வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 2


(தொடர் 1) NASHID ன் அன்பான அறிவுறுத்தலுக்கு என் பதில், அன்புள்ள என் (அண்ணன்) மகனே , அஹ்மதிய்யத்தை விட்டு விட்டு குரான் ஹதீஸை ஆய்வு செய்யுமாறு நீ அறிவுறுத்தியுள்ளாய்.. உன் கருத்தை ஓரளவு ஏற்றுக்கொண்டு இந்த பதில் எழுதுகிறேன்.. நீ நடுநிலைமையுடன் சிந்திப்பாயாக! மேலும் என் முந்திய கருத்துக்களை நீ கண்டு கொள்ளாமல் விட்டு, வெறும் ஆட்சேபனை மட்டும் செய்வதாக இருந்தால் அதில் ஒரு பலனும் இல்லை. உதாரணம் ஈஸா பியையும் தாயாரையும் யூதர்கள் தூற்றியது பற்றி நான் எழுதியிருந்தேன்..அதில் நீ புரிந்து கொண்டது என்ன என்பதை please எழுது... அவ்வாறில்லாமல் மறுக்கும் நோக்கத்தில் மேலும் மேலும் கேள்வி கேட்பதால் ஒரு நன்மையும் இல்லை.. 
நாம் இருவரும் ஒரு நபியை பற்றிய விஷயத்தை பேசுகிறோம் என்பதை மனதில் கொள்வாயாக! ...ஏன் என்றால் ஹஸ்ரத் அஹ்மத் அலை உனமையாளர் என நீ புரிந்துவிட்டால், அதன் பின்னரும் நீ ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் அல்லாஹுவின் தண்டனையை பற்றி (இப்போதே) நினைத்து பார்.. நீ புரிந்து ஹிதாயத் கிடைத்துவிட்டால் இந்த உண்மையாளரை பற்றி நான் மிகவும் மோசமாக எழுதியும் பேசியும் விட்டேனே என்று நீ வேதனை படவேண்டியிருக்கும்..
எனவே இரண்டில் ஒன்று தெரிவது வரையிலும் பொறுமையாக கருத்துபரிமாற்றம் செய்து, அத்துடன் (உண்மையை ஏற்றுக்கொள்ள or பொய்யிலிருந்து விலக) ஹிதாயத் தருவதற்கு உரிமையுடயவன் அல்லாஹு ஒருவன் என்பதால், அல்லாஹுவிடம் துஆ செய் என மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... 
மட்டுமல்ல நான் துஆ செய்கிறேன், ஹஸ்ரத் அஹ்மத் அவர்கள் பொய்யர் என்று NASHID -ன் மூலம் அல்லாஹு எனக்கு புரிய வைத்தால் நான் அகமதியத்தை விட்டு வர தயாராக உள்ளேன் என்று அல்லாஹுவை சாட்சியாக்கி 1000 முறை சத்தியம் செய்கிறேன்.. அதே போல் ஹஸ்ரத் அஹ்மத் உண்மையாளர் என்று நீ புரிந்து கொண்டால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று நீ சத்தியம் செய்.

(தொடர் 2) அஹ்மதிய்யத்தை விட்டு விட்டு குரான் ஹதீஸை ஆய்வு செய்யுமாறும நீ அறிவுறுத்தி உள்ளாய். இது சரியா or தவறா என்பதை பார்ப்போம். 
சுமார் 25 வருடங்களுக்கு முன் நீ மார்க்க தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள P JAINULABDEEN அவர்களும் ABU ABDULLAH அவர்களும்இஸ்லாமிய இறைப்பணி இயக்கம்என்ற ஒரு இயக்கத்தை தொடங்கினார்கள்.. அப்போதய முஸ்லிம்களின் நிலை என்னவென்றால் கபர் ஜியாரத் என்ற பெயரால் ஷிர்க்கிலும், மௌலூது குத்துபிய்யத் என்ற பெயரால் பிதுஅத்தும், இறை அடியார்கள் அதை, இதை படைத்தார்கள் போன்ற ஷிர்க் மற்றும் மூடநம்பிக்கையிலும் மூழ்கியிருந்தார்கள் ... 
அப்போது PJ போன்ற மௌலவிகள் 2 அடிப்படையான விஷயங்களை எடுத்து வைத்து பிரச்சாரம் செய்தார்கள். . 
1. ‘
குரானையும் சுன்னத்தையும் விட்டு செல்கிறேன்என்ற ஆதாரத்தின் அடிப்படையில். 
2. “
சிந்திக்க வேண்டாமா? afala தகுகிலூன்? சிந்திக்காதவர்கள் கால்நடயை விட மோசமானவர்கள்என்ற குரான் வசனத்தை எடுத்துக்கூறி ...

ஆரம்பத்தில் அழகான முறையில் PJ போன்றோர் தப்லீக்கில் ஈடு பட்டபோது கூட்டம் சேர்ந்தது. ஓரிரு வருடங்கள் கூட ஆகவில்லை, PJ க்கும் ABU ABDULLAVUKKUM கருத்துவேற்றுமை ஏற்பட்டது. அப்போது ஆரம்பித்த கருத்து வேற்றுமை இன்று வரையிலும் தொடர்ந்து வருவதுடன் எண்ணற்ற பிரிவுகளையும் ஏற்படுத்திவிட்டது..
அது மட்டுமல்ல ஒருவருக்கொருவர் காஃபிர் என்றும், மிகப்பெரிய கொடிய காஃபிர் என்றும் , பொய்யன் , பித்தலாட்டக்காரன் , பைத்தியக்காரன் , திருடன் ,விபச்சாரன் , விபசார குடும்பம், கொள்ளைக்காரன்.........என்றெல்லாம் அவதூறு மாலைகளை(?) ஒருக்கொருவர் சொரிந்து கொண்டிரிக்கிறார்கள்... 
இந்த விஷயங்கள் நாஷிதுக்கோ இன்றய இளைய தலைமுறை யினருக்கோ இது தெரிய வாய்பில்லை ...

இப்போது கேட்கிறேன் மேற்சொன்ன அவதூறு மாலைகளை தமிழகத்தில் இஸ்லாமிய கலாச்சாரம் (?) என்ற பெயரால் அவிழ்த்துவிட்டது யார்? இந்த இஸ்லாமிய நாகரிகத்தை(?) ஏற்படடுத்திய பெருமை உங்கள் தலைவர் PJ வை சாரும். 
இப்படி ஒரு அவலத்தை தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் TV லும் இந்டெர்னெட்-லும் பேச எழுத காரணமானவர் யார்? 
உங்கள் தலைவர் PJ தான் ....
நேற்று வரை தோளோடு தோள் நின்று உழைத்த மக்களையும், பணத்தாலும் உடலாலும் அர்ப்பணம் செய்த முஸ்லிம் மக்களையும், சிறு கருத்து வேற்றுமை வந்த உடன் அவர்களை உதறிவிட்டுஅவதூறு மாலைகளை பொழிந்தாரே , இது இஸ்லாமிய நகரிகமா ? 
நபி ஸல் அவர்கள் காலத்தில் கருத்து வேற்றுமை ஏற்ப்படவில்லையா? அப்போது நபி ஸல் அவர்கள் இவ்வாறு அவதூறு மாலைகளை சொரிந்தார்களா ? அன்பார்ந்த இளைய சகோதரர்களே சிந்தித்து பாருங்கள்... 
PJ
போன்ற ஆலிம்கள், கூட்டம் சேர்ந்த உடன் , அவதூறு கூற துணிந்தார்களே என்ன காரணம் என்றால் ரசூல் ஸல் அவர்களின் சுன்னத்தை மறந்தது தான்... 
புரிந்து கொள்ளுங்கள், குரான் ஹதீஸை ஆய்வு செய்வது 2 ஆவதாக இருக்க வேண்டும், முதலாவதாக குரான் சுன்னத்தை ஆராய வேண்டும்.. 
ஏனென்றால்நான் குரனையும் சுன்னத்தையும் விட்டுச்செல்கிறேன், அதை பின் பற்றுவது வரை நீங்கள் வழிகெட மாட்டீர்கள்என்று நபி ஸல் அவர்கள் உத்திரவாதம் தந்தார்களே.. மேலும் நபி ஸல்-ன் வாழ்க்கை, குரானாக உள்ளது என்று அன்னை ஆயிஷா ரலி கூறியிருக்கிறார்களே...
எனவேகுரான் ஹதீஸ் ஆய்வுஎன்பது தவறான அடிப்படை என்பதும்குரானும் சுன்னதும்என்பது தான் சரி என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

குரனையும் சுன்னத்தையும் புரிந்து கொள்ள ஹதீஸ் உதவி செய்யும் என்பதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.

ஆனால் ரசூலின் சுன்னத்தை விட்டுவிட்டு ஹதீஸை மட்டும் பற்றி பிடித்தால் இந்த ஆலிம்கள் முஸ்லிம் மக்களை லஹ்னத்தின் பக்கம் இட்டு செல்வார்கள் , இட்டு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு.. 

NASHID
மற்றும் சகோதரர்களே, நீங்கள் ஆலிம்களின் சுன்னத்தை பின்பற்றுகிறீர்களா or ரசூலுல்லாவின் சுன்னத்தை பின் பற்றுகிறீர்களா சிந்தித்து பாருங்கள்.. 
நீங்கள் PJ -ன் கீழ் இருக்கிறீர்கள் என்றால், ஏனைய சகோதரர்களை PJ களட்டிவிட்டு அவதூறு கூறியது போல் (வெகு சீக்கிரமாக) உங்களை களட்டிவிட்டு அவதூறு கூற மாட்டார் என்பதில் என்ன நிச்சயம் உள்ளது?? 

(தொடர் 3)சுன்னத்தை ஆய்வு செய்ய வேண்டுமா or ஹதீஸை ஆய்வு செய்ய வேண்டுமா? 

ஒரு ரோமானிய DR இஸ்லாத்தை தழுவிய நிகழ்ச்சி நீங்கள் யாவரும் அறிந்ததே. (அறியாதவர்கள் 10 நாள் முன்னுள்ள என் profileல் பார்க்க).
அதாவது அந்த DR மனைவியுடன் இரவில் செல்லும்போது வழி மாறிப்போய், தங்குவதற்கு வேறு வழி தெரியாமல் ஒருவரிடம் விசாரிக்கிறார். பின் அவர் தன் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். அந்த வீட்டில் அவரும் மனைவியும் தாயும் 5 பெண்மணிகளும் இருந்தனர்.. டாக்டர் காலையில் எழுந்து விடைபெறுவதற்கு தயாரானபோதுதான் தெரிந்தது அந்த வீட்டில் வேறு அறையே இல்லை என்பதும் அந்த 8 பேரும் வெழியே குளிரில் தூங்கினார்கள் என்பதும். இதை புரிந்த டாக்டர் மனம் நெகிழ்ந்தார், அதிர்ச்சி அடைந்தார்,. 
அந்த பெரியவர், தான் முஸ்லிம் என்றும் நபி பெருமானாரின் சுன்னத்தையே நான் பின்பற்றினேன் என்று கூற மனம் மாறிய dr, குரான் சுன்னத் ஹடீசையும் படித்து 2 மாதத்தில் இஸ்லாத்தை தழுவினார் ...

அந்த ரோமானிய DR இஸ்லாத்தை தழுவ செய்தது குரான் ஹதீஸ் வாதமா? Or நபிகளாரின் சுன்னத்தா ? 
விருந்து உபசாரம் என்ற பெருமானாரின் அழகிய பண்பை, நடைமுறையை அந்த பெரியவர் பிரதிபலிக்காவிட்டால் அந்த DR இஸ்லாத்தை பற்றி அறிய முன் வருவாரா? அந்த பெரியவரின் முன்மாதிரியை DR உள்வாங்கியதனால் தானே அவர் குரான் சுன்னத்தை படிக்க முன் வந்தார்? குரான் சுன்னத்தை படிப்பதற்கு முன்னரே ரசூலுல்லாவின் முன்மாதிரி அவரது உள்ளத்தை மாற்றியதே!!!! (அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் அலா ஆலி முஹம்மத்)

அந்த பெரியாரின் முன்மாதிரியை DR பார்க்கவிட்டால் 2 மாதத்திற்குள் குரானை படித்து புரிந்துவிட முடியுமா ?
எனவே குரான் ஹதீஸ் ஆய்வு என்பது தவறு ; குரான் சுன்னத் என்பதுதான் சரி. 

இளய சமுதாயமே சிந்தியுங்கள். PJ போன்ற ஆலிம்கள், நபியான ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்களை மட்டும் தூற்றி கேலி செய்யுங்கள் என்று உங்களுக்கு கற்றுத்தரவில்லை; மாறாக PJ தவிர உள்ள எல்லா ஆலிம்களையும் தூற்றுங்கள் ,ஏளனம் செய்யுங்கள் என்று தான் கற்று தந்துள்ளார் என்பதை ஏன் சிந்திக்கமாட்டீர்கள் ?? 

காதியானிகளை எதிர்க்க வேண்டும் என்பதர்க்காக நீங்கள் எந்த கூட்டத்திலும் இருப்பீர்களா?

PJ
உங்களுக்கு கற்றுதந்தது என்ன தெரியுமா? 1) மௌலூத் ஓதவேண்டாம்,கபர் வணக்கம் வேண்டாம்,
2)
என்னை தவிர மாற்றுக்கருத்து உடைய அனைவரையும் அவதூறு கூறி தூற்றுங்கள்.. 
3)
சிந்தியுங்கள், சிந்தியுங்கள்,ஆனால் காதியானி விஷயத்தில் மட்டும் சிந்திக்காதீர்கள் ......

ஒரு நபியை அளப்பதற்கு முன் துஆ செய்து, இஸ்திக்பார் செய்.. ரசூலின் சுன்னத்தை பின்பற்று. 

PJ –
க்கு, பெருமானாரின் நடை முறை என்ன? என்பதை அறிவுறுத்த, அடுத்து எழுதுகிறேன்,, தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக