முதலில், காரணமின்றி, விவாதத்திற்கு அழைப்பு விடும் வழக்கம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கிடையாது.
எதிர் கொள்கையுடையவர்கள் விவாதிக்க முன்வந்து அழைத்தால் அதை ஏற்றுக் கொள்ளும்.
அது தான் வழக்கம்.
எதிர் கொள்கையுடையவர்கள் விவாதிக்க முன்வந்து அழைத்தால் அதை ஏற்றுக் கொள்ளும்.
அது தான் வழக்கம்.
அது தவிர, எந்த சித்தாந்தமாவது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பெருமளவில் மக்கள் வழிகேட்டில் செல்வதாக தோன்றினால் அப்போது அந்த கொள்கையை கொண்டிருப்பவர்களை விவாதிக்க அழைப்பதுண்டு.
காதியானி மதத்தை பொறுத்தவரை, இந்த சமூகத்தில் நயா பைசாவுக்கு பயனுள்ள தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை என்பதே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
1994 இல் தலைதூக்கிய இந்த கொள்கை, அந்த வருடம் நடந்த விவாத்தோடு சமாதியாக்கப்பட்டது.
1994 இல் தலைதூக்கிய இந்த கொள்கை, அந்த வருடம் நடந்த விவாத்தோடு சமாதியாக்கப்பட்டது.
சூனியம் செய்து மக்களை வழிகெடுக்கலாம் என்று திரிகிற சாமியார்கள் இந்த சமூகத்தில் உருவாக்கியுள்ள தாக்கத்தில் லட்சத்தில் ஒரு மடங்கை கூட நீங்கள் ஏற்படுத்தவில்லை.
சல்லாபம் புகழ் நித்தியானந்தா உருவாக்கியுள்ள தாக்கத்தில் நூறில் ஒரு பங்கை தான் நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள்
எனும் போது, நாங்களும் இருக்கிறோம், எங்களோடும் விவாதிக்க வாருங்கள் என்று அறிவிப்பு செய்து சிரிப்பு மூட்ட வேண்டாம்.
வழக்கம் போல் முகனூலில் படம் காட்டி திரியுங்கள், அது போதும் !
மேலும், இந்த முகனூலில் உங்களோடு நாம் எழுத்து மூலம் செய்த விவாதமானது என் சிறிய தந்தை என்கிற முறையில் எனக்கிருக்கும் அன்பு, மரியாதை, மற்றும் கடமையின் வெளிப்பாடு தான்.
அல்லாமல், நீங்கள் பெரும் தாக்கத்தை இந்த சமூகத்தில் உருவாக்கி விட்டீர்கள் என்பதால் அல்ல என்பதை புரிய முடிந்தால் புரியுங்கள்.
அல்லாமல், நீங்கள் பெரும் தாக்கத்தை இந்த சமூகத்தில் உருவாக்கி விட்டீர்கள் என்பதால் அல்ல என்பதை புரிய முடிந்தால் புரியுங்கள்.
தொடர்ந்து நான் இங்கே எழுதப்போவதுமில்லை. அப்படி தொடர்ந்து விவாதித்தே ஆக வேண்டுமானால், நேரடியாக விவாதிக்கலாம், நீங்கள் உங்கள் அதிகார மையத்துடன் தொடர்பு கொண்டு எனக்கு தெரியப்படுத்தினால் நான் சம்மந்தப்பட்டவர்களுடன் வருகிறேன் என்று தான் என் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அல்லாமல், உங்களுடன் நேரடி விவாதத்திற்கு முன் வர வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை.
விரலுக்கெத்த வீக்கம் இருந்தால் போதும்.நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட எண்ண வேண்டாம்.
விரலுக்கெத்த வீக்கம் இருந்தால் போதும்.நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட எண்ண வேண்டாம்.
கண்டவர்களையெல்லாம் விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கும் வேலை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இல்லை.
குறைந்த பட்சம், சமூகத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கி விட்டு அதன் பிறகு வந்து சொல்லுங்கள், நாங்களும் இருக்கிறோம் என்று..
அதுவரை, ஏற்கனவே சொன்னது போல், வழக்கமான உங்கள் முகனூல் படங்களை மட்டும் ஓட்டிக் கொண்டு இருங்கள்.

அல்லது, நிஜமாகவே தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க உங்களுக்கு விருப்பமிருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தை நீங்கள் அதிகாரப்பூர்வமாக தொடர்பு கொள்ளுங்கள்,
30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை 600001.
இது தான் தலைமையக முகவரி. இந்த முகவரிக்கு, உங்கள் விவாத அழைப்பை குறித்து கடிதம் எழுதுங்கள். அவர்கள் பதில் சொல்வார்கள்!
இதை காதியானிக் கூட்டத்தின் தலையில் உறைக்கும் வண்ணம் சொல்லிக் கொள்கிறேன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக