சனி, 25 அக்டோபர், 2014

இல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்??


சூனியம் தொடர்பாக இன்னொரு அற்புத (?) கேள்வியையும் கேட்கின்றனர்.
அதாவது, சூனியம் என்பதே கிடையாது என்று சொன்னால், சூனியம் பெரும்பாவம் என்றெல்லாம் ஹதீஸ்களில் வருகின்றதே, அவற்றுக்கு என்ன பொருள்??
இல்லாத ஒரு விஷயம் எப்படி பெரும்பாவம் ஆகும்?? என்று கேள்வி எழுப்புகிறார்கள்..
இதுவும் அடிப்படையற்ற ஒரு வாதமாகும்.
சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று யாரும் சொல்லவில்லை. சூனியம் என்பது உண்டு, அது ஒரு தந்திர வித்தை தானே தவிர மாய மந்திரங்கள் இல்லை என்பது தான் நமது வாதம்.
பேச்சு கூட சூனியம் என்று நபி (சல்) அவர்கள் சொல்லித்தான் இருக்கிறார்கள், மூசா நபிக்கெதிராக எதிரிகள் சூனியத்தில் தான் போட்டி போடவே செய்தனர் என்று அல்லாஹ்வே சொல்கிறான் எனும் போது சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று எந்த முஸ்லிமாவது சொல்வானா???
சூனியம் என்பது உண்டு. ஆனால் இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் உள்ள சூனியம் அல்ல. மாய மந்திரங்கள், அற்புதங்கள் என்கிற அர்த்தத்தில் சூனியம் என்பது உலகில் இல்லை, கியாமத் நாள் வரை அதை காட்ட இயலாது.
மூசா நபிக்கு எதிராக ஃபிர் அவ்னின் கூட்டத்தார் செய்து காட்டியது கூட அற்புதமல்ல, கண்களை ஏமாற்றும் வித்தை என்று அல்லாஹ்வே சொல்கிறான்.
அப்படிப்பட்ட வித்தைகளை வெறும் தந்திரம் என்று சொல்லி செய்யாமல் அற்புதங்கள் என்று சொல்லி ஒருவன் செய்தால் அது மிகப்பெரிய பாவம் என்று தான் ஹதீஸ்களில் சொல்லப்படுகின்றன.
தந்திரத்தை தந்திரம் என்றே சொல்லி செய்து காட்டுவது குஃப்ர் இல்லை, தந்திரத்தை அற்புதம் என்பதாக கூறி மக்களை ஏமாற்ற முயல்வது தான் குஃப்ர் !!
விபச்சாரம் செய்தால் தண்டனை என்று சொல்லப்பட்டால் விபச்சாரம் என்கிற ஒன்று இருக்கிறது என்று தானே பொருள்? அது போல் தானே சூனியத்தையும் புரிய வேண்டும்? என்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.
எல்லாவற்றையும் அப்படி புரிய முடியாது. இருப்பதை செய்வதற்கும் தண்டனை என்று சொல்லப்படும், இல்லாததை இருப்பதாக நம்பி அல்லது பிறரை நம்ப வைத்து செய்வதற்கும் தண்டனை என்று சொல்லப்படும்.
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது கூட பெரும்பாவம் தான்.
அல்லாஹ்வுக்கு இணையிருப்பதாக நம்பினால் கடும் தண்டனை என்று அல்லாஹ் சொல்லி விட்டான், எனவே அல்லாஹ்வுக்கு இணையாக உலகில் சில விஷயங்கள் இருக்கதான் செய்கின்றன என்று யாராவது புரிவோமா?
இல்லை !
அல்லாஹ்வுக்கு இணையில்லை தான், இணையிருப்பதாக நீ நம்பாதே என்று தான் பொருள் கொள்வோம்.
அது போல்,
சூனியத்திற்கு எந்த அற்புத ஆற்றலும் இல்லை, அவ்வாறு இருப்பதாக நீ நம்பாதே என்று தான் புரிய வேண்டும்!
எளிமையாக புரிவோம், நேர்வழி பெறுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக