புதன், 7 மே, 2014

வாக்களிப்பது நம் கடமை


நம் சமூகத்து மக்கள் தங்கள் வீட்டு பெண்கள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரையும் வாக்குப்பதிவுக்கு அழைத்து செல்ல வேண்டும்.

வீட்டுப் பெண்கள் வாக்குச்சாவடி சென்று வரிசையில் நின்று வாக்களிப்பதற்கு சங்கூஜப்பட்டு நின்று விடாதீர்கள்.

ந‌ம் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தியை அல்லாஹ் நம் கைகளில் தந்திருக்கிறான். அதை வீணடிக்கக் கூடாது.

நான் ஒருத்தி ஓட்டு போட்டு தானா ஆட்சி தீர்மானிக்கப்பட்டு விடப்போகிறது? என்று எண்ணுகிற போங்கும் தவறானது.

வீட்டில் கரன்ட் இல்லையென்றால் அரசை திட்டுகிறோம், ரேஷன் அரிசியில் கல் என்றால் அரசை திட்டுகிறோம், பால் விலை ஏற்றப்பட்டால் அரசை திட்டுகிறோம்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டாலும், மதவாத சக்திகளின் தூண்டுதலால் அமைதியான வாழ்விற்கு குந்தகம் ஏற்பட்டாலும் அரசாங்கத்தையும் ஆள்வோரையும் திட்டுவதில் நாம் குறை வைப்பது கிடையாது தானே?

நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சிரமங்களுக்கு இவ்வாறு அரசை திட்ட நமக்கு உரிமை எப்போது வரும்?
நாம் விரும்புகிற அரசை நாமே தேர்வு செய்ய சென்றால் தான் வரும்.

வாக்களிக்கும் உரிமையை நாம் பயன்படுத்தினால் தான் ஆள்வோரை குறை கூறும் உரிமையை நாம் பெறுவதிலும் நியாயம் இருக்கும் என்பதை மனதில் கொண்டு, 18 வயது நிரம்பிய வீட்டிலிருக்கும் அனைவருமே இன்றைய தினம் (24 ஆம் தேதி) நாம் விரும்பும் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வருவோம் !

இன்ஷா அல்லாஹ், மே 16, நாம் விரும்பும் ஆட்சி நம் கைகளில் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக