சனி, 24 மே, 2014

நம்பிக்கை என்பது நாவில் அல்ல


வாகன‌ அணிவகுப்புகள் இல்லை, இடது பக்கம் நான்கு பேர், வலது பக்கம் நான்கு பேர் என்கிற படோதாபங்கள் இல்லை, ஆடம்பர வாழ்க்கையில்லை..

ஏகத்துவவாதிகளின் மார்க்க காரியங்களில் மாத்திரமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் கூட‌ அந்த உத்தம நபிகளாரின் பிரதிபலிப்பு மின்னும்.

அந்த மகத்தான மனிதர், இந்த உம்மத்தின் தலைவர் நபி (சல்) அவர்கள் அத்தகைய படோதாபங்களை மேற்கொண்டதில்லை. 
அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் சஹாபாக்கள் புடை சூழ அணிவகுத்ததில்லை,
எந்த சபையிலும் தன்னை தனித்துவமாக அவர்கள் காட்டியதில்லை.
எதிரிகளின் நடமாட்டமோ என்கிற சந்தேகம் வலுத்த போது தனியொரு ஆளாக குதிரையேறி அந்த சந்தேகத்தை தீர்த்து விட்டு வந்த நெஞ்சுரமிக்க தலைவரை பெற்றவர்கள் நாம்.

அந்த மாமனிதரை பின்பற்றுகிறோம் என வெறும் வாயில் கதையளந்து காற்றில் பறக்க விடும் பெயர்தாங்கிகளல்ல தவ்ஹீத்வாதிகள்.

அதை செயலில் காட்டுபவர்கள் !

எத்தகைய நிலை வந்தாலும் நிலை தடுமாறாதவ்ர்கள். அத்தகைய ஈமானுக்கு தான் அல்லாஹ் வெற்றியை மென்மேலும் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

அல்லாமல், தவ்ஹீத்வாதிகளை வெட்டி வீழ்த்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல.
அதை செய்வதற்காக‌ நான்கு மாத திட்டங்களை தீட்ட வேண்டியதுமில்லை.

உனது கையால் தான் இறப்பார் என்று அல்லாஹ் விதித்திருக்கிறான் என்றால் அது நடந்தே தீரும், நீ நான்கு மாத திட்டத்தை தீட்டாமல் முயற்சி செய்தாலும் நடக்கும்.

உன்னால் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட‌ முடியாது என்று அல்லாஹ் எழுதியிருந்தானேயானால், நீ ஒட்டு மொத்த உலகத்தை அழைத்து வந்தாலும் அவர் தலை மயிரை கூட அசைத்துப் பார்க்க முடியாது !

இதை வாயளவிலல்லாமல், உளப்பூர்வமாக நம்பி அதை அனுதின வாழ்க்கையிலும் கண்ணார கண்டு அனுபவித்து வருபவர்கள் தான் தவ்ஹீத்வாதிகள்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று கூறுவீராக! (9:51)

நீ செய்யும் ஒவ்வொரு துரும்பு வேலைக்கும் ஏகத்துவத்தின் கொடி இன்னும் மேலோங்கத் தான் செய்யும் !
நீ காட்டும் ஒவ்வொரு எதிர்ப்புக்கும் அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் இன்னும் சுடர் விட்டு தான் எரியும் !!

அதை உன்னால் அணைத்து விட முடியாது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக