வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 4அன்புள்ள nashid இன் (27 ஏப்ரல் தேதி கடிதத்திற்கு பதில் தொடர் 1 )
ஈஸா நபி மரணித்து விட்டார் என்பதற்கு ஆதாரமாகமர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை. நிச்சயமாக அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர் .” என்ற குர் ஆன் 5.76 என்ற வசனத்தை எடுத்து வைத்தேன்................... 
அதற்கு நீஈஸா நபிக்கு முன்னுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொன்னால் அது ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்கிற அர்த்தத்தை தரும் என்பதை எந்த பள்ளிக்கூடத்தில் தமிழ் கற்றால் நான் ;புரியலாம் என்பதை எனக்கு அறியத்தரவும்.’ என எழுதி உள்ளாய்....................
உனது கருத்தை பேசாமல் அனாவசியமாக விமர்சித்துள்ளாய்.... உன் கேள்விக்கு என் பதில் : 1) முதலில் நீங்கள் அனைவரும், P J கற்றுத்தந்த ஷிர்க் school-ல் இருந்து வெளியே வந்து விட்டால் இந்த வசனத்தை எளிதாக புரிந்துக்கொள்வீர்கள்......... 
2)
மேலும் எந்த பள்ளிக்கூடத்திலும், கல்வியே படிக்காத நபி ஸல் அவர்களை இமாமாக ஏற்றுக்கொண்டுள்ள எனது school-ல் நீங்கள் சேர்ந்தீர்களேயானால் OR இந்த FACE BOOK மூலம் படிக்க விரும்பினால் , ஒவ்வொரு வசனத்தின் ஞானத்தையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். .......... 

(
திருக்குர்ஆன் 7.26) ...........“ இதே பூமியில் நீங்கள் வாழ்வீர்கள். இதிலேயே நீங்கள் மரணமும் அடைவீர்கள். இதிலிருந்தே நீங்கள் வெளியாக்கவும் படுவீர்கள்.”.........

(
குர் ஆன் 71.35) ...............“உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் என்றென்றும் உயிருடன் இருப்பதா?”

(
குர் ஆன் 20.56) .................. “இதிலிருந்தே (பூமியிலிருந்தே) நாம் உங்களை படைத்தோம். அதன் உள்ளேயே உங்களை திரும்பச் செய்வோம். அதிலிருந்தே உங்களை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துவோம்.” .................... 
மேற்சொன்ன வசனங்கள் ஒருவர் பூமியை விட்டு வெளியே வாழ முடியாது என்பதை தெளிவாக காட்டுகிறது. ... 
இதற்கு மாறாக ஒருவர் உயிரோடு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள்..................... 

(
குர் ஆன் 4.82)................. “அவர்கள் குர் ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடம் இருந்து வந்ததாக இருப்பின், நிச்சயமாக அவர்கள் பல முரண்பாடுகளை கண்டிருப்பர்.” ............. 

எனவே பூமியில் பிறப்பதும் இறப்பதும் இறை நியதியாக இருப்பதாலும் , மேலும் அதை பற்றி பல வசனங்கள் எடுத்துரைப்பதாலும் , அதற்கு மாறாக ஈஸா நபி உயிருடன் இருப்பதாக நம்புவது குர் ஆனில் முரண்பாடு இருப்பதாக கருத வேண்டியதிருக்கிறது………. அல்லது, நீங்கள் நினைக்கும் இந்த குர் ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து, அதாவது, PJ விடமிருந்து வந்ததாக கருத வேண்டியது வரும்........... 

எனவே 4.81-ன் படி பூமியிலே பிறந்து, இறப்பது இறை சட்டமாக இருக்க இந்த சட்டத்திற்கு எதிராக ஒரு வசனத்திற்கு நீங்கள் பொருள் கொடுக்க நினைத்தால் குர்ஆனில் முரண்பாடு இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீகள் என்பது தான் பொருள். ............ 
எனவே 5.76ல் ஈஸா ஒரு தூதர் மட்டும் தான். ஒரு தூதர் என்ற முறையில் ஏனய தூதர்கள் எப்படி இறந்தார்களோ அப்படி இறந்துவிட்டார்கள் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

அன்புள்ள NASHID இன் (april 27 தேதி கடிதத்திற்கான பதில்- தொடர் 2 )
நீஒருவர் நோய் வாய்ப்படுகிறார், சக்கராத் நிலையில் படுக்கிறார், திடீரென பேச்சு, மூச்சு இல்லை. இறந்து விட்டார் என்று அனைவரும் எண்ணுகிறார்கள். நாடித் துடிப்பை பார்த்த இன்னொருவர், இல்லை, அவர் இன்னும் இறக்கவில்லை என்று சொல்கிறார். என்னது? ஒரு மனிதனை பார்த்து, அவர் இறக்கவில்லை என்று சொல்வதா? அய்யகோ, இது ஷிர்க் அல்லவா? எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டாய் என்று தான் அவரைப் பார்த்து சொல்வீர்களா? ஒருவர் இப்போது இறக்கவில்லை, இனிமேல் தான் இறப்பார் என்று சொல்வதற்கும், இப்போதும் இறக்கவில்லை, எப்போதும் இறக்கவே மாட்டார் என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? 

இன்றைய தேதி வரை ஈசா நபி இறக்கவில்லை, ஆனால் அவர் ஒன்றூம் நித்திய ஜீவன் இல்லை, அவரும் இறக்கக்கூடியவர் தான். அவரது ஆயுள் நீட்டிக்க்ப்பட்டிருக்கிறது, அவ்வளவு தான்.’ ............................................................................................................................... 
என் பதில்: ........................ ஒருவர் சக்கராத் நிலையிலோ, coma நிலையிலோ சில வருடங்கள் இறக்காமலோ அல்லது இறந்தது போல்... என்றெல்லாம் வைத்துக்கொள்வோம். ஆனால் அவருடைய உடல் எந்த அளவுக்கு function ஆகுகிறதோ அந்த அளவுக்கு உடலுக்கு தேவையான காற்றும்,உணவும் ,நீர் ஆகாரமும் கொடுக்கப்படாமல் இருந்தால் அவர் கட்டாயம் இறந்தே போய் விடுவார்…………… 
நாம் நம்முடைய வயது, உடல் அமைப்பு, செய்யும் வேலை, இதற்கு ஏற்றார் போல் காற்றை சுவாசித்தும், நீரை குடித்தும், உணவை உண்டும் வருகிறோம். அதை போல comaவில் இருக்கும் ஒருவர் உடலால் எந்த ஒரு இயக்கமும் இல்லாத காரணத்தினால் குறைந்த அளவு நீர் ஆகாரம் போதுமானது என்பது மட்டுமல்ல; அந்த மனிதர் எவ்வளவு உட்கொள்கிறாரோ அந்த அளவுக்கு அவர் இயற்கை கடனை (toilet) நிறை வேற்ற வேண்டியும் வருகிறது. நீ மேலே காட்டிய உதாரணம் இந்த இயற்கை விதிக்கு உட்பட்டதே. ………
A)
அதாவது சக்கராத் நிலையில் இருப்பவரை இப்போது இறக்க மாட்டார் பிறகு தான் இறப்பார் என்று சொல்வது என்பதும், 2000 ஆண்டுகளாக இந்த இயற்கை விதிக்கு அப்பாற்பட்ட முறையில் உண்ணாமல் குடிக்காமல் toilet போகாமல் ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புவதும் ஒன்றல்ல. ................ 
B)
நீ காட்டிய உதாரணத்தின் படி ஈஸா நபியை சக்கராத் நிலையிலாவது உயிரோடு வைக்கவேண்டும் என்று நீ எழுதியுள்ளது தான் வேடிக்கை......... மேலும் ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு வசனத்தை காட்ட முடியாத நீ சக்கராத் நிலையிலுள்ள ஒருவரை உதாரணம் காட்டியிருப்பது வேடிக்கயிலும் வேடிக்கை. ............... 
(
குரான் 21. 9 ) “நாம் தூதர்களுக்கு உணவு உண்ணாத உடல்களை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்ததுமில்லை 

அன்புள்ள NASHID இன் ( ஏப்ரல் 27 தேதி கடிதத்திற்கு பதில்- தொடர் 3 )....................... நீஉலகம் அழியும்முன் எல்லா மனிதர்களையும் போன்று அவரும் இறக்கத்தான் போகிறார் நித்திய ஜீவன் அல்லாஹ் ஒருவன் தான். இப்படி புரிகையில் ஷிர்க் எங்கே நுழைகிறது?
……………………………………………………………………… 
பதில்:………………..( குர்ஆன் 16: 21,22 ) “அவர்கள் அல்லாஹ்வை அன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்களால் எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களே படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணம் அடைந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்ல. மேலும் எப்போது எழுப்பப்படுவர் என்பதனை கூட அவர்கள் அறிவதில்லை.”…………………………………… 
இவ்வசனத்தில் இணை வைத்தலைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இணை வைப்பவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களான, சிலைகள், அவ்லியாக்கள், நபிமார்கள் போன்றவர்களை அல்லாஹ்வை அழைப்பது போல் அழைக்கின்றார்கள் என்று கூறுகின்றான். .............. மேலும் அந்த பொய் கடவுளர்களால் (சிலைகள், அவ்லியாக்கள், நபிமார்கள்...) எதனையும் படைக்க முடியாது என்பதையும், அவர்களே படைக்கபட்டவர்கள் என்றும்; ...............மேலும் அவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்றும், அவர்கள் உயிருள்ளவர்கள் அல்ல என்றும் கூறிக்காட்டு கின்றான்………………………………… 
இவ்விடத்தில் உண்மையான கடவுளுக்கும் (அல்லாஹ்), பொய் கடவுளுக்கும் உள்ள சில அடிப்படையான வேறுபாடுகளை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். அதாவது பொய் கடவுளால் எதையும் படைக்கமுடியாது என்றும் பொய் கடவுள் மரணித்துவிட்டார்கள், உயிருள்ளவர்கள் இல்லை என்றும் இறைவன் கூறுகின்றான். …………………………………………………………..

இன்று உலகில் பெரும்பான்மை மக்களான கிறிஸ்தவர்கள் ஈசாவை வணங்கிக்கொண்டு இருக்கின்றனர். எனவே பொய் கடவுளான ஈசாவை வணங்காதீர்கள், ஏனென்றால் அவர் மரணித்து விட்டார் உயிருடன் இல்லை என முழு உலக கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வசனம் அறிவுறுத்துவதன் மூலம் உலகளாவிய ஷிர்க்கிலிருந்து மக்களை விடுவிக்கிறது………………………………………………………….. அது மட்டுமல்ல பொய் கடவுள் இறந்துவிட்டனர்... என்ற இந்த வசனத்தின் அடிப்படையில் மக்களால் கடவுளாக வணங்கப்படும் ஈஸா இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளாமல், ஈஸாவை உயிரோடு வைத்திருக்கின்ற இந்த முஸ்லிம் ஆலிம்கள் இணைவைப்பவர்களே என்றும் இந்த வசனம் காட்டுகின்றது................................................................. 
ஆரம்பத்தில் , அவ்லியாக்கள் உயிருடன் இருப்பதாக நம்பி அவர்களிடம் வேண்டும் முஸ்லிம்களின் நம்பிக்கை தவறு, என்று, PJ போன்ற மௌலவிகள் , மேற்சொன்ன ஆயத்தை வைத்து பிரச்சாரம் செய்தார்கள். ................................................ 
ஆனால் தவ்ஹீதின் வட்டம் உலகளாவியது என்பதை ஆலிம்கள் புரிந்து கொள்ளாததற்கு ஒரு காரணம் மிர்சா சாகிபை மறுக்கவேண்டும் என்பதும் ,அவர்கள் எதிர்பார்க்கிற ஒரு நபி/மசிஹ்/இமாம் வராதது தான்................................................... 

குர்ஆன் (35:::20,21,22,23) “குருடர்களும் பார்வையுடையவர்களும் சமமானவர் அல்லர்... ...உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமானவர் அல்லர்.” ...............................
இந்த ஆயத்தை ஆதாரமாகக்கொண்டு, ஒரு கிறிஸ்தவ சகோதரன் இவ்வாறு கேட்கிறான், அதாவது முஸ்லிம்களின் கருத்து படி, குரானின் படி , இறந்து போன முஹம்மத் அவர்களும், உயிரோடு இருக்கிற ஈஸாவும் சமமாக இருக்க முடியுமா? யார் உயர்ந்தவர்? என்று........................................................................ உங்கள் பதில் என்ன? 
யார் உயர்ந்தவர்கள்? இந்த கேள்வி நான் மட்டும் கேட்கவில்லை. 100 வருடங்களுக்கு முன்னர் , ஆரம்பத்தில் குர் ஆன் ஹதீஸ் வாதம் புரிந்த 1000 கணக்கான முல்லாக்கள் இஸ்லாத்தை விட்டு விலகி கிறிஸ்தவ பாதிரிகளாக மாறி ,மேற்சொன்ன கேள்வியை விடுத்தார்கள்... அதற்கு hazrat அஹ்மத் (அலை) அவர்கள் அந்த கிறிஸ்தவர்களுக்கு சாட்டை அடி கொடுத்து நபி ஸல் அவர்களின் கண்ணியத்தை காப்பாற்றினார்கள் .. 

Hazrat
அஹ்மத் அலை அவர்களை மறுக்க வேண்டும் என்பதர்க்காக, நபி ஸல் அவர்களுடைய கண்ணியத்தை களங்கபடுத்துவது தான் குர்ஆன் ஹதீஸ் வாதம் பேசுபவர்களின் தவ்ஹீதா?

(
குர் ஆன் 21.35) “உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் என்றென்றும் உயிருடன் இருப்பதா?” 

அன்புள்ள NASHID இன் ( ஏப்ரல் 27 தேதி கடிதத்திற்கு பதில் – thodar 4 ) ............. “ஹதீஸ்கள் அல்லாஹ்விடமிருந்து வந்தவை இல்லை என்கிற கொள்கை கொண்டவரா நீங்கள்?
ஹதீஸ்களிலே, ஈஸா நபியின் மீள்வருகை பற்றி சொல்லப்பட்டுள்ளது, 
அவரது வருமை என்பது கியாமத் நாளின் முக்கிய பத்து அடையாளங்களுல் ஒன்று என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் இவ்வுலகில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்வார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தஜ்ஜாலை அவர் தான் கொல்வார் என்றும், ஜிஸ்யா வரியை ஒழிப்பார்கள் என்றும் பல வகைகளில் ஈஸா நபியின் வருகை பற்றி ஹதீஸ்கள் விளக்குகின்றன.
இந்த ஹதீஸ்கள் எல்லாம் குப்பைகளா? இதையெல்லாம் அல்லாஹ்வின் வஹி என ஏற்க மாட்டீர்களா? அல்லது இதற்கு வேறு விளக்கங்கள் வைத்திருக்கிறீர்களா?
என்கிற இந்த கேள்வியை நான் பல நாட்களாக கேட்டு வருகிறேன். இதற்கு இதுவரை எந்த பதிலையும் சொல்லாத நீங்கள், இன்றைக்கு, 
"
இது மார்க்கத்தை நீ விளையாட்டாக ஆக்கிவிட்டாய் என்பதை காட்டுகிறது" என்று ஒற்றை வரியில் விமர்சனம் செய்கிறீர்கள் என்று, நீ எனக்கு எழுதியுள்ளாய். …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

எனது பதில்:………………………………. மேலே குறிப்பிட்ட படி எதையுமே நீ என்னிடம் கேட்கவுமில்லை அதற்கு நான் பதில் கூறவுமில்லை. ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பதற்கு பதிலே சொல்லாத நீ, ஈஸா மரணித்து விட்டார் என்று நம்பிக்கை கொண்டிருக்கும் என்னிடம் ஈஸா வருவதற்கான ஹதீஸை கேட்டாய் ... இதற்கு பதிலாக தான் நீ மார்க்கத்தை விளையாட்டாக ஆக்காதே என்று நான் பதில் எழுதினேன்...................................................... ஆனால் நீயோ , நான் எழுதாத ஒன்றை, எழுதியதாக குறிப்பிட்டுள்ளாய். 10 அடையாளம், 40 ஆண்டு ஆட்சி, தஜ்ஜால், ஜிஸ்யா என்பது பற்றி நான் எதுவுமே எழுதாத நிலையில் நான் அந்த ஹதீஸ்களை எல்லாம் குப்பைகள் என்று சொன்னது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளாய். அன்புள்ள nashid, ஏன் அவ்வாறு எழுதினாய்?............................................................ 
நாம் இருவரும் கருத்துக்களை பரிமாறுவதன் மூலம் உண்மையை கண்டறிந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தோம் என்பதை மறந்து விடாதே....................... எனவே தயவு செய்து இனிமேல் அவ்வாறு எழுதாதே. 

அன்புள்ள NASHID இன் ( ஏப்ரல் 27 தேதி கடிதத்திற்கு பதில் – thodar 5 ) …………………………………………………………………….. 1) “நான் பல முறை பொய் நபிக்கும் உண்மையான நபிக்கும் உள்ள வேறுபாட்டை கேட்டேன்..... 30 பொய் நபிக்கும் ஒரு உண்மையான நபிக்கும் அடிப்படையான வேறுபாட்டை கேட்டிருந்தேன்.. ஆனால் பதில் இல்லை. .உண்மை நபி மட்டும் தான், தன் எல்லா வாதங்களையும் கொள்கை, ஈமான்,, திட்டங்கள், அனைத்தும் அல்லாஹு அறிவித்ததன் அடிப்படையில் கூறுகின்றார்கள், மேலும் அல்லாஹுவை சாட்சியப்படுத்தி நிரூபிப்பதற்காக ஆணையிட்டு கூறி உள்ளார்கள் என்று கூறியிருந்தேன்.................. .
நீ, பொய்யையே மூலதனமாக கொண்ட மிர்சா சாஹிப் அல்லாகுவின் மீது சத்தியம் செய்தால் நம்பவேண்டுமா என்று கேட்டுள்ளாய்.? ........................................... நீ குறிப்பிட்டபடி பொய்யையே மூலதனமாக கொண்ட மிர்சா சாஹிபுக்கு அல்லாஹு தண்டனை வழங்கவில்லையே ஏன்? உலகில் சாதாரண விஷயத்தில் கூட பொய் பேசுபவர்கள் பிடிக்கப்படுகிறார்கள் என்பது தெரியாத விஷயமா. பொய் நபிமார்கள் அழிந்துபோன வரலாறு தெரியாதா? என்று நான் கேட்டேன். பதில் இல்லை.. ………………………………………………..,, 
ஆனால் நான் ஏற்றுக் கொண்டிருக்கும் ஏகத்துவ கொள்கை கூட அத்தகைய சத்தியத்தின் மீது நிறுவப்பட்டது தான் என்று நீ எழுதிஉள்ளாய். எந்த சத்யம்? யார் செய்தது? எப்போது செய்தது? சும்மா எழுதினால் போதுமா? பதில் தா என கேட்டேன் .....எந்த பதிலும் இல்லை ஏன் ?

அன்புள்ள NASHID இன் ( ஏப்ரல் 28 தேதிக்கான கடிதத்திற்கு பதில் -thodar 6 ) .......... 1 ) நான் ஏற்கனவே பல தடவை கூறியுள்ளேன், அதாவது நுபூவ்வத் என்பது பெரிய விஷயம், எனவே அவசரப்படாமல் பொறுமையாக கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்று.. மேலும் அல்லாஹுவிடம் துஆ செய்து ,இஸ்திக்பார் செய்து உண்மையை ஏற்றுக்கொள்ள OR பொய்யலிருந்து விலக முயற்சி செய்யவேண்டும் என்று ..
நான் மேலே குறிப்பிட்டுள்ளது மூமீன்களுடைய ஸிபத்து தானே? அதை நீ மீறிஉள்ளாயே !. ......................
2)
எனது பொறுப்புகள் மற்றும் என் உடல் நிலையை கருத்தில் கொண்டு நான் பொறுமையாக பதில் சொல்வேன் என்றும் எழுதியிருந்தேன். அவசரப்படாமல் மெதுவாக பதில் தந்தால் போதும் என்று நீ பதில் எழுதியது ஞாபகம் இல்லையா? 
3)
மிர்சா சாஹிப் பற்றி ஆட்சேபனை கூறுவதாக இருந்தால் அன்னாரின் நூல்களை நீ நேரடியாக படிக்கவேண்டும் என்றும், மிர்சா சாஹிபின் எதிரிகளின் நூல்களை படித்து ஆட்சேபனை செய்யாதே என்றும் கூறியுள்ளேன். 
4)
மிர்சா சாகிபை பற்றி அவதூறுகளை கூறும்போது அன்னாரின் நூல்களின் பக்கத்தை மட்டும் காட்டினால் போதாது ,அவதூறுகளை அப்படியே எழுதினால் தான் என்னால் புரிந்து , பதில் எழுத முடியும் என்றும் எழுதினேன்.. 
நீ எதையுமே கண்டுகொள்ளவில்லை, மேலும் நான் பதில் தருவதற்கு முன்னரே நீ மீண்டும் அவதூறுகளை அவிழ்த்துள்ளாய். எனவே கருத்து ஒழுங்குமுறை கூட உனக்கு தெரியாதது மட்டுமல்ல, நபிமார்களை தூற்றிய காபிர்களுடைய நடைமுறையை தான் நீ பின் பற்றி உள்ளாய்................ இதற்கு காரணமான , PJ இன் ஷிர்க் ஸ்கூல்-லிருந்து நீ வெளியே வந்தால் தான் கருத்து பரிமாற்றம் செய்யும் தகுதியை நீ அடைவாய். 
27
ஆம் தேதி நீ வெளியிட்ட கடிதத்திற்கு எனது பதிலை எதிர்பார்க்காமல் , 28 ஆம் தேதி அன்றே மிர்சா சாகிபை பற்றி அவதூறுகளை வெளியிட்டுள்ளாய்.. 
120
வருடங்களாக இந்த அவதூறுகளை , நிராகரிப்பவர்கள் தூற்றுவதை, நான் அறியாமல் இல்லை.. குரானில் காட்டும் அதே நிராகரிப்பவர்களை தான் நீ பின் பற்றியுள்ளாய்.... இதிலிருந்து தூற்றுவதற்கு கூட உன்னிடம் புது சரக்கு எதுவும் இல்லை ...... உன்னிடம் போய் விவாதம் செய் என்று அன்பிற்குரிய அண்ணன் ஷாஜகான் சாஹிப் கூறியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை..................... 
ஆட்சேபனைகளை முழுமையாக எடுத்து வைத்து விவாதம் செய்ய தெரியாத உன்னை, தந்தை என்ற முறையில் br ஷாஜகான் அவர்கள் அறிவுறுத்தாமல் இருப்பது அவரும் ஷிர்க் ஸ்கூலில் படித்து நிராகரிப்பாளர்களுடைய நடைமுறையை பின்பற்றுகிறார் என்பது வெட்ட வெளிச்சம். ...... 
நீ பிளேக் பற்றி மிர்சா சாஹிப் குரானில் எங்கே சொல்லியுள்ளார் என்று கேட்டதற்கு , 22 ஆம் தேதி பதிலில் குரான் வசனத்தை note பண்ணியிருந்தேன். அதற்கு நீ " இதை துணிச்சல் என்று சொல்வதா? அல்லது அல்லாஹ்வின் மீது இட்டு கட்டும் தன்மை என்று சொல்வதா? "என்று எழுதியுள்ளாய்....... 

என் பதில் :: 
அந்த வசனத்தில் உனக்கு புரியாதது என்ன என்பதை எடுத்துக்காட்டினால் என்னால் பதில் சொல்ல முடியும். அதை விட்டு விட்டு என்னுடைய துணிச்சலையோ உன் கோழைத்தனத்தையோ பேசுவதா விவாதம்? 
என்னுடைய பதிலை எதிர்ப்பார்ப்பதற்கு முன்னரே மீண்டும் 2 ஆம் தேதி mirza சாஹிப் பற்றி அவதூறுகளை கூறியுள்ளாயே! 

நீநான் தான் அல்லாஹ் என்று சொன்ன ஒருவர் எவ்வாறு அல்லாஹ்வின் நபியாக இருப்பார். ஞாயப்படி அவர் பிர்அவுனின் இளைய தம்பியாக அல்லவா இருக்க வேண்டும்.” என்று எழுதிஉள்ளாய் . 

என் பதில் A:
ஒரு நபி ஷிற்கை உடைப்பதற்கும் தவ்ஹீதை போதிப்பதற்கும் தான் வருகிறார்..... எனவே நீ, ஒரு நபியினுடைய வார்த்தைகளை புரிவதற்கு முன், ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்ற ஷிர்க்கை உனக்கு கற்றுத்தந்த , ஷிர்க் school-லிருந்து நீ வெளியே வர வேண்டும் என்பதற்காக தான் , முதலில் ஈஸா நபி வஃபாத்தைப் பேச வேண்டும் என்று கூறியிருந்தேன். 
B : (
குர்ஆன் 8:18) “நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான்.” 
போர்க்களத்தில் நபி ஸல் அவர்கள் எதிரிகளின் மீது மண்ணை வீசினார்கள் என்பது மேலுள்ள வசனம் சுட்டிக்காட்டுகிறது. 

மேலே வசனத்தின் படி என்னுடைய கேள்வி என்னவென்றால், நபி ஸல்அவர்கள், எப்படி அல்லாஹ் ஆனார் ? என்பதற்கு நீ பதில் சொல்ல வேண்டும். 
நீ முஸ்லிமின் வயிற்றில் பிறந்துவிட்டாய் என்பதனால் இதை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறாய். ஒரு வேளை நீ யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ இருந்தால், நீயே, இந்த வசனத்திற்குமுஹம்மத் எப்படி அல்லாஹ் ஆனார்என்ற கேள்வியை எழுப்புவாய். அந்த கண்ணோட்டத்தில் நீ இருந்து கொண்டு ,இந்த கேள்விக்கு (8.18 ) உரிய பதிலை உன் ஷிர்க் school-ல் கேட்டு பதில் சொல்................... 
C: ...........
பிர்அவுன் ஒரு நபியை எதிர்த்தவன், ஆனால் mirza சாஹிபோ நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள். எனவே mirza சாஹிப், பிர்அவுன் -ன் தம்பி என்ற உன்னுடைய அவதூறு தவறு.

D:
பிர்அவுன் நபியை அழிப்பதற்கு முயன்றான். ஆனால் mirza சாஹிப் நபி ஸல் அவர்களை எல்லா நபி மார்களை விட மேலானவர்கள் என்று நிரூபித்துக்காட்டினார்கள். பிர்அவுன் அல்லாஹ் அழித்தான். Mirza சாகிபுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கினான். 

E: mirza
சாஹிப் Abu-Jahlலின் மச்சினன் என்று எழுதியுள்ளாய். 
பதில்: Hazrat அஹ்மத் அலை அவர்களையும் , பின்பற்றியவர்களையும் நீங்கள் கொடுமைப்படுத்துவதைப் போல் ; Abu-Jahl , நபி ஸல் அவர்களையும் அவர்களை பின்பற்றியவர்களையும் கொடுமைப்படுத்தினான். ஆனால் mirza சாஹிப் அவர்கள் நபி ஸல் அவர்களை கண்ணியப்படுத் தினாரகள். 
Abu-Jahl
லை அல்லாஹ் அழித்ததோடு அவனது வாரிசே இல்லாமல் ஆக்கினான். ஆனால் mirza சாஹிப் அவர்களை அல்லாஹ் வளர்ந்தோங்கச் செய்து அன்னாரின் வாரிசுகளை உலகெங்கும் மேலோங்கச் செய்தான்........................................................................................................எனவே அன்புள்ள nashid ,நீ என்னோடு பொறுமையுடன், (அவசரப்படாமல்), உண்மையை அறிய விரும்பி விவாதம் செய்வதை விட்டு விட்டு , நீ அவதூறுகளை மட்டும் கூறி, மல்லாந்து படுத்து கொண்டு காரி துப்புவாய் என்றால் அதற்கு நான் என்ன செய்யமுடியும். 
எனவே அழகான முறையில் நீ விவாதம் செய்ய முன்வருவாயானால் நான் எல்லா ஆட்சேபனைகளுக்கும் நான் பதில் தருவேன்.. ............................................................................................எந்த நபி இஸ்லாத்தை தந்தார்களோ அந்த நபி, தன் உம்மத் யூத கிறிஸ்தவர்களைப் போன்று ஆகிவிடுவர் என்றும் யூத கிறிஸ்தவர்கள் தன் தாயிடம் தகாத உறவை வைத்துக்கொண்டால், தன் உம்மத்தும் அவ்வாறு செய்வார்கள் என்ற ஹதீஸை நீ மிகவும் ஆழ்ந்து சிந்திப்பாயாக. ..........
எனவே இந்த மக்களை ஆலிம்களால் சீர் திருத்த முடியுமா.. ?
(
குர்ஆன்-3:185) “அவர்கள் உம்மை பொய்யாகுகிறார்கள் என்றால் உமக்கு முன்னர் தெளிவான அடையாளங்களையும், ஞான நூல்களையும், ஒளி மயமான வேதத்தையும் கொண்டு வந்த பல தூதர்களும் பொய்யாக்கப்பட்டு இருந்தனர்
மீண்டும் நினைவூட்டுகிறேன், 1)பொய் நபிக்கான சான்றை குரானிலிருந்து காட்டி , மேலும் பொய் நபியை ஏற்றுக்கொண்டவர்களை அழித்ததாக குரானிலிருந்து ஆதாரம் காட்டு.. ஏன் என்றால் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களை பல வகையில் அழித்ததாக குரானில் பல வசனங்கள் கூறுகிறது .. தூற்றுவதை விட்டு விட்டு அழகிய முறையில் விவாதம் செய்ய வா .......கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக