் தான் என்னால் சரியான பதில் தர முடியும். நான் இதனை பல முறை எழுதியுள்ளேன் . ..================================================================================================================================================================

3 ................................................... நீங்கள் ஈசாவை உயிருடன் வைத்திருப்பது buhari 3455-இன் படி, நீங்கள் கிறிஸ்தவர்களை பின்பற்றுகிறீர்கள் என்று எழுதி இருந்தேன் . அதற்கு ,
நீ இவ்வாறு எழுதி உள்ளாய்: "கிறித்தவர்களும் கியாமத் நாளை நம்புகிறார்கள், நிசார் முஹம்மது அவர்களும் நம்புகிறார். ஆகவே நிசார் முஹம்மது யூத நசாரா கொள்கையை கொண்டிருக்கிறார் என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?.
கிறித்தவர்களும் சொர்க்கம் இருப்பதை நம்புகிறார்கள், நிசார் முஹம்மது அவர்களும் நம்புகிறார். ஆகவே நிசார் முஹம்மது யூத நசாரா கொள்கையை கொண்டிருக்கிறார் என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டிருக்கிறாய்."
என் பதில் : a ) கிறிஸ்தவர்கள் கியமத் நாளையும் , சொர்க்கம் இருப்பதையும் நம்புகிறார்கள். நானும் கியமத் நாளையும் , சொர்க்கம் இருப்பதையும் நம்புகிறேன் ...... 
கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையாக கொண்டு கியமத் நாளையும் , சொர்க்கம் இருப்பதையும் நம்புகிறார்கள்
ஆனால் நான் குரானை அடிப்படையாக கொண்டு கியமாத் நாளையும் , சொர்க்கம் இருப்பதையும் நம்புகிறேன் .. .... புரிந்ததா nashid ? எனவே 3455 ஹதீஸின் படி நான் கிறிஸ்தவர்களை பின்பற்றியவனாக ஆகமாட்டேன் . .
b) கிறிஸ்தவர்கள் ஈஸா நபி உயிரோடு இருப்பதாகவும் , திரும்ப வருவார் எனவும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் . அதே போன்று நீங்களும் ஈஸா நபி உயிரோடு இருப்பதாகவும் , திரும்ப வருவார் எனவும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களே . எனவே புகாரி 3455-இன் படி நீங்கள் கிறிஸ்தவர்களை சாணுக்கு சாண் பின்பற்றுகிறீர்கள்.
இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .. 
எனவே நபி ஸல் அவர்களின் ஹதீஸை ஆராய்ந்து பார்க்காமல் ஏட்டிக்கு போட்டியாக பதில் கொடுக்க நினைக்காதே.
அடுத்த தொடர் வரும், இன்ஷா அல்லாஹ் , அது வரை பொறுமையாக இருக்கவும்.


07/05/2014 தொடர்- 3 பாகம் – 1 
அன்புள்ள nashid , உன் தொடர் 3 க்கு பதில் .
(
குர்ஆன் 16: 21,22 ) “அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணம் அடைந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்ல. மேலும் எப்போது எழுப்பப்படுவர் என்பதனை கூட அவர்கள் அறிவதில்லை.”………………… ஈஸா ஒரு பொய் கடவுள் என்ற முறையில் இறந்துவிட்டார் என்பதற்கு இந்த வசனத்தை எடுத்து வைத்தேன்

1 ) நீ எழுதி உள்ளாய் : ”முதலில், அந்த வசனமானது ஈஸா நபியை பற்றியா சொல்கிறது? இல்லை. அந்த வசனம், அல்லாஹ்வை தவிர யாரையெல்லாம் அவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் பொதுவாய் சொல்கிற வசனம் “.

என் பதில்: a) நீஈஸா நபியை பற்றியா சொல்கிறது? ‘ என்று கேள்வி கேட்கிறாய். ஈஸா, கிறிஸ்தவர்களின் பொய் கடவுளா? இல்லையா? இதில் உனக்கு சந்தேகம் உண்டா? இல்லை எனில், அல்லாகுவின் வசனத்திற்கு , எதனடிப்படையில் எதிர் கேள்வி கேட்கிறாய் ?.

b) எனவே இந்த வசனம் ஈசாவை தான் முதன்மையாக சொல்கிறது. மேலும் சிலை வழிபாடு , தவறான கபரு வழிபாடு போன்றவைகள்
ஆனால், இன்று உலகத்தில் அதிகமான மக்களால் , அதாவது கிறிஸ்தவர்களால் வணங்கபடக்கூடிய தெய்வம் ஈஸா தான்

(அது மட்டுமல்ல , என் முந்திய தொடரில் ஈஸா மரணித்துவிட்டார்கள் என்பதற்கு 5 வசனங்களை எடுத்து வைத்துள்ளேன். )

எனவே ஏனைய வசனங்களில் ஈஸா மரணித்துவிட்டார் என்று அல்லாஹு சொல்வதை போன்றே, மேலே உள்ள வசனத்திலும் பொய் கடவுளான ( ஈஸா ) மரணித்து விட்டார் , உயிருடன் இல்லை என்று தான் தெளிவாக பொருள் கொள்ள முடியும்.

c) குரானுக்கு மாற்றமாக , ஈஸா உயிருடன் இருப்பதாக நம்பும் நீ மேலே சொன்ன வசனத்தை விமர்சிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

2 ) நீ எழுதி உள்ளாய்: “இறந்து விட்ட ஒருவரை நீ அழைப்பதாக இருந்தால், இதோ பார் அவர் இறந்து விட்டவர், அவர் செவியேற்க மாட்டார் என்று சொல்லும் வசனம்.

இறக்காமல் உயிருடன் இருக்கும் ஒருவரை அழைப்பதாக இருந்தால், இதோ பார் அவர் இறக்ககூடியவர், அவர் உனக்கு பதிலளிக்க மாட்டார் என்று சொல்கிற வசனம்.” 

என் பதில் : a) அல்லாகுவின் வசனத்திற்கு இன்னொரு வசனத்தை காட்டி உன் கருத்தை எடுத்து வைக்க வேண்டும் . அதை விட்டு விட்டு , மேலே சொன்னது போல் அதோ பார், இதோ பார் என்றெல்லாம் ஜீ பூம் பா விளையாட்டு விளையாட வேண்டாம்

b) “அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ, அவர்கள் மரணம் அடைந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்ல. ... என்று அல்லாஹு கூறியிருக்கும்போது 

நீயோ ,” இறந்து விட்ட ஒருவரை நீ அழைப்பதாக இருந்தால் .... உயிருடன் இருக்கும் ஒருவரை அழைப்பதாக இருந்தால் ... என்றெல்லாம் எழுதியிருக்கிறாயே, இந்த உன் அணுகுமுறை மிகவும் தவறு. ஏனென்றால் அல்லாஹு அவ்வாறு சொல்லவில்லை

c) அல்லாகுவின் வசனத்திற்கு குரானிலிருந்து ஒரு வசனத்தை காட்டி நீ விளக்குவதை விட்டு விட்டு உலகத்தில் உள்ள சாயிபாபாவையும் சச்சிதானந்தாவையும் உதாரணம் காட்டுகிறாயே , உனக்கு குரானிலிருந்து ஒரு வசனம் கூட கிடைக்க வில்லையா
.============================================================

3 ) நீ, மாதா அமிர்தானந்தமயியை, மற்றும் சாயிபாபாவை மக்கள் வணங்குகிறார்கள் , ஆதலால் இந்த குரான் வசனத்தின் படி பொருந்தாதே , என்றும் , அதாவதுஅவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ , அவர்கள் மரணம் அடைந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்ல.” என்ற வசனத்தின் படி பார்த்தால் மாதா அமிர்தானந்தமயி இப்போது இறந்திருக்க வேண்டுமே !... என்ற கருத்தில் எழுதி (குழப்பி )உள்ளாய்.

என் பதில் : a ) குரானின்அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோஎன்ற வசனத்தில் உள்ளஅழைத்தல்என்பதற்கு என்ன பொருள் என்றால், அல்லாஹுவை எப்படி அழைப்பார்களோ அப்படி ஒருவரை அழைத்தல் என்பதாகும்

அதாவது நாம் எப்படி அல்லாஹுவை அழைப்போம் ? அல்லாகுவின் சிஃபத்களை கருத்தில் வைத்துக்கொண்டு ,அந்த கண்ணியத்தோடு அல்லாஹுவை அழைப்போம்

அதாவது அல்லாஹு படைப்பவன், காக்கிறவன் , கருணை காட்டுபவன் , தவறுகளை ,பாவங்களை மன்னிப்பவன் , தேவைகளை நிறைவேற்றுபவன் , பாவங்களிருந்து இரட்ச்சிப்பவன் போன்ற பல சிஃபாத்களை உடையவன்

மேலும் அல்லாஹு எந்த தேவைகளையும் உடையவன் அல்ல. (குறைந்த பட்ச உதாரணம் என்னவென்றால்) அல்லாஹுக்கு உண்ணுதலும் குடித்தலும் , தூக்கமும் போன்றவை கிடையாது
எனவே மேற்சொன்ன சிபத்துகளை உடைய அல்லாஹுவை, ஒருவன் எப்படி அழைப்பானோ , அதே போன்று இன்னொருவரை அழைத்தல் என்பதாகும்

சாயிபாபாவை எடுத்துக்கொண்டால் அவர் உண்டும் குடித்தும் உறங்கியும் இயற்கை கடனை செலுத்தியும் , அதாவது மனிதனை போன்றே எல்லா தேவைகளையும் உடையவராக இருக்கிறார். மக்களுக்கு நன்றாகவே தெரியும் , அதாவது , சாயிபாபா உண்ணவில்லை என்றாலோ OR இயற்கை கடனை செலுத்த வில்லை என்றாலோ அவரால் வாழவே முடியாது, மேலும் அவர் இறக்கக்கூடியவர் என்று . எனவே இறைவனிடத்தில் வேண்டுவது போல் சாயிபாபா வணங்கபடவில்லை என்பது உலகமே அறிந்த விஷயம்

ஆனால் ஈஸா நபிக்கோ, இறைவனுக்கு கொடுக்கக்கூடிய அந்தஸ்தை கொடுத்து வணங்குகின்றனர். அதாவது ஈஸா நபி , முழு உலக மக்களுடய பாவங்களை மன்னிப்பார், ( இறைவனை போன்று) கருணை காட்டுவார், முழு உலக மக்களுடய பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறார் ..... மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம் இறைவனுக்கு கொடுக்கக்கூடிய சிஃபத்தை கொடுத்து வணங்குகிறார்கள் .
இதற்கு காரணமே ஈஸா உயிருடன் இருக்கிறார் , அதாவது , இயற்கை விதிக்கு அப்பாற்பட்டு வாழ்கிறார் என்ற நம்பிக்கையாகும்

ஆனால் சாயிபாபாவை வணங்கும் மக்கள், அவருக்கு , இறைவனுக்கு கொடுக்கக்கூடிய சிபத்தை கொடுக்கவில்லை. பொதுவாக ஹிந்து மக்கள் , (வேறுபாட்டை அறியாமல்) தன் தாய் தந்தையரை கூட கடவுளாக மதித்து வருகிறாரகள்
ஆனால் எப்படி தன் தாய் தந்தையரை கடவுளாக அவர்கள் மதித்தாலும் , தாய் தந்தைக்கு இறைவனுடைய அந்தஸ்தை கொடுப்பதில்லையோ ; அதே போன்று சாயிபாபாவுக்கும் இறைவன் அந்தஸ்தை கொடுப்பதில்லை , ஏனென்றால் தன் தாய் தந்தை போன்றே சாயி பாபாவும் , இயர்க்கை விதிக்கு உட்பட்டு வாழ்ந்து , மரணித்து விடுவார் என்றும் உயிரோடு வாழ மாட்டார் என்றும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்

b ) “அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ, அவர்கள் மரணம் அடைந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்ல”. என்று அல்லாஹு கூறுகின்றான்

இவ்வசனத்திற்கு , அல்லாஹு கூறும் பொருள் என்னவென்றால்மரணித்தவர்களை தான் மக்கள் அல்லாஹுவை அழைப்பது போன்று அழைப்பார்கள். ’ என்பதாகும். . 
எனவே இந்த வசனத்தின் அடிப்படையில் ஈஸா நபி ஒரு பொய் தெய்வம் என்றும் , எனவே அவர் இறந்துவிட்டார் , மேலும் உயிருடன் இல்லை என்பதும் தெளிவாகிறது

இன்னும் பதில் எழுதவேண்டி உள்ளது. முழு பதிலும் வந்தபிறகு எழுதவும் .
 —


தொடர்- 3 பாகம் -2 
அன்புள்ள nashid ,

நான், குரானுடையஉயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமானவர் அல்லர்.” என்ற வசனத்தின் படிஇறந்து போன முஹம்மத் ஸல் அவர்களும், உயிரோடு இருக்கிற ஈஸாவும் சமமாக இருக்க முடியுமா? யார் உயர்ந்தவர்? ன்று கேட்டிருந்தேன் .


அதற்கு நீ எழுதி உள்ளாய் , 1 ) “உயிருள்ளவனும் இறந்தவரும் சமமில்லை என்று அல்லாஹ் சொல்வது இணை வைப்பின் வாசலை அடைப்பதற்கு தானே தவிர இரண்டில் சிறந்தவர் யார் என்பதை சொல்வதற்கில்லை

என் பதில் : a ) நீ மேலே , “உயிருள்ளவனும் இறந்தவரும் சமமில்லை என்று அல்லாஹ் சொல்வது இணை வைப்பின் வாசலை அடைப்பதற்கு தான்என்று எழுதிவிட்டு , ஈசா நபி 2000 வருடமாக உயிரோடு இருப்பதாக நம்புவது , இணைவைப்பதாக தெரியவில்லையா ? 

============================================================

2 )
நீ எழுதி உள்ளாய், எதிர் எதிர் நிலை என்றெல்லாம் கூறிவிட்டு
ஒரு உடலில் உயிர் இருப்பதும் உயிர் இல்லாமல் இருப்பதும் எதிர் எதிர் நிலை. இரண்டும் என்றைக்கும் சமமாகாது. ஆகவே உயிருடன் இருக்கும் போது கேட்பது போல் இறந்த பிறகு கேட்காது.

உயிருடன் இருக்கும் போது பார்ப்பது போல், உயிருடன் இருக்கும் போது சிந்திப்பது போல் எல்லாம் உயிர் பிரிந்த பிறகு நடக்காது
என்கிற தத்துவத்தை உதாரணங்களுடன் சொல்லி, இணை வைக்கும் மக்களை அல்லாஹ் எச்சரிக்கிறான். ”

என் பதில் : நீ மேலே கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் , ஈஸா உயிருடன் இருக்கிறார் என்று நம்புவதன் படி, முஹம்மத் நபி and ஈஸா நபி இவர்களில் யார் சிறந்தவர் என்று நீயே சொல். 

அதாவது a) நீ குறிப்பிட்டது போல்உயிருடன் இருக்கும் போது கேட்பது போல், இறந்த பிறகு கேட்காதுஎன்பதன் அடிப்படையில், 
ஈஸா உயிருடன் இருக்கிறார் , எனவே எல்லா மக்களின் வேண்டுதல்களை கேட்கிறார். 

ஆனால் முஹம்மத் இறந்து விட்டார் , அவர்கள் எதுவுமே கேட்கமாட்டார். இப்போது சொல் யார் சிறந்தவர் ?

b )
நீ குறிப்பிட்டது போல்உயிருடன் இருக்கும் போது பார்ப்பது போல், உயிருடன் இருக்கும் போது சிந்திப்பது போல் எல்லாம் உயிர் பிரிந்த பிறகு நடக்காதுஎன்பதன் அடிப்படையில் ,

ஈஸா உயிருடன் இருக்கிறார், எனவே எல்லாவாற்றையும் பார்க்கிறார் , ஆனால் முஹம்மத் இறந்து விட்டார் ,எனவே அவர்களால் எதையுமே பார்க்க முடியாது. இப்போது சொல் யார் சிறந்தவர் ? 

நீ குறிப்பிட்டது போல், ஈஸா உயிருடன் இருக்கிறார் , எனவே அவரால் சிந்திக்க முடியும் . ஆனால் முஹம்மத் இறந்து விட்டார் ,எனவே அவர்களால் எதையுமே சிந்திக்க முடியாது . இப்போது சொல் யார் சிறந்தவர் ?

மேலும் நான் கேட்கிறேன், ஈஸா நபி பனி இஸ்ராயீல் சமுதாயத்திற்கு மட்டுமே வந்தவர் ; ஆனால் முஹம்மத் நபி ஸல் முழு உலகுக்கும் அருட்கொடையாக வந்தவர். உன் கருத்து படி ஈஸா உயிரோடு இருக்கிறார் , ஆனால் முஹம்மத் இறந்து விட்டார் . எனவே யார் சிறந்தவர் ?

மேலும் நான் கேட்கிறேன் , பனீ இஸ்ராயீல் சமுதாயத்திற்கு மட்டுமே வந்த ஈஸா நபி, மீண்டும் வந்து, முஸ்லிம் உம்மத்தை சீர்திருத்துவார் என்பது உங்கள் நம்பிக்கை. ஆனால் முழு உலகுக்கும் அருட்கொடையாக வந்த முஹம்மத் நபி ஸல் இறந்து விட்டார், இனி வரமாட்டார் , இப்போது சொல் யார் சிறந்தவர் ?

எந்த ஆதாரமும் இல்லாமல் , ஈஸா உயிரோடு இருக்கிறார் என்று நீங்கள் ஷிர்க் செய்வதால், உங்களை அறியாமலேயே முஹம்மத் ஸல் அவர்களை விட ஈஸா நபிக்கு சிறப்பை கொடுத்துள்ளீர்கள். 

============================================================

3 )
நீ எழுதி உள்ளாய் : “ நிசார் முஹம்மது அவர்கள் இறக்கவில்லை, நபி (சல்) அவர்கள் இறந்து விட்டார்கள். உங்கள் கேள்வியை உங்கமிடமே கேட்கிறேன், இருவரில் யார் சிறந்தவர் என்று இப்போது நீங்கள் பதில் சொல்லுங்கள், பார்ப்போம். ”

என் பதில் : 1) நிசார் முஹம்மது உன்னிடம் வந்து , தான் நபி என்று வாதம் செய்தாரா? 

அல்லாகுவின் வசனத்தை இன்னொரு வசனம் கொண்டே விளக்குவதற்கு எந்த ஆதாரமும் உன்னிடம் இல்லாததால் , உலக மக்களை உதாரணம் காட்டுகிறாய். 

ஈஸாவும் நபி வாதம் புரிந்தவர்கள் , முஹம்மத் ஸல் அவர்களும் நபி வாதம் புரிந்தவர்கள் . இவர்களில் யார் சிறந்தவர் என்பது தான் எனது கேள்வி . 

இந்த கேள்வியை நான் ஏன் கேட்டேன் என்றால், 2000 வருடங்களாக , இயற்கை வீதிக்கு மாறாக ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்று நீ நம்புவாதல் தான் ..சிந்தித்து பார். 
============================================================

4 ) “1000
கணக்கான முல்லாக்கள் இஸ்லாத்தை விட்டு விலகி கிறிஸ்தவ பாதிரிகளாக மாறி ,மேற்சொன்ன கேள்வியை விடுத்தார்கள்... அதற்கு hazrat அஹ்மத் (அலை) அவர்கள் அந்த கிறிஸ்தவர்களுக்கு சாட்டை அடி கொடுத்து நபி ஸல் அவர்களின் கண்ணியத்தை காப்பாற்றினார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ஹசரத் இதற்கு சொன்ன சாட்டையடியை கொஞ்சம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். “

என் பதில் : நீ இது வரையிலும் அல்லாகுவின் வசனங்களை குதர்க்கமாக மறுத்தும் , உலக மக்களை ஆதாரமாக காட்டி எழுதியும் வருகிறாய். 

நான் ஈஸா இறந்து விட்டார்கள் என்பதற்கு பல வசனங்களை எடுத்து வைத்தேன் . 

ஆனால் ஈஸா உயிரோடு இருப்பதற்கான ஆதாரத்தை எடுத்து வை . OR ஈஸா மரணித்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள் ,

அதன் பிறகு நபிக்கு பின் நபி வர முடியும் என்பதையும் , மிர்சா சாஹிப் பற்றியும் பேசுவோம் 

மேலும் அடுத்த தொடருக்கான பதில் எழுதுகிறேன்.என் எல்லா தொடரும் முடிந்தபின் நீ பதில் எழுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக