வெள்ளி, 16 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (D)


உங்கள் நான்காவது தொடரிலாவது ஈஸா நபி தொடர்பான ஹதீஸ்கள் குறித்த தங்கள் நிலையை சொல்வீர்கள் என்கிற அதீத எதிர்பார்ப்புடன் வாசித்தால் அதிலும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஈஸா நபி மீண்டும் வர மாட்டார், வருவதாக குர் ஆனிலிருந்து காட்ட முடியுமா? என்றெல்லாம் கேட்கிறீர்களே, இதோ நபி (சல்) அவர்கள், ஈஸா நபியின் மீள்வருகையைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்களே, இதற்கு என்ன சொல்கிறீர்கள் ?

என்பது தான் எனது கேள்வி.

ஒன்று, அவற்றை ஏற்கிறேன், ஈஸா நபி வருவதை ஒப்புக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள்.
அல்லது, குர் ஆன் மட்டும் தான் இறைவன் அருளியது, ஹதீஸ்களையெல்லாம் நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று சொல்லுங்கள்.

இரண்டில் எதையும் சொல்லாமல் தப்பிக்கும் போக்கினை தான் உங்கள் 4 ஆம் தொடரிலும் காட்டுகிறீர்கள்.

//நாம் குரானை பின்பற்றவேண்டுமா or ஹதீஸை பின்பற்றவேண்டுமா என்றா விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் இந்த புது கேள்வி ?//

என்கிறீர்கள்.

எனது கேள்விக்கு இது பொருத்தமான பதிலா? குர் ஆனை பின்பற்றவேண்டுமா ஹதீஸை பின்பற்றவேண்டுமா என்பது நமது விவாதமில்லை, சரி தான்.

ஆனால், அதற்கான விடையை நீங்கள் சொன்னால் தான் நீங்கள் ஈஸா நபி குறித்த நிலைபாட்டினை எந்த அடிப்படையில் எடுத்தீர்கள் என்பது புரியும்.

குர் ஆனை நம்புவதாய் ஒருவர் ஒரு இடத்தில் சொல்கிறார்.
அவரே, நான் மறுமை வாழ்க்கையை நம்ப மாட்டேன் என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுகிறார்.

என்ன சார், இப்படி சொல்றீங்க? அப்போ அன்னைக்கு குர் ஆனை நம்புகிறேன்னு சொன்னீங்களே, குர் ஆனில் இதோ மறுமை பத்தியெல்லாம் இருக்கே?
அப்போ நிஜமா நீங்க குர் ஆனை நம்புறீங்களா இல்லையா??

என்று நாம் கேட்டால் ஆம் இல்லை என இரண்டில் ஒன்றை தான் அவர் பதிலாக சொல்ல வேண்டும்.
அல்லாமல், நான் குர் ஆனை நம்புகிறேனா இல்லையா என்பதை பேசுகிறோமா அல்லது மறுமையைப் பற்றி பேசுகிறோமா?
என்று அவர் எதிர் கேள்வி கேட்டால் அவரது அறிவுத் திறன் குறித்து நாம் என்ன எடை போடுவோம்?

///குரானையும் ஹதீசையும் ஏற்றுக்கொள்வேன். அதில் சந்தேகம் வேண்டாம்.///

என்று அறிவிப்பு மட்டும் செய்கிறீர்கள். ஹதீஸில் ஈஸா நபி மீண்டும் இவ்வுலகில் வருவார் என்று சொல்லப்பட்டுள்ளது. அதை நம்புகிறீர்களா இல்லையா?

ஈஸா நபி மரணித்து விட்டார் என்று ஒரு வாதத்திற்கு நான் ஒப்புக் கொண்டால் கூட அப்போதும் இந்த கேள்வி கேள்வியாக நின்று கொண்டு தான் இருகும்.. காரணம், மரணித்த ஒருவரும் அல்லாஹ் நாடினால் மீண்டும் வரலாம்.
மீண்டும் வருவார் என்று ஹதீஸ் சொல்கிற போது அதை அப்படியே நம்பி விடலாம், மரணிக்காமல் உயிருடனே இருந்து கொண்டும் மீண்டும் வருவார்,
மரணித்து விட்ட பிறகும் உயிர் பெற்று மீண்டும் வருவார்..

மொத்தத்தில், மீண்டும் வருவார் என்று ஹதீஸ்கள் சொல்பவை குறித்த தங்கள் நிலை தான் என்ன? என்பதை மீண்டும் கேட்கிறேன்.

முஹம்மது நபிக்கு பிறகு வேறு நபி வர மாட்டார் எனவும் நபித்துவம் அவர்களோடு முற்றுப் பெற்று விட்டது என்பதற்கும் பல்வேறு சான்றுகளை எனது முதல் தொடரின் போது வைத்திருந்தேன்.
அவரை தொடர்ந்து இன்னொரு நபி வருவார் என்று கூறும் நீங்கள் உங்கள் தரப்பு சான்றாக முன் வைக்கும் 7:35 வசனம் கூட தவறான புரிதல் என்பதையும் அதிலே விளக்கியிருந்தேன்.

இன்னொரு நபி வருவார் என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் கூட அந்த நபி மிர்சா தான் என்பதற்கு என்ன சான்று?

முஹம்மது நபிக்கு பிறகு லட்சோப லட்சம் மக்கள் வந்திருக்கும் போது குறிப்பிட்டு இவர் தான் அந்த நபி என்று சொன்னால் அதற்கு ஏதும் சான்றுகளை காட்ட வேண்டுமல்லவா?

இதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு, முஹம்மது நபியை நபி என்று எந்த சான்றை வைத்து நம்புகிறீர்கள்? என்று அற்புத கேள்வியொன்றை கேட்டிருக்கிறீர்கள்.

இறந்தவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்று கப்ர் வணங்கிகளுடனான விவாதத்தின் போது நாம் கூறிய போது அவர்கள் நம்மை நோக்கி வைத்த கேள்வி.. எத்தனை பேர் அழைத்தாலும், எந்த தொலைவிலிருந்து அழைத்தாலும் அனைத்தையும் கேட்டு பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்??""

சபாஷ்.. அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்பதே தற்போதைய உங்கல் அற்புத கேள்வியும் நிரூபிக்கிறது.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (25:73)

இது இறைவனின் வசனம். அதாவது, அல்லாஹ்வின் வசனமாக ஒன்றை சொன்னால் கூட அதை கண்ணை மூடி நம்பக் கூடாது, மாறாக அதையும் ஆய்வு செய்து, சிந்தனை செய்து தான் பின்பற்ற வேண்டும்.
இதை நான் சொல்லவில்லை, அல்லாஹ் சொல்கிறான்.

முஹம்மது நபியை என்ன, அல்லாஹ்வை நாம் நம்புவது கூட சான்றுகளின் அடிப்படையில் தான்.
அல்லாஹ் தந்த வேதமான குர் ஆனை நம்புவதும் சான்றுகளின் அடிப்படையில் தான்.
அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய அடிப்படைகளோ இறைவன் குறித்த அச்ச்சமோ ஏதோ பரம்பரை பரம்பரையாக தொற்றி வரும் குணமல்ல.
பாட்டன், முப்பாட்டன்மார்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காகவெல்லாம் இஸ்லாத்தை நாம் கடைபிடிக்கவில்லை, அப்படி கடைபிடிக்க அல்லாஹ்வும் சொல்லவில்லை.

அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பது சான்றுகளின் மூலம் நிரூபணமாகிறது, அவன் வழங்கிய வேதமான குர் ஆன் அவனது வார்த்தைகள் தான் என்பது சான்றுகளுடன் நிரூபணமாகிறது.
அதே போன்று அவன் அனுப்பிய அவனது தூதரும் உண்மையாளர் என சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நபி (சல்) அவர்கள் கொண்டு வந்த வேதம் அல்லாஹ்வையும் உண்மைப்படுத்துகிறது, நபி (சல்) அவர்களையும் உண்மைப்படுத்துகிறது

இன்றைய விஞ்ஞானிகளால் கூட கண்டறிந்து விட முடியாத பல நுணுக்கமான அறிவியல் தகவல்களை குர்ஆன் சர்வசாதாரணமாக பேசுகிறது.
குர் ஆன் கூறுகிற விஞ்ஞான உண்மைகளைக் கண்டு உலகம் இன்று வியப்பில் ஸ்தம்பித்து நிற்கின்றது.

அப்படியானால் இதையெல்லாம் நமக்கு கொண்டு வந்து சேர்ந்த ஒருவர் சாதாரண மனிதராக இருக்கவே முடியாது, அல்லாஹ்வின் தூதரால் மட்டுமே இந்த பேருண்மைகளை நமக்கு சொல்ல முடியும்.

மேலும், அவர்கள் கொண்டு வந்த சித்தாந்த்ததில் பொய், புரட்டு, கப்சாக்கள் இல்லை, அதன் மூலம் அவர்கள் உண்மைப்படுத்தப்படுகிறார்கள்.
அவர்களது கொள்கை கோட்பாடுகளில் முரண்பாடுகள் இல்லை, அதன் மூலம் உண்மைப்படுத்தப்படுகிறார்கள்.
அவர்கல் தனது வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் பொய் சொன்னதில்லை, அதன் மூலம் உண்மைப்படுத்தப்படுகிறார்கள்.

ஏராளமான முறைகளில் சரி பார்த்து, உண்மையாளர் தான் என உளமாற நம்பி தான் ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், அப்படி தான் ஏற்கவும் வேண்டும்

எந்த காஃபிர் வந்து கேட்டாலும், இவர் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை எந்த முஸ்லிமாலும் நிரூபிக்க முடியும்.
எந்த காஃபிர் வந்து கேட்டாலும் இது அல்லாஹ்வின் வேதம் தான் என்பதை நிரூபிக்க முடியும் !

இதிலேயே உங்களுக்கு சந்தேகம் என்றால் நீங்கள் குர் ஆனையும் நம்பவில்லை, முஹம்மது நபியையும் நம்பவில்லை, இப்போது நீங்கள் பின்பற்றுவதாய் கூறும் மிர்சா விஷயத்திலும் உங்களுக்கு எந்த பிடிப்பும் இல்லை என்பதை நீங்களே ஒப்புக் கொண்டவராவீர்.

அல்லாமல், யாரோ ஒருவர் தன்னை நபியென்று சொல்லி விட்டால் உடனே கண்ணை மூடி நம்பி விட வேண்டும் என்கிற போக்கு எத்தனை ஆபத்தானது?
நானும் கூட சொல்வேனே, நீங்களும் கூட சொல்லலாமே...

எனது கேள்வி மிகவும் எளிமையானது..

லட்சோப லட்சம் மக்களில் ஒரு நபரை சுட்டிக்காட்டி இவர் அல்லாஹ்வின் தூதராக்கும்.. என்றால் சும்மா போகிற போக்கில் சொன்னால் போதுமா அல்லது சான்று காட்டி சொல்ல வேண்டுமா?

உங்களால் சான்றுகளை காட்ட முடியாது என்றால்
ஒருவரை நபியென நான் எப்படி நம்புவேன் என்பதை மேலே சொல்லியிருக்கிறேனே, அந்த அளவுகோல்கள் ஒவ்வொன்றாக எடுத்து நீங்கள் சொல்லும் மிர்சா சாஹிபோடு பொருத்திப் பார்த்து, அவர் நபியில்லை என்பதை நானாவது நிரூபிக்கீறேன்..

என்ன சொல்கிறீர்கள்? ஒன்று, அவர் நபி தான் என்பதற்கு நீங்கள் ஆதாரம் தாருங்கள்.
அல்லது, அவர் நபியில்லை என்பதை நிரூபிக்க எனக்கு அவகாசம் தாருங்கள்.

ஒருவரை அல்லாஹ் நபியாக தேர்வு செய்ய வேண்டுமானால் அவர் முதலில் சராசரி மனிதராக இருக்க வேண்டும்.
மனிதர்களிலிருந்து தான் அல்லாஹ் நபியை தேர்வு செய்வான்.

மிர்சா சாஹிப் என்பவர் சராசரி மனிதராக கூட இல்லை என்பதை நான் நிரூபிக்கும் போது அவர் நபியில்லை என்பதை தனியாக நிரூபிக்கும் அவசியம் எனக்கு இருக்காது என்கிற வகையில், சில சான்றுகளை தற்போது பார்ப்போம்.

நபி என்பவர் பொய் சொலக்கூடாது, முன்னுக்கு பின் முரண்படக்கூடாது, அவர் அறிவிக்கும் முன்னறிவிப்புகள் நிறைவேறாமல் போகக்கூடாது
தற்போது இந்த அளவுகோலை உங்கள் மிர்சா சாஹிபோடு ஒபீடு செய்து பார்ப்போம்.

ஈஸா நபி இறந்து விட்டார் என்பது உங்கள் கொள்கை. அப்படி தான் மிர்சா சாஹிபும் சொன்னார் என்று வேறு பிரச்சாரம் செய்கிறீர்கள்.
ஆம், அப்படி மிர்சா சாஹிப் சொல்லியிருக்கிறார் என்பது சரி தான்.

"ஈசா நபி வருவார் என்று சொல்வது ஷிர்க் ஆகும்" ‍ ஆயினே கமாலாத் இஸ்லாம், பக்கம் 44.

ஆனால், கேள்வி இதுவல்ல.

அதே நூலின் 409 ஆம் பக்கத்தில் "ஈசா நபி வானில் இருந்து இறங்கி வருவார்கள் என்று மக்கள் நம்பியாக வேண்டும், ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்?"

என்று கேட்டு தமக்கு தாமே முரண்பட்டது ஏன்?

"என்னை யாராவது நபி என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர் முஸ்லிம் தான்" என்று திர்யாகுல் குலூப் என்கிற நூல் பக்கம் 432 இல் கூறியுல்ள மிர்சா சாஹிப்,

"ஹகீகத்துல் வஹீ, பக்கம் 167 இல், என்னை நபியாக ஏற்றுக்கொள்ளாதவன் காபிர்" என்று சொல்லி, தனக்கு தானே முரண்பட்டது ஏன்?

நூருல் ஹக் இத்மாமுல் ஹுஜ்ஜா என்கிற நூல், பக்கம் 296 இல், ஈசா நபியின் கபுர் பாலஸ்தீனில் உள்ளது என்று சொன்ன இந்த மிர்சா குலாம், கிஸ்தி நூஹ், பக்கம் 25 இல், ஈசா நபியின் கபுர் காஷ்மீரில் உள்ளது என்று சொல்லியுள்ளார்.
இப்படி முரண்பட்டு பேசியவர் நபியா?

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். 4:82

முரண்பாடுகள் இருப்பது அது இறைவனின் வார்த்தை இல்லை என்பதற்கான சான்று !
மிர்சாவின் கூற்றுகள் இறைவனின் வார்த்தையில்லை என்றால் அவர் இறைவனின் தூதர் இல்லை என்று பொருள்.

மூஸா நபி அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இளைஞர், அவர் இன்று வரை உயிருடன் இருக்கிறார் என்று அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான்

என்று நூருல் ஹக் பக்கம் 68 இல் சொல்லியுள்ளார்
இவ்வாறு அல்லாஹ் எங்கே சொல்லியுள்ளான் என்பதை எடுத்துக் காட்டுங்கள்.

மசீஹ் வரும் போது வானிலிருந்து "ஹாதா கலிஃஃபத்துல்லாஹில் மஹதி" என்று ஒரு சத்தம் வரும் என்று புஹாரியில் உள்ளது என்று ஷாஹாதத்துல் குரான் பக்கம் 41 இல் சொல்லியிருக்கிறார்.
அப்படி சத்தம் வருமா., வந்த சத்தம் யாருக்கு கேட்டது, கேட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?
என்கிற கேள்வியெல்லாம் ஒருப் உறமிருக்க, அப்படி புஹாரியில் இருப்பதாக சொல்லியிருக்கிறாரே, அந்த ஹதீஸ் எது?>
புஹாரியின் எந்த பாகம், எந்த வாலியூமில் அந்த செய்தி உள்ளது? என்பதை சொல்லவும்.

நான் மர்யமின் மகனாவேன். நான் தான் மர்யமாகவும் இருந்தேன், நானே கற்பமுற்றேன், நானே ஈஸாவை பெற்றெடுத்தேன், நானே ஈஸாவானேன்
என்று கிஷ்தி நூஹ் என்கிற நூல் பக்கம் 68 இல் தத்துவ மழை பொழிந்திருக்கிறாரே, இவர் சுய நினைவுள்ளசராசரி மனிதராக இருக்கும் தகுதியையாவது கொண்டிருக்கிறாரா? என்பதற்கு பதில் சொல்லவும்.

ஒருவரை சபிப்பதாக இருந்தால் உன் மீது சாபம் உண்டாகட்டும் என்று தான் சாதாரண மனிதன் சபிப்பான்.
கொஞ்சம் அசாதாரண நிலையில் அல்லது கோபம் தலைக்கேறிய நிலையென்றால் "உன் மீது நூறு சாபம் உண்டாகட்டும், உன் மீது ஆயிரம் சாபம் உண்டாகட்டும் என்று சொல்வான்.
அல்லாஹ்வின் சாபம் ஒன்று என்றாலும் ஆயிரம் என்றாலும் எல்லாம் சமம் தான், ஒரு சாபத்தை வேண்டினாலே அவன் அழிந்து தான் போவான் என்று சிந்திப்பது தான் சராசரி மனிதனின் சிந்தனை. கிஒப்பத்தில் ஆயிரம் சாபம் என்று கூட சொல்லட்டும்..
ஆனால், நபியென்று சொல்லப்படுகிற மிர்சாசாஹிப் என்ன செய்கிறார் தெரியுமா?

உன் மீது ஆயிரம் சாபம் உண்டாகட்டும் என்று சொல்லி விட்டு, அதையே ஒவ்வொன்றாக ஒரு பேப்பரெடுத்து பக்கம் பக்கமாக எழுதவும் செய்கிறார்.

எப்படி?
1 சாபம், 2 சாபம், 3 சாபம், 4 சாபம்...........இப்படியே 150 சாபம், 468 சாபம்..
990 சாபம்.. 1000 சாபம்.. 

என்று ஆயிரத்தையும் ஒவ்வொன்றாக அமர்ந்து எழ்திய அறிவுச்சுடர் தான் மிர்சா சாஹிப்.

இந்த அற்புத தத்துவங்கள் நூருல் ஹக் பக்கம் 158 முதல் 162 வரை நிரம்பியுள்ளது ! இது தான் ஒரு நபியென்பவர் செய்யும் அறிவுப்பூர்வமான செயலா
நபியை விடுங்கள், சரசரி மனிதன் இப்படி செய்தால் அவர் இன்று இருக்க வேண்டிய இடம் எங்கே??

இதுவரை ஏழு மசாலாக்களை தந்திருக்கிறேன்.

இன்னும் ஏராளமான மசாலாக்கள் உள்ளன, அவை அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்..!


நான் தான் அல்லாஹ், நான் தான் இவ்வுலகை படைத்தேன், நான் தான் ஆதமையும் படைத்தேன் என்று மிர்சா சாஹிப் கூறியிருக்கிறாரே, இது ஒரு நபி பேசும் பேச்சா அல்லது ஃபிர் அவ்னின் பேச்சா? என்கிற எனது கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்கிற பெயரில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தையே ஓட்டியிருக்கிறீர்கள், 

ஆனால் என்ன ஒரு வருத்தம் என்றால் அந்த படத்திற்கும் எனது கேள்விக்கும் எந்த தொடர்புமில்லை என்பது தான். !

அதாவது குமார் என்கிற ஹிந்து சகோதரருக்கு பல காலமாக நீங்கள் தாவா செய்கிறீர்கள், அவர் கேட்கவேயில்லை...
ஒரு நாள் கனவு ஒன்றை காண்கிறீர்கள்.. அதில் அவரை குத்திக் கொலை செய்து விடுகிறீர்கள்..

விழித்துப் பார்த்த பிறகு இந்த கனவை குறித்து சிந்திக்கையில்.. நான் குத்தியது குமாரை அல்ல, குமார் கொண்டிருந்த தவறான கொள்கையை என்று புரிகிறீர்கள்.

அதன் மூலம் மேலும் ஆர்வம் கொண்டு அவருக்கு தாவா செய்ய முடிவு செய்கிறீர்கள். அவரும் திருந்தி விடுகிறார்.
இந்த சம்பவத்தை நான் நூறு பக்கங்கள் கொண்ட நூலாக எழுதும் போது குமாரை குத்தினேன் என்கிற செய்திக்கு நேரடி அர்த்தம் கொடுக்கக் கூடாது.. உவமையாக தான் புரிய வேண்டும்.. 

இப்படி போகிறது அந்த கதை..

நான் எனது கேள்வியை மீண்டும் கேட்கிறேன்..
ஆயினே கமாலாத்தே இஸ்லாம் எனும் நூலில் மிர்சா சாஹிப் சொன்னார்..
"
ஒரு நாள் நான் இல்லாமல் போய் விட்டேன், எனக்குள் அல்லாஹ் நுழைந்தான், அப்போது நான் எனக்குள் சொன்னேன், நான் தான் இந்த பூமியை படைத்தேன், ஆதமை நான் தான் படைத்தேன், மனித இனத்தை அழகாக படைத்திருக்கிறேன்.."

இதற்கும், மேலே நீங்கள் கூறியிருக்கும் திகில் கதைக்கும் என்ன தொடர்பு?

குமாரை கத்தியால் குத்தியதை நேரடியாக புரியக் கூடாது என்பது போல் இதையும் நேரடியாக புரியக் கூடாது என்றால் வேறெப்படி புரிவது? அதையும் விளக்குங்களேன்.

குமாரை குத்துவது என்பது அவருக்கு தாவா செய்வது.. சரி
அவர் வயிற்றிலிருந்து ரத்தம் வருவது என்பது அவரது தவ்றான கொள்கைகள் அவரை விட்டும் விலகுவது சரி..

அதே போல், ஒரு நாள் அல்லாஹ் எனக்குள் நுழைந்தான் என்றால் அதன் உவமை என்ன?

நான் தான் பூமியை படைத்தேன் என்றால் அதன் உவமை அர்த்தம் என்ன? 
உவமையாக புரியுங்கள் என்று சும்மா சொன்னால் போதுமா?
எப்படி புரிவது என்பதை கூற வேண்டாமா?

உங்கள் முந்தைய தொடரில் இதற்கு பதில் என்கிற பெயரில், நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை, அல்லாஹ் தான் எறிந்தான் என்று வரக்கூடிய வசனத்தை எடுத்துக் காட்டி இதனோடு பொருத்திப் பார்த்தீர்கள்.

சரியாக பொருந்தவில்லை என்று கேட்டிருந்தேன்.

நபி (சல்) அவர்கள் போர் செய்த போது அல்லாஹ் அவர்களுக்கு துணை செய்தான் என்கிற உவமை இந்த இறை வசனத்தில் இருக்கிறது.
நபி அவர்கள் போரிட்டது உண்மை.
அதை செய்தது அல்லாஹ் என்று சொல்லும் போது, செய்வதற்கு அல்லாஹ் துணை நின்றான் என்று புரிவது உவமை..

அது போல் தான் இந்த மிர்சா சாஹிபின் கதையை புரிய வேண்டுமென்றால் மிர்சா சாஹிப் பூமியை படைத்தார் என்பது உண்மை.
பூமியை படைப்பதற்கு அல்லாஹ் துணை நின்றான் என்று புரிவது தான் இங்குள்ள உவமை என்கிறீர்களா?
மிர்சா சாஹிப் ஆதமை படைத்தார் என்பது உண்மை.
ஆதமை படைப்பதற்கு அல்லாஹ் அவருக்கு துணை நின்றான் என்று புரிவது தான் இங்குள்ள உவமை என்கிறீர்களா?

நீங்கள் சொல்லும் உதாரணமும் பொருந்த மாட்டேன் என்கிறது, நீங்கள் சொல்லும் திகில் கதைகளும் சம்மந்தமற்று இருக்கிறது.

அடுத்து,

அல்லாஹ் மிகக் கடுமையாக கோபம் கொள்வது தனக்கு மகன் இருப்பதாக நம்புவதை தான். இதை அல்லாஹ் சொல்லும் போது..

உஸைர் அல்லாஹ்வின் மகன்' என்று யூதர்கள் கூறுகின்றனர். 'மஸீஹ் 92 அல்லாஹ்வின் மகன்' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (9:30)

என்கிறான். அல்லாஹ்வுக்கு மகன் இருப்பதாக நம்புவது கொடிய இணை வைப்பு காரியமாகும்.

ஆனால், மிர்சா சாஹிப் அல்லாஹ்வுக்கு மகனாக இருந்த அதிசயம் யாருக்காவது தெரியுமா? அதை அவரே அறிவிக்கவும் செய்திருக்கிறார்.

ஷகீகத்துல் வஹீ எனும் அவரது நூலில் (பக்கம் 86) அவர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

அல்லாஹ்விடமிருந்து எனக்கு வஹீ வந்தது, நீ என் அர்ஷின் அந்தஸ்த்தில் இருக்கிறாய், என் பிள்ளையின் அந்தஸ்த்தில் இருக்கிறாய் என்று அல்லாஹ் கூறினான்"

என்று நா கூசாமல் சொல்லி, தன்னை மேன்மைப்படுத்துவதாய் எண்ணியிருக்கிறார் மிர்சா சாஹிப். அல்லாஹ்வுக்கு மகன் இருப்பதை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான் என்று 9:30 வசனம் சொல்கிறது. அதற்கு முரணாக நீ என் மகன் போன்றவன் என்று அல்லாஹ் ஒரு மனிதனை பார்த்து சொல்வானா?
அது அல்லாஹ்வின் சிஃபத்துக்கு ஏற்புடையதா?
அப்படி அல்லாஹ் ஒரு காலமும் சொல்ல மாட்டான், தன்னை மக்கள் நபியென கருதி பின்பற்ற வேண்டும் என்கிற நப்பாசையில் மிர்சா சாஹிப் அவிழ்த்து விட்ட கட்டுக்கதை தான் இது.

அடுத்து,

ஷகீகத்துல் வஹி எனும் நூலின் 441 ஆம் பக்கத்தில், தான் சொன்னவைகளில் 3000 முன்னறிவிப்புகள் நிறைவேறியிருப்பதாக மிர்ஸா சாஹிப் கூறியிருக்கிறார்.
அதுவே, கல்திகா இஸாரா எனும் நூலில் (பக்கம் 210) 100 முன்னறிவிப்புகள் நிறைவேறியிருப்பதாக சொல்லியுள்ளார்.

இரண்டில் முதலாவது செய்தியை அவர் எழுதியது 1899 ஆம் ஆண்டு, இரண்டாவது செய்தியை எழுதியது 1901 ஆம் ஆண்டு.

ஆண்டுகள் கடந்த பிறகு நியாயப்படி முன்னறிவிப்புகள் அதிகரிக்க தான் செய்ய வேண்டும், அல்லது குறைந்த பட்சம் அதே அளவு நீடிக்க வேண்டும்.
3000
என்பது இரண்டு வருடம் கழித்து 100 ஆக குறைந்த மாயம் என்ன?

ஒரு நபியிடம் இந்த தவறு வராது.. தன் விருப்பத்திற்கு கதையளக்கும் பொய்யராக இருந்தால் தான் இது போன்ற கவனக்குறைவும் பிழைகளும் ஏற்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அடுத்து,

வஹீ என்பது அந்தந்த நபிக்கு புரிகிற, அவர் கொண்டிருக்கும் சமுதாயத்தவர்கள் புரிகிற மொழியில் தான் அருளப்படும் என்று அல்லாஹ் 14:4 வசனத்தில் கூறியிருக்கிறான்.

மிர்சா சாஹிபின் தாய் மொழி உருது, அவருக்கு வஹி வரும் என்றால் நியாயப்படி உருதுவில் தான் வர வேண்டும். ஆனால் அவருக்கு ஆங்கிலத்திலும் வஹீ வந்ததாக ஹகீகத்துல் வஹி எனும் நூல் பக்கம் 317 இல் கூறியிருக்கிறார்.

இது முதல் பொய்.

சரி அப்படியே அது அல்லாஹ்வின் வஹி தான் என்றாலும், அலாஹ்வின் வார்த்தையில் பிழையிருக்குமா? நிச்சயம் இருக்காது. ஆனால் மேற்படியார் வஹி என்று கூறிய செய்திகளில் இலக்கண பிழை இருக்கிறது !!

Words of god not can exchange

இது, அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி என்று தத்கிரா எனும் நூல் பக்கம் 116 இல் கூறியுள்ளார் உங்கள் சாஹிப்.

இலக்கணப் பிழையின்றி எழுதுவதாக இருந்தால் Words of god cannot exchange என்று எழுதியிருக்க வேண்டும்.

அதற்கு பதில், இவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் Words of god not can exchange

என்று எழுதி விட்டார்.

கடவுளின் வார்த்தையில் இப்படிப் பிழை வரலாமா என்று கேட்டு பலரும் கொக்கியிட்ட போது, ஆஹா வசமாக மாட்டிக் கொண்டோமோ என்று கருதிய வஹீ என்பது ஃபோர்ஸாக வரும் போது இலக்கண விதிகளைக் கண்டு கொள்ளாது என்று ஹகீகதுல் வஹீ, பக்கம்: 317 இல் கூறி தன்னுடன் உள்ள சிந்தனையற்றவர்களை தக்க வைத்துக் கொண்டார்.

இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால்,

இவரது நூற்களை மொழியாக்கம் செய்து வெளியிடும் போது, இந்த தவறை சரி செய்து சரியாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பது தான்.

அதாவது, அல்லாஹ்விடமிருந்து தவறாக வந்த வஹியை இவர்கள் மொழியாக்கத்தின் மூலம் சரி செய்து சாதனை படைத்திருக்கிறார்கள் !!

அனைத்தையும் விட உச்சகட்டமாக, இன்னொரு அருமையான சம்பவம்னும் இவரது காலத்தில் நடந்த்திருக்கிறது.

அதாவது, 

முஹம்மதீ பேகம் என்ற பெண்ணை மணமுடித்துத் தருமாறு அப்பெண்ணின் தந்தை அஹ்மத் பேக் என்பவரிடம் நமது சாஹிப் அவர்கள் கேட்டிருக்கிறார்.

அவர் மறுத்து விட்டார். மறுத்து. சுல்தான் முஹம்மது என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்க அவர் முடிவு செய்தார்.

அப்போது மிர்ஸா குலாம் "சுல்தான் முஹம்மத் அவளைத் திருமணம் முடித்தால் முப்பது மாதத்தில் சுல்தான் முஹம்மத் மரணிப்பார். 
அவர் மரணித்து இத்தா காலம் முடிந்ததும் நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன்; 

அவ்வாறு செய்யாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்குச் சான்று'' என்று தனது ஆயினே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 325ல் எழுதினார். 

ஆனால் சுல்தான் முஹம்மதுக்கு முன் இவன் மரணித்து தன்னைத் தானே பொய்யர் என்று நிரூபித்தார் !

அந்த பெண்ணை அவர் மணக்கவில்லை.
30
மாதத்தில் அந்த பெண்ணின் கணவர் மரணிப்பார் என்று முன்னறிவிப்பு செய்தார்.. அது நடக்கவில்லை.

இந்த முன்னறிவிப்புகள் நடக்காவிட்டால் நான் நபியில்லை, நன் பொய்யன் தான் என்பதற்கு இதுவே சான்று என்று சவால் விடுத்து, தன்னை பொய்யர் என்று அவரே நிரூபித்து விட்டு சென்ற்றிஉக்கும் உத்தமர் தான் இந்த மிர்சா சாஹிப்.

வரலாற்றில் இந்த அளவிற்கு அசிங்கப்பட்ட ஒரு பொய் நபி இவராக தான் இருப்பார்.
மற்றவர்களையெல்லாம் பொய்யர் என்று நிரூபிக்க நாம் தான் முயற்சிக்க வேண்டியிருந்தது, ஆனால் மிர்சா சாஹிப் மட்டும் தான் த்னை தானே நிரூபித்து சென்றிருக்கிறார்.

இறுதியாக, மசீஹ் வரும் போது பிளேக் நோய் ஏற்படும் என்று குர் ஆனில் இருப்பதாக உங்கள் சாஹிப் சொல்லியிருக்கிறாரே, அந்த வசனம் எங்கே ? என்று கேட்டதற்கு சம்மந்தமில்லாமல் 27:82 வசனத்தை எடுத்து காட்டியிருந்தீர்கள்.

அதற்கும் பிளேக் நோய்க்கும் என்ன தொடர்பு? என்று எனது முந்தைய வாய்ப்பின் போதே கேட்டிருந்தேன். அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல், அந்த வசனத்தில் எனக்கு என்ன புரிகிறது என்று மட்டும் கேட்டிருக்கிறீர்கள்.

எனக்கு என்ன புரிகிறது, நான் என்ன விளங்குகிறேன் என்பதெல்லாம் இங்கே பிரச்சனையில்லை. அதை சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை.

அந்த வசனத்திற்கும் பிளேக் நோய்க்கும் என்ன தொடர்பு என்று எனக்கு புரியவில்லை.அவ்வளவு தான். பிளேக் நோய் என்று அதில் எதுவும் சொல்லப்படவில்லை. சாதாரண நோய் பற்றியும் இல்லை.. நோய்க்கும் அந்த வசனத்திற்கும் கூட சம்மந்தமில்லை.

அப்படி தான் புரிகிறது என்றால் எப்படி புரிவது என்று விளக்கி தாருங்கள், அப்படி புரிகிறேன்.

முந்தைய பாகத்தில் ஏழு மசாலாக்கள், இந்த பாகத்தில் ஆறு.. ஆக மொத்தம் 13 மசாலாக்களை தந்திருக்கிறேன்.

மிர்சா சாஹிப் என்பவர் சராசரி மனிதனாக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என்பதும், 
ஒன்று அவர் பொய்யராக இருக்க வேண்டும், அல்லது மன நலம் குன்றியவராக இருக்க வேண்டும்.

இரண்டை தவிர மூன்றாவதற்கான வாய்ப்பு இல்லை என்பது இந்த மசாலாக்கள் மூலமே தெள்ளத் தெளிவாக புரிகின்றன.

இவரது வண்டவாளங்களைப் பற்றி பேச இன்னும் பல ஆதாரங்கள் கைவசம் இருந்தாலும், அவற்றை தற்போது வெளியிட வேண்டிய அவசியமில்லை.

நடுநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு இவையே போதுமான சான்றுகள் தான்.

இத்துடன் எனது அனைத்து மறுப்புகளும் முடிவுற்றன.

நேர்வழிக்கு அல்லாஹ் போதுமானவன். வஸ்ஸலாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக