வியாழன், 22 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (A)


அன்புள்ள nashid, assalamu alaikum wa rahmathullah.
எனது இந்த தொடர் -ஈஸா நபி subject-1 ஆகும்.
.
(1) அன்புள்ள Nashid, நீ உனது முகவுரையில், “உங்கள் கொள்கையை சவக்குழிக்குள் தள்ளாமல் ஓயமாட்டோம்” என்று எழுதியுள்ளாய்.

எனது பதில்: 

A) ஆரம்பத்தில் அன்புடன் நீ என்னுடன் கருத்துக்களை
எடுத்துவைத்தாய். ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பதற்கு, போலி சான்றுகளை தந்து என்னை மடக்கி விடலாம் என்று கருதினாய். நான் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்கான பல வசனங்கள் இருந்தபோதிலும், வெறும் 5 வசனங்களை மட்டும் தான் எழுதியிருந்தேன். அதற்கு பதில் தர முடியாமல் திணறி தத்தளித்த நீ, வேறு வழி இல்லாமல் சவக்குழிக்கு தள்ளி விடுவேன், நரகத்திற்கு செல்லும் கொடிய கொள்கை, என்றெல்லாம் ஓலம் இடுகிறாய். அதற்கு காரணமே தீய ஆலிம்களின் school-ல் நீ படித்ததும், ரசூலுல்லாஹ்வின் சுன்னத்தை கடைப்பிடிக்காததும் தான்.

B) நான் அஹ்மதிய்யா ஜமாஅத்தில் இணைந்து 28 வருடங்கள் ஆகிறது. 28 வருடங்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேற்றிய என்னை, உன் தந்தை shajahan-ஆல், nizar-உடைய அஹ்மதிய்யா கொள்கையை சவக்குழிக்குள் தள்ள முடியவில்லையே, ஏன்? உன் தந்தையாலும் செய்ய முடியாததை, உன்னாலும் செய்ய முடியாது. ஏன் என்றால் இது அல்லாகுவின் ஜமாஅத் என்பதை நினைவில்கொள். .

C) 28 வருடமாக உன் தந்தையால் முடியாததை பற்றி பேசுவதை விட்டு விட்டு, ஈசாவை பற்றிய உங்கள் ஷிர்கிலிருந்து, வெளி வரும் வழியை பார்.

D) உனது சிறிய தந்தையிடம் பேசிக்கொண்டிருக்கும் nashid மகனே, நான் 25 வருடங்களாக அஹ்மதிய்யா ஜமாஅத்தின் ஒரு சகோதரனாக மட்டும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனவே எனது மகனுடைய வயதை ஒத்த nashid-ஏ நாவை அடக்கி எழுது. 120 வருடங்களாக அஹமதிய்யா ஜமாஅத்தை எதிர்த்த மக்கள், முந்திய நாள் பொழிந்த மழையில் வளர்ந்த காளான்களே என்பதை நீ புரிந்து கொள்..

E) உன்னால் முடிந்தால் யார் நரகத்திற்கு போக வேண்டும் ,யார் சவக்குழிக்கு போக வேண்டும் என்பதை ஆதாரம் காட்டி நிரூபி. அதை விடுத்து சலசலப்பு வார்த்தைகளால் நீ ஜெயித்து விட முடியாது.

F) Mirza சாகிபின் வண்டவாளம் என்று ஒரு விரல் காட்டி எழுதியுள்ளாய். ஆனால் 3 விரல்கள் உங்களை நோக்கி உள்ளது என்பதை நீ மறந்துவிடவேண்டாம்.
==================================================

(2) நீ எழிதியுள்ளாய்: “நபிக்கு பிறகு இன்னொரு நபி வரலாம் என்பது குஃப்ர், இறை நிராகரிப்பு....” “அல்லாஹ்வின் வசனங்களை ஒரு தனி மனிதனால் கேட்க முடியும், கனவில் அல்லாஹ்வோடு ஒரு தனி மனிதனால் உரையாட முடியும் அந்த அற்புத ஆற்றல் ஒரு தனி மனிதருக்கு இருக்கிறது என்று mirza என்கிற மனிதனை அற்புத ஆற்றல் உடையவராக நம்புவது பச்சை ஷிர்க்.”

எனது பதில்:

A) நபிக்கு பிறகு இன்னொரு நபி வந்தால் குஃப்ர் என்று
எழுதியிருக்கிறாயே, என்ன ஆதாரம்?

B) ஒரு தனி மனிதர் அல்லாஹ்வின் வசங்களை கேட்கவோ கனவில் அல்லாஹ்வோடு உரையாடுவது பச்சை ஷிர்க் என்று எழுதியுள்ளாயே, என்ன ஆதாரம்?
ஆதாரம் இல்லாமல் குஃப்ர் என்றும் ஷிர்க் என்றும் பிதற்றுவதா விவாதம்?

(3) நீ எழுதியுள்ளாய்: குர்ஆன் ஹதீஸை விட்டு விட்டுஇன்னொரு நூலை வேத நூலாக கொள்பவர் மனமாரியவராவார். எப்படி கிறிஸ்தவருக்கு bible வேதநூலாகக் கருதப்படுகிறதோ அதைப் போன்று காதியானிகளுக்கு mirza அஹ்மதின் நூல் வெதநூல். ஆகவே எம்மை பொறுத்தவரையில் கிறிஸ்தவமும் கதியானிசமும் இஸ்லாம் அல்லாத வேறு மதங்கள். “

என் பதில்:

a) இன்னொரு நூலை வேத நூலாக நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று நீ கூறியிருப்பது ஆதாரமற்றதும் இட்டுக்கட்டும் ஆகும்.
எனவே தான் தீய ஆலிம்கள், எங்களூக்கு எதிராக எழுதியுள்ள அபத்தங்களை படித்து, எங்கள் மீது இட்டுக்கட்டுகளை கூறிஉள்ளாய் . இட்டுக்கட்டுபவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?
============================================================

இப்போது ஈஸா நபி subject க்கு வருகிறேன். MAY 4, தொடர் 1 part c இல் , நான் ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதற்கு சில வசனங்களை வைத்துள்ளேன். அதாவது,

1. ஈஸா ஒரு மனிதர் என்ற முறையில் இறந்துவிட்டார்……2. ஈஸா ஒரு தூதர் என்ற முறையில் இறந்துவிட்டார்........3. ஈஸா ஒரு பொய் கடவுள் என்ற முறையில் இறந்துவிட்டார்...........4. ஈஸா உண்ணாமல், குடிக்காமல் வாழ முடியாது, எனவே ஈஸா இறந்து விட்டார்..........5. நபி ஸல் அவர்கள் மரணித்து விட, முந்தியவர்கள் உயிரோடு இருப்பதா ? என்ற கேள்வியின் அடிப்படையிலும் ஈஸா நபி இறந்து விட்டார்.
என்று பல கோணங்களில் ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளேன்.

இவை யாவும் அல்லாஹ்வின் வசனமா? OR எனது கருத்தா?

எப்போதுமே நான் பதில் எழுதும்போது 1,2,3 என உனது கருத்துக்களை குறிப்பிட்டு a,b,c, என என் பதிலை எடுத்து வைத்துள்ளேன். இதை படித்தால் தெளிவாக புரிய முடியும்.

ஆனால் நீயோ ஒரு ஒழுங்கு முறையில் எழுதாமல, கருத்துகளை சிதறும் வகையில் அங்கும் இங்கும் எழுதி குழப்பி உள்ளாய்.

அதுமட்டுமல்ல அல்லாஹுவின் வசனங்களுக்கு, இன்னொரு வசனத்தை கொண்டு பதில் அளிப்பதை விட்டு விட்டு, குதர்க்கமாகவும், சொந்த கருத்துக்களை கூறியும், உலகில் உள்ள மக்களை ஆதாரம் காட்டியும் பக்கங்களை நிரப்பியுள்ளாய். மாறாக உருப்படியான பதில் எதுவும் நீ வைக்கவில்லை

1) எல்லா மனிதர்களை போன்று ஈசாவும் இறந்துவிட்டார் என்று நான் கேட்டால், பதில் என்ன சொல்லவேண்டும்? இதோ ஈஸா உயிரோடு இருக்கிறார் என்று குரானில் உள்ளது என்று சொல்ல வேண்டும். உன்னால் சொல்ல முடியவில்லை.
2) ஈஸா ஒரு தூதர் என்ற முறையில் ஈஸா இறந்து விட்டார் என்று ஒரு வசனத்தை காட்டினால், அவர் தூதர் ஆக இருந்தாலும் சரி, ஏனைய தூதர்களெல்லாம் இறந்துவிட்டாலும் சரி, ஈஸா இதோ உயிரோடு இருக்கிறார் என்று ஒரு வசனத்தை காட்ட வேண்டும். காட்ட முடியவில்லை .
3) ஈஸா ஒரு பொய் கடவுள் என்ற முறையில் இறந்து விட்டார் என்று அல்லாஹுவின் வசனத்தை காட்டினால், சரி தான், ஈஸா ஒரு பொய் கடவுள் தான், ஆனாலும் அல்லாஹு ஈஸா உயிரோடு உள்ளதாக கூறி உள்ளான் என்று ஒரு வசனத்தை காட்டவேண்டும்.
4) அதே போன்று உண்ணாமல் குடிக்காமல் ஒருவரையும் அல்லாஹு படைக்கவில்லை என்று ஒரு வசனத்தை காட்டினால், சரி தான், ஆனால் அல்லாஹு ஈஸா நபிக்கு உண்ண வேண்டிய தேவை இல்லை என்று சொன்னதாக ஒரு ஆதாரத்தை காட்டவேண்டும் .
ஆனால் ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஒரு ஆதாரமும் உன்னால் காட்ட முடியவில்லை.
============================================================

APRIL 30 தேதியிட்ட உன் பதிலில்

21.34 வசனத்தை குறிப்பிட்டு “ ஈஸா நபி என்றைக்கும் வாழ்பவர் அல்ல. அப்படி நாம் சொல்லவும் இல்லை. அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதி இருந்தாய்.

எனது பதிலில்

“அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று நீ எழுதியுள்ளதற்கு ஆதாரம் என்ன? “ என்று கேட்டிருந்தேன். இதற்கு நீ எந்த பதிலும் சொல்லவில்லையே, ஏன் ?

நான் குரானுடைய தெளிவான வசனங்களை ஆதாரமாக காட்டியபோது உனது சொந்த கருத்தை கொண்டு மறுத்து விட்டு, இன்னும் அதற்கு ஆதாரம் தரவில்லை.

இதிலிருந்து ஈஸா நபி உயிருடன் இருப்பதாக நீங்கள் நம்புவது கற்பனையின் அடிப்படையில் தான் என்றும், கிறிஸ்தவர்களுக்கு இணையாக நீங்களும் ஷிர்க் வைக்கிறீர்கள் என்பதும் புலனாகிறது.
============================================================

கடைசி பதிலில் ( MAY 10, தொடர் 1 பாகம் 3 )
இவ்வாறு எழுதி உள்ளாய்:

“ஐந்து ஆதாரங்களில் நீங்கள் வைத்த முதல் ஆதாரம் , 5:75. ஈஸா நபிக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற வசனம். அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற வசனத்தை எடுத்துக் காட்டி, பார்த்தீர்களா இதிலிருந்து ஈஸா நபி இறந்து விட்டார் என்று புரிகிறது என்று எப்படி வாதம் புரிகிறீர்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை.
அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டார்கள் என்கிற வசனமே அவர் மரணிக்கவில்லை என்கிற கொள்கைக்கு தான் ஆதாரமாக நிற்கிறது.……அவர் மரணிக்கவில்லை என்பதால் தான் அவர் உணவு உண்டதையெல்லாம் சொல்லிக்காட்டி சாப்பிடுபவர் இறைவனாக இருக்க முடியாது என்கிறான்.
முந்தைய நபிமார்கள் மரணித்து விட்டதால் அவர்கள் எப்படி கடவுள் இல்லையோ அதே போல் இவர் சாப்பிடுவதால் கடவுள் இல்லை.”

என் பதில் :

A) நான் 5.75 வசனத்தில் 2 பகுதிகளை காட்டி உள்ளேன். அதாவது “மர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை. நிச்சயமாக அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர் .”

நீயோ இந்த வசனத்தை முழுமையாக வைக்காமல், அதாவது முதல் பாதியை மறைத்து விட்டு, இரண்டாவது பாதியை மட்டும் எடுத்து வைத்து, ஈஸா நபி மரணிக்கவில்லை என்று கூறுகிறாய்.

அதாவது முதல் பகுதியான “மர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை” என்ற வசனத்தை கண்டும் காணாதது போல், மறைத்து விட்டு ,

இரண்டாவது பகுதியான “அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர்” என்ற வசனத்தை மட்டும் கூறி ஈஸா மரணிக்கவில்லை என்று எழுதிஉள்ளாய்.

இது உன் முதல் தவறு.

B) ஈஸா நபிக்கு முன்னர் உள்ள தூதர்கள் மட்டும் மரணித்துவிட்டதாக அல்லாஹு கூறவில்லை. மாறாக அல்லாஹு கூறுகிறான்
“மர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை. நிச்சயமாக அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர் .”

இப்போது முழு வசனத்தையும் படித்து பார்த்தால் புரியும், ஈஸா ஒரு தூதர் என்ற முறையில், ஏனைய தூதர்களை போன்று ஈசாவும் மரணித்து விட்டார்கள்.

மேலும் நீ எழுதி உள்ளாய் ,

“அவர் மரணிக்கவில்லை என்பதால் தான் அவர் உணவு உண்டதையெல்லாம் சொல்லிக்காட்டி சாப்பிடுபவர் இறைவனாக இருக்க முடியாது என்கிறான்”

C ) இப்போதும் முழுமையான வசனத்தை எடுத்து வைக்காமல் உனது கருத்தை கூறுகிறாய்.

அல்லாஹு கூறுகின்றான் “மர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை. நிச்சயமாக அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர் .அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார் . அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்...... ”

அல்லாஹு இவ்வளவு அழுத்தமாக கூறி இருக்கிறான் என்றால் என்ன காரணம்?

முதலில் அல்லாஹு குரான் 5 : 73,74 (சூரா அல்மாயிதா, 73,74 ) என்ற வசனத்தில் ஈஸா நபியை, அல்லாஹு என்று கூறுபவர்களை நிராகரிபவர்கள் என்று கூறுகின்றான். மேலும் அல்லாஹு மூவருள் ஒருவன் என்று கூறியவர்களையும் நிராகரிப்பாளர்கள் என்று அல்லாஹு கூறுகின்றான்.
அதாவது ஈஸா நபியை கடவுள் என்றும் கடவுள் குமாரன் என்றும் நம்புவதை தவறு என்று சுட்டிக்காட்டி, இணைவைப்பவர்களை இடித்துரைக்கும் வகையில்,

அல்லாஹு 5.76 வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்,

““மர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை. நிச்சயமாக அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர் .அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார் . அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்...... ”

இங்கே அல்லாஹு, “மர்யமின் மகன் மசீஹ் ஒரு தூதரே அன்றி வேறு எவரும் இல்லை ” என்று அழுத்தமாக கூறுவதற்கு என்ன விளக்கம் ?

5: 73, 74 இல் மக்கள் ஈசாவை கடவுள் என்றும் கடவுள் குமாரர் என்றும் நம்புவதை மறுத்து , அதாவது அவர் கடவுளோ, கடவுள் குமாரரோ இல்லை என்று நிரூபிக்க 4 காரணங்களை 5:75 வசனத்தில் அல்லாஹு சுட்டிக்காட்டுகின்றான்.

====== 1) ஈஸா ஒரு தூதர் மட்டுமே , எனவே அவர் கடவுள் இல்லை.
====== 2) ஈஸா ஒரு தூதர் என்ற அடிப்படையில், ஈசாவுக்கு முன்னர் உள்ள தூதர்கள் இறந்துவிட்டது போல் ஈசாவும் இறந்துவிட்டார். இறந்தவர் கடவுளாக இருக்க முடியாது. எனவே ஈஸா கடவுள் இல்லை.
========3) ஈசாவை மர்யமின் மகன் என்று இந்த வசனத்தில் கூறுவதன் மூலம், மக்களின் நம்பிக்கையான ‘கடவுள் குமாரர்‘ என்பது தவறு என்று அல்லாஹு எடுத்துக்காட்டுகின்றான். .கடவுளுக்கு பிறப்பு என்பது இல்லை. எனவே ஒரு பெண்ணுக்கு (மர்யமுக்கு) பிறந்த ஈசாவும் கடவுள் ஆக முடியாது.
========4) ஈஸா அவர்களும் அவரது தாயாரும் உணவு உண்டனர் என்று அல்லாஹு கூறுவதன் மூலம் ஈஸா கடவுள் இல்லை, காரணம் கடவுளுக்கு உணவு தேவை இல்லை, ஆனால் ஈஸா நபியோ உணவு உண்டார்.
இவ்வாறு
ஈஸா கடவுளோ, கடவுள் குமாரரோ இல்லை என்பதற்கு 4 காரணங்களை கூறுகின்றான்.

ஈஸா ஒரு தூதரே அன்றி வேறில்லை என்று கூறுவதிலிருந்து, ஏனைய தூதர்களுக்கு, மனிதன் என்ற முறையில் என்னென்ன சிபாத்துக்கள் உள்ளதோ அந்த சிபத்துகள் ஈசாவுக்கும் உண்டு;

அதாவது ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தார், உணவு உண்டார், மரணித்து போனார் என்பதையே அல்லாஹு இங்கு எடுத்து காட்டுகின்றான்.

அவர்கள் இருவரும், அதாவது ஈசாவும் அவரது தாயாரும் உணவு உண்டு வந்தனர் என்று கடந்தகாலத்தில் குறிப்பிடுகின்றான்.

இருவரும் உணவு உண்டனர் என்று கடந்த காலத்தில் கூறுவதிலிருந்து, இருவரும் இப்போது உண்ணவில்லை, ஏனென்றால் இருவரும் இறந்துவிட்டனர். தாயாருடன் சேர்த்து ஈசாவையும் சொல்வதால் தாயாரை போன்று ஈசாவும் இறந்துவிட்டார் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

எனவே எந்த கோணத்தில் பார்த்தாலும் ஈஸா இறந்துவிட்டார் என்பது தெள்ள தெளிவாக விளங்குகிறது.

இவ்வாறு ஒரு வசனத்தின் ஒரு பகுதியை கூறி, அதாவது “அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர்” என்ற பகுதியை மட்டும் கூறி ஈஸா நபி இறக்கவில்லை, அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் தான் இறந்துவிட்டார்கள் என்று நீங்கள் கூறுவீர்கள் என்பதால் தான் ,

ஈசாவின் மரணத்தை உறுதிபடுத்தும் வகையில் அல்லாஹு இவ்வாறு கூறுகின்றான்,

(குரான் 3. 145) “முஹம்மத் ஒரு தூதர் மட்டுமே ஆவார். அவர்க்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துள்ளனர் .”

இங்கு முஹம்மத் ஸல் அவர்களுக்கு முன் உள்ள தூதர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறுவதிலிருந்து முஹம்மத் நபிக்கு முன்னர் தோன்றிய ஈஸா நபியும் இறந்து விட்டார் என்பது உறுதியாகி விடுகிறது.

குரானின் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும்.
எனவே 5:75 மற்றும் 3:145 போன்ற வசனங்கள், அடிப்படையான கருத்துக்களை சொல்கிறது.

இந்த வசனங்களின் கருத்துக்களை, ஒரு குறிப்பிட்ட காலத்தை கொண்டோ, ஒரு குறிப்பிட்டசம்பவத்தை கொண்டோ சுருக்கிவிட முடியாது.
இந்த வசனங்கள் இயர்க்கைக்கு மாறாக ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்ற பொய்யான, மாயையான, கற்பனையான நம்பிக்கைகளை தகர்த்து விடுகிறது.

இந்த வசங்கள் மூலம் எவரும் உயிரோடு இருக்கமுடியாது என்றும், குறிப்பாக ஈஸா இறந்தே..............விட்டார் என்றும் தெளிவாக கூறிவிட்டது.

எனவே ஈஸா, தூதர் என்ற முறையில் இறந்து விட்டார், மேலும் தாயார் மர்யம் இறந்ததை போன்றே ஈசாவும் இறந்துவிட்டார். இறந்தே போய்விட்டார். இன்னலில்லாஹி வ இன்னா இலைகி ரஜிகூன் ...

இந்த அளவுக்கு தெளிவாக பல வசனங்களை காட்டிய பின்னரும், விதிவிலக்கு என்று உங்கள் சொந்த கருத்தை புகுத்தவே முடியாது. ஈசாவை பற்றி அல்லாஹு ஏதாவது விதிவிலக்கு சொல்லவில்லை. எனவே அடிப்படையான கருத்தை மறுத்து, சொந்தமாக விதிவிலக்கு காட்டுவது தவறு ஆகும்.

============================================================
5:75 வசனத்திற்கு குரான் வசனத்தை கொண்டு விளக்காமல், சென்னை பேருந்து, சென்னை எக்ஸ்பிரஸ் என்றெல்லாம் நீ விளக்குகிறாய். இதிலிருந்து உனக்கு, குரானிலிருந்து ஆதாரம் காட்ட ஒரு வசனமும் இல்லை என்பது புரிகிறது.
============================================================

எனவே நான் எடுத்துக்காட்டிய 5 வசனங்கள் மூலமாக அல்லாஹு ஈஸா நபியின் இறப்பை உறுதி செய்கிறான். இப்படி இருக்க ஈஸா உயிருடன் இருப்பதாக நீ நம்புவது தான் குரானில் முரண்பாடு கற்பிப்பதாகும்.

மேலும் ஈஸா உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஒரு ஆதரத்தையும் காட்டாமல், குரானின் ஏனைய வசனங்களை எழுதி அவற்றில் எல்லாம் முரண்பாடு இருக்கிறதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளாய்.

நீ எழுதி உள்ளது :

1) தாமாக செத்தவை அனைத்தும் ஹராம் என்று அல்லாஹ் பொதுவாக தான் குர் ஆனில் சொல்கிறான், ஆனால் ஹதீஸில் கடல் பிராணிகளில் தாமாக செத்தவை ஹலால் என்று விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது....

2) 20:89 வசனத்தில் சாமிரி என்பவன் காளை மாடு போல ஒன்றை செய்கிறான், அது சத்தம் போடுகிறது. ஆனால் பொதுவாக சிலைகள் பேசாது, அதற்கு எந்த சக்தியும் கிடையாது என்று அல்லாஹ் சொல்கிறான். இது முரண்பாடு அல்லவா,அது முதலில் ஒரு முறை சத்தம் போட்டதே, அது எப்படி , சிலைகளால் ஒரு முறை சத்தம் போட முடியும் என்று அல்லாஹ் எங்காவது பொது விதியாக‌ சொல்லியிருக்கிறானா? அல்லது பேசவே முடியாது, எந்த ஆற்றலும் கிடையாது என்கிறானா? எந்த ஆற்றலும் இல்லை என்று தானே சொல்கிறான்? ஒரு முறை சத்தம் போட்டதே இதற்கு முரண் தானே? எனபது எனது கேள்வி……
.
3) தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் சொல்கிறான். மற்றோர் இடத்தில் பயணிகளுக்கு களா செய்யும் சலுகையையும் வழங்கியிருக்கிறான். இரண்டையும் முரண் என்பீர்களா அல்லது விதிவிலக்கு என்பீர்களா?.....
.
4) மனிதனை விந்து துளியால் படைத்தேன் என்று 16:4 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான். ஆனால் ஈஸா நபி தந்தையின்றி பிறந்தவர்கள் என்று வேறு இடத்தில் சொல்கிறான். ஆதம் நபியை தன் கையால் படைத்ததாக இன்னொரு இடத்தில் சொல்கிறான். ஏன், மனிதர்கள் என்று பொதுவாக சொன்னதில் ஈஸாவும் ஆதமும் அடங்குவார்கள் ஆகவே இந்த வசனங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் என்று தான் சொல்வீர்களா? அல்லது விதி விலக்கு என்பீர்களா?

என் பதில் :

a) மேற் சொன்ன 4 விஷயங்களையும் அல்லாஹுவே குரானில் சொல்லும்போது , அதுவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக இருக்கும்போது அதில் முரண்பாடு என்று ஏன் கற்பிக்க வேண்டும் ?

ஆனால் ஈஸா நபி விஷயத்தில், அவர் இறந்து விட்டார் என்று தெளிவாக கூறி இருக்க, மேலும் எல்லோரும் குறிப்பிட்ட வயதில் உண்டு உறங்கி வாழ்வது என்பது இறைவனின் உறுதியான சட்டமாக இருக்க, அதற்கு மாற்றமான ஒரு பொருளை, ஆதரமில்லாமல் கற்பிப்பது தான் முரண்பாடாகும்.

B) எதை உண்ண வேண்டும் என்பதில் குரானும் , நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் தெளிவாக உள்ளதாலும், இயற்க்கை சட்டத்திற்கோ, ஷிர்க்குக்கோ, குருட்டு நம்பிக்கைக்கோ, இடம் அளிக்காத வகையில், தெளிவாக இருப்பதாலும், இங்கு, முரண்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

எந்த நபிக்கும் கொடுக்காத அந்தஸ்தை ஈஸா நபிக்கு கொடுத்து, கிறிஸ்தவ கொள்கைக்கு துணை போயுள்ள காரணத்தினால் தான், கிறிஸ்தவர்களை போன்றே குரானின் ஏனைய வசனங்களில் முரண்பாடு இருப்பதாக வீணான கேள்வியை எழுப்பி உள்ளாய்.

C) தொழுகையும் அப்படித்தான். அல்லாஹு எப்போது, எப்படி, எவ்வளவு தொழவேண்டும் என்று கூறுகின்றானோ, அதனடிப்படையில் தொழவேண்டும். அல்லாஹு சொல்வதை அவ்வாறே செய்ய வேண்டுமே அல்லாமல், ஏன் 5 நேரம், ஏன் 3 நேரம், இதில் முரண்பாடு உள்ளதே என்றெல்லாம் கேட்பதற்கு என்ன இருக்கிறது?

D) மனிதனை விந்து துளியால் படைத்தேன் என்று 16:4 வசனத்தை காட்டிவிட்டு, ஆனால் ஈஸா நபி தந்தையின்றி பிறந்தவர்கள் என்றும்,
ஆதம் நபியை தன் கையால் படைத்ததாக இன்னொரு இடத்தில் சொல்கிறான் என்றும் எந்த வசனத்தையும் காட்டாமல் எழுதி உள்ளாய்.

குரான் வசனத்தை முழுமையாக எழுதாமல் எவருடைய கருத்தையோ கூறுவதை போன்று நீ எழுதி உள்ளாய். ஆதம் நபியை தன் கையால் படைத்தேன் என்று எங்கே கூறி உள்ளான்? தன் கையால் என்று எங்கு வந்துள்ளது? குரான் வசனத்திற்கு சரியான கருத்தை எடுத்து வைக்காமல் . ‘தன் கையால்‘ என்று ஏன் எழுதுகிறாய்?

மேலும் மேற் சொன்ன மூன்றுமே, அதாவது விந்து துளியால் படைத்தல், தந்தையின்றி படைத்தல், ஆதமை படைத்தல் போன்றவை அல்லாஹு தெளிவாக சொல்லியிருக்க அதற்கு எந்தவகையிலும் முரண்பாடு கற்பிக்க முடியாது.

ஆனால் ஈஸா உயிரோடு இருப்பது அல்லாகுவின் சுன்னத்திற்கு எதிரானது. அல்லாஹு விதிவிலக்கு என்று சொல்லாமல் நீங்களே, உங்கள் சொந்த கருத்தின் அடிப்படையில் விதிவிலக்கு என்று கூறுவது உங்களின் கற்பனை மட்டுமே

E) சாமிரி விஷயம் :

உனது APRIL,30 ஆம் தேதி தொடரில் “ அது நிஜ மாட்டை போன்று சத்தம் போடுவதாய் இரண்டாம் அத்தியாயத்தில் அல்லாஹு சொல்லி உள்ளான்” என்று கதை அளந்தாய்.

ஆனால் இப்போது “ அது சத்தம் போடுகிறது ”என்று எழுதி உள்ளாய்.
ஏன் இந்த தடுமாற்றம்? குரானின் வசனத்தை முழுமையாக வைத்து எழுதாமல், திணறுவதற்கு என்ன காரணம்?

சாமிரி மூஸா நபி இல்லாத நேரத்தில், மக்களை ஏமாற்றுவதற்காக காளை கன்றை போன்று ஒன்றை உருவாக்கி, அதில் ஒரு ஓசை வரும்படி செய்கிறான். உதாரணத்திற்கு, புல்லாங்குழல் மற்றும் சங்கு போன்றவைகளிருந்து சத்தம் வருவது இல்லையா? இது ஒரு ஏமாற்று வேலை தான். எனவே சிலைகள் பேசாது என்பதற்கு இது முரண் அல்ல.

எனவே நீ பார்க்கவேண்டியது, அடுத்த வசனத்தில் அல்லாஹு என்ன சொல்கிறான் என்று, அதாவது, “ அந்த கன்றுக்குட்டி அவர்களின் எவ்விஷயத்திற்கும் பதில் அளிப்பதில்லை என்பதையும் மேலும் அவர்களுக்கு எந்த தீங்கையோ நமையையோ செய்ய அதற்கு தகுதி இல்லை என்பதையும் அவர்கள் காணவில்லையா?”

எனவே சாமிரியின் பின்னால் செல்லாமல், அல்லாஹு சொல்வதை சிந்தித்து பார். அப்போது உனக்கு முரண்பாடு தெரியாது.

============================================================

குர் ஆன் 21.35) ....“உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் என்றென்றும் உயிருடன் இருப்பதா?”

மேற்சொன்ன வஸனத்தின் படி ஈஸா இறந்துவிட்டார்கள் என்று எழுதியிருந்தேன் ,
அதற்கு நீ இவ்வாறு எழுதிஉள்ளாய்,

“இதில் யாருக்கும் நிரந்தரமான வாழ்வை அல்லாஹ் தரவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.இதை ஏற்கனவே விளக்கி விட்டேன். யாருக்கும் நிரந்தர வாழ்க்கை தரப்படவில்லை என்பது ஈசா நபி விஷயத்தில் முரணாகவில்லை. இங்கே விதிவிலக்கு என்றும் நாம் சொல்லவில்லை. ஈஸா நபிக்கும் நிரந்தர வாழ்க்கை வழங்கப்படவில்லை. ஆகையால் இது உங்கள் வாதத்தை தூக்கி நிறுத்தாது”

என் பதில் :

ஈஸா நபி உயிரோடு இருப்பதாக நீ எங்கும் கூறவே இல்லை.எனவே ஈஸா உயிரோடு இருப்பதாக குரானின் அடிபடையில் நிரூபிக்காதவரை, மேலே எழுதியது வெறும் கிஸ்ஸா தான்.
============================================================

மேலும், 21.35 “உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் என்றென்றும் உயிருடன் இருப்பதா?”
இதற்கு உன் பதிலில்

முந்தையவர்கள் என்று அங்கே இல்லை. அவர்கள் உயிருடன் இருப்பவர்களா? என்று தான் அல்லாஹ் கேட்கிறான்.

அவர்கள் என்றால் முஹம்மது நபி காலத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்களே அவர்கள்” என்று எழுதி உள்ளாய்.

என் பதில் :

a) உமக்கு முன்னர் என்ற வார்த்தை உள்ளது. நீ கூறும் ‘விதிவிலக்கு’ என்று சாக்கு கூறாத அளவுக்கு, பொது விதியாகவே அல்லாஹு சொல்கிறான்.
b) அவர்கள் என்றால் முஹம்மது நபி காலத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்களே அவர்கள், என்று சுருக்கி, அதாவது பரந்த கருத்தை சுருக்கி எழுதியிருக்கிறாயே, இதற்கு யார் அதிகாரம் தந்தது?

C) அவர்கள் என்பது நபி ஸல் அவர்களுக்கு முன் வாழ்ந்த அனைவரும்தான்.

எனவே நான் ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்பதற்கு 5 வசனங்களை காட்டியிருந்தேன். நீ சரியான பதில் தர முடியாமல், அப்படியும் இப்படியும் குழப்பி உள்ளாய்.
எனவே ஈஸா ஒரு மனிதர் , தூதர் , மற்றும் ஒரு பொய் கடவுள் என்ற முறையில் இறந்துவிட்டார்......... ஈஸா உண்ணாமல், குடிக்காமல் வாழ
முடியாது, எனவே இறந்து விட்டார்..........5. நபி ஸல் அவர்கள் மரணித்து விட, முந்தியவர்கள் உயிரோடு இருப்பதா? என்ற கேள்வியின் அடிப்படையிலும் ஈஸா நபி இறந்து விட்டார் என்று நிரூபணம் ஆகிறது.
அடுத்து ,ஈஸா நபி சப்ஜெக்ட் தொடர் 2. இன்ஷா அல்லாஹ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக