வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 3அன்புள்ள NASHID (இன் ஏப்ரல் 20 மற்றும் 22 தேதி message-க்கான பதில்) 
(
தொடர் 1) ஈஸா நபி உயிருடன் இருப்பதான நம்பிக்கை ஷிர்க் ஆகும்; மட்டுமல்ல, இது கிறிஸ்தவ கொள்கைக்கு வலுவூட்டக்கூடியதும் ஆகும், எனவே உனது நம்பிக்கை படி அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் காட்டு என 20 நாட்களாக நான் கேட்ட பின்னரும் அதை நீ கண்டுகொள்ளவே இல்லை.. ஏக இறை கொள்கையில் உண்மையில் நம்பிக்கை உடையவர்கள், “தவ்ஹீதா அல்லது ஷிர்க்காஎன ஒரு கேள்வி எழுப்பப்படுமானால் முதலில் அதை வாதித்து விட்டுத்தான் அடுத்த தலைப்புக்கு செல்வார்கள் .. 
ஆனால் உன் கடைசி messageஇல் ஈஸா நபி உயிருடன் இருக்கிறாரா OR மரணித்துவிட்டாரா என்பதற்கு பதில் கூறாமல், ஈஸா நபி மரணித்து விட்டால் அவர் மீண்டும் வருவார் என்பதற்கான ஹதீஸை பற்றி உங்கள் நிலை என்ன என்று கேட்டுள்ளாய். இது மார்க்கத்தை நீ விளையாட்டாக ஆக்கிவிட்டாய் என்பதை காட்டுகிறது. ஈஸா நபியை பற்றிய உன் நம்பிக்கை என்ன? 

(தொடர் 2) ஈசாவை சிலுவையில் அறைந்து கொன்று சபிக்கப்பட்ட மரணத்தை கொடுத்து விட்டோம் என்று யூதர்களும் , இல்லை இல்லை ஈஸா மரணித்தது உண்மை தான் , ஆனால் அவர் காப்பாற்றபட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து அல்லாவின் அருகில் உயிருடன் இப்போதும் வாழ்ந்து வருகிறார் , எனவே அவர் இறைமகன் ஆகிறார் என்று கிறிஸ்தவர்களும் , அவ்வறில்லை, ஈசாவுக்கு பதிலாக மற்றொரு யூதனுக்கு அல்லாஹு ஈசாவின் உருவத்தை கொடுத்து விட்டு ஈசாவை வானத்தில் உயிரோடு இறைவன் உயர்த்தி விட்டான் என்று முஸ்லிம்களும் மூன்று விதமாக, முற்றிலும் முரணாக நம்பிக்கை கொண்டிருக்கும் இவ்வுலகில்....... மேற்சொன்ன 3 சமுதாயத்தின் நம்பிக்கை தவறு என்று நிரூபித்து காட்டி, உலகளாவிய ஷிருக்கிலிருந்து எல்லோரையும் காப்பாற்றுவதற்காகத்தான் ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்களை அல்லாஹு தோன்றச்செய்தான். 
(
குரான் 5.76 )”மர்யமின் மகன் masih ஒரு தூதரே அன்றி வேறில்லை.. நிச்சயமாக அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர்..” என்று ஏனைய நபிமார்களை போன்று ஈஸா நபி மரணமடைந்து விட்டார் என குரான் தெளிவாக கூறியிருந்தும் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது நீங்கள் தவ்ஹீது வாதிகள் இல்லை என்பது மட்டுமல்ல , நபிமார்களை எதிர்த்த இணை வைப்பவர்களை போன்றே நீங்களும் மிக உறுதியாக இருக்கிறீர்கள் என்று நம்பவேண்டியிருக்கிறது..
BUHARI 3456:
அபு சயீத் அல் குத்ரி அறிவிக்கிறார்கள், “இறைத்தூதர் ஸல் கூறினார்கள், உங்களுக்கு முன்னிருந்த (யூத மற்றும் கிறிஸ்தவ) வர்களின் வழி முறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக பின் பற்றுவீர்கள், எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் புகுந்திருந்தால், நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று. நாங்கள், இறை தூதர்கள் அவர்களே, நீங்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா குறிப்பிடுகிறீர்கள்? என்று கேட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம், வேறு எவரை? என்று பதிலளித்தார்கள்....”
முஸ்லிம் உம்மத் யூத கிறிஸ்தவர்களை போன்று மிகவும் இழிவான நிலையை அடைவார்கள் என்று நபி ஸல் கூறினார்கள் என்றால், இவர்களை சீர்திருத்த ஒரு நபி அல்லாது இந்த ஆலிம்களால் முடியுமா? 


(தொடர் 3)சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வது கடினமல்ல, அதாவது முஸ்லிம் சமுதாயம் சீர்கெட்டு விட்டால் மூஸா நபிக்கு பின் தோன்றிய நபியை போன்று ஒரு நபி வருவார் , அப்போது யூதர்கள் ஈசாவை கொடுமை படுத்தியது போன்று முஸ்லிம்களும் அந்த நபியை கொடுமைப்படுத்துவார்கள், மேலும் கிறிஸ்தவர்கள் ஈசாவை வானத்தில் உயிரோடு வைத்துள்ளது போல் இந்த முஸ்லிம் உம்மத்தும் செய்வார்கள் என்றும் இந்த ஹதீஸ் நமக்கு எச்சரிக்கை செய்கிறது...
நபிக்கு பிறகு நபி வரமாட்டார்கள் என்பதற்கு சான்றாக குரானில் ஒரு வசனமாவது காட்டமுடியுமா? நபியை அனுப்புவது இறைவனுடைய நடைமுறை என்றும் அவர்களை மறுப்பது நிராகரிப்பாளர்களின் நடைமுறை என்றும் குரானில் பல வசனங்கள் கூறுகிறது.
.ம்; ( குரான் 7.36 )”ஆதமின் மக்களே! என் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்ட கூடிய தூதர் உங்களிடமிருந்தே உங்களிடம் நிச்சயமாக வரும்போது இறையச்சத்தை மேற்கொண்டு திருந்தி கொள்பவருக்கு எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் கவலை அடையவும் மாட்டார்கள்..”
அதுமட்டுமல்ல நபிக்கு பின் நபி வரமாட்டார்கள் என்ற கொள்கை நபியை மறுப்பவர்களுடைய கொள்கை என்றும் அல்லாஹு கூறுகின்றான் ..
(
குரான் 40.35 ) ”இதற்கு முன்னர் யூசுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார் . அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் அய்யப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரணமடைந்த போது அவருக்கு பின்னர் எந்த ரசூலையும் அல்லாஹு ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறு அல்லாஹு வரம்பு மீறுபவர்களாகவும் அய்யம் கொள்பவர்களாகவும் இருப்பவர்களை வழி தவறியவர்கள் என்று முடிவெடுத்து கொள்கிறான்.”
இந்த வசனத்தை அல்லாஹூ சொல்லிக்காட்டவேண்டிய அவசியம் என்ன? நபிக்குபின் நபி இல்லை என்ற கொள்கை உடையவர்களை வழிகேடர்கள் என்று அல்லாஹு சான்றிதழ் வழங்கி உள்ளானே!
குரான் கூறுகின்ற அடிப்படையான கருத்து என்ன என்றால் நபிமார்கள் வருவது பொதுவான நடைமுறை என்றும் ; நபிக்குபின் நபி வரமாட்டார்கள் என்று கூறி நபியை எதிர்ப்பது வழிகேடர்களின் செயல் என்றும் புரிந்து கொள்ளலாம்.
Nashid
இன் கேள்வி, புகாரி 3455 இல் உள்ள ஹதீஸில் நபிக்குபின் நபி இல்லை என்பதற்கு என்ன கருத்து என்பதாகும்.. 
ரசூல் ஸல் கூறினார்கள், “..... பனி இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறை தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றொரு இறைத்தூதர் அவருக்கு பதிலாக வருவார். மேலும் எனக்குப்பின் இறை தூதர் இல்லை .ஆனால் இனி கலீபாக்கள் தோன்றுவார்கள்.... ” ..
இந்த ஹதீஸில் எனக்குபின் நபி வரமாட்டார் என்று கூறிஉள்ளது, என்னுடைய வபாத்தை தொடர்ந்து கலிபாக்கள் வருவார்கள்; இஸ்ரவேலர்களுக்கு ஒரு நபியை தொடர்ந்து இன்னொரு நபி வந்தது போல், என்னுடைய வபாத்தை தொடர்ந்து ஒருநபியை எதிர்பார்க்காதீர்கள் என்பதாகும்..ஒரு குறிப்பிட்ட காலத்தை, அதுவும் மரணத்திற்கு பின் உடனே உள்ள காலத்தை பற்றிய குறிப்புதான் இது . ..
நுபூவ்வத் என்பது காலம் காலமாக வந்துகொண்டிருப்பது. இந்த கருத்தில் பல குரான் வசனங்களும், பல ஹதீசுகளும் இருப்பதால், என் வபாத்திக்குப்பிறகு உடனே நபி வரமாட்டார் ஆனால் கலீபா வருவார்கள் என்பதையே இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகிறது. 
Nashid,
பிளேக் நோய் பற்றி குரானில் உள்ளதாக மிர்சா சாஹிப் சொல்லி உள்ளதை பற்றி கேட்டுள்ளாய். ஆம், குரான் 27.83 இல் கூறபட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக