சனி, 25 அக்டோபர், 2014

இருக்கு.. ஆனா இல்ல..


இருக்கு.. ஆனா இல்ல..
முன்னாடி இருந்துச்சு, ஆனா இப்போ இல்ல..
இப்போ இல்ல.. ஆனா அப்போ இருந்துச்சு..
அதால எத வேணாலும் செய்யலாம்.. ஆனா செய்ய முடியாது..
அதால சாகடிக்கவும் செய்யலாம்.. ஆனா சாகடிக்க முடியாது.
மனக்குழப்பத்த மட்டும் தான் ஏற்படுத்த முடியும்.. ஆனா அத கூட எல்லாருக்கும் செய்ய முடியாது.
யார் வேணாலும் செய்யலாம், ஆனா அத கூட அல்லாஹ் நாடுனா தான் செய்ய முடியும்.
கை கால எல்லாம் முடமாக்கலாம் ஆனா நபிமார்கள் காலத்துல யாரும் அப்படி செய்யல..
நபி ஆறு மாசம் மனக்குழப்பத்துல இருந்தாங்கங்கறது உண்மை தான்.. ஆனா மனக்குழப்பத்துல இல்ல..
ஆறு மாசமா ஒருவர் மனக்குழப்பத்துல இருந்தா அவர் பேசுறதுல நிறைய தவறு வரும் தான். ஆனா குர் ஆனுல எந்த தவறும் இல்ல‌
அவருக்கு யாரும் சூனியம் செய்யல‌னு அல்லாஹ் குர் ஆனுல சொல்றது சரி தான்.. ஆனா சூனியம் செஞ்சிருக்காங்க..
அப்படி நம்புறது பாவம் தான்.. ஆனா அப்படி தான் நம்பணும்.
சூனியத்த செய்றது ஷைத்தான் வேல.. ஆனா அத கத்து தந்தது மலக்கு\
மலக்கு அல்லாஹ்வுக்கு மாறு செய்யவே மாட்டாங்க சரி தான். ஆனா அல்லாஹ்வுக்கு எப்படி இணை வெக்கிறதுன்னு கத்துக்கொடுப்பாங்க..
புஹாரி இமாம் மனிதர் தான். ஆனா அவர்கிட்ட தவறே வராது.
---
---
---
---
---
---
---
இப்படியெல்லாம் அந்தர் பல்டி, ஆகாய் பல்டிகள் பல அடித்து, முரண்பாட்டின் மொத்த உருவமாய் காட்சி தருவதை விட..
குர் ஆனில் சூனியம் என்பது பொய் என்று அல்லாஹ் சொல்லி விட்டபடியால், சூனியம் உண்மை என்பதாக வரக்கூடிய ஹதீஸ்கள் பொய்யானவை என்று ஒதுக்கி விடுகிறேன்..
என்கிற ஒற்றை வரியை சொன்னால் போதுமானது !
மூளையும் குழம்பாது, இணை வைக்க வேண்டிய நிலையும் வராது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக