ஒரு கருத்தை பல அறிவிப்பாளர்கள் அறிவித்து, அதற்கு மாற்றமான கருத்தை குறைவான அறிவிப்பாளர்கள் அறிவித்தால், குறைவான எண்ணிக்கையிலுள்ள அத்தகைய அறிவிப்பாளர்கள் பலமானவர்களாக இருந்தாலும் அத்தகைய ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்பது ஹதீஸ் உசூல்.
இதற்கு "ஷாத்" வகை என்று பெயர்.
குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று நாம் கூறுகையில் நம்மை விமர்சனம் செய்து, நாம் ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்றெல்லாம் கூறி கேலி செய்கிறவர்கள் கூட மேலே உள்ள உசூலை அங்கீகரிக்கின்றனர் என்பது உலக மகா நகைச்சுவையும் முரண்பாட்டின் மொத்த உருவமுமாகும் !
ஐந்து (உதாரணத்திற்கு) பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்த செய்திக்கு மாற்றமாக ஒரு பலமானவர் ஒரு செய்தியை அறிவித்தால் அந்த செய்தியை ஏற்க கூடாது என்று இவர்கள் சொல்வார்களானால்
அந்த அறிவிப்பாளர் தான் பலமானவராயிற்றே? அவரது செய்தியை புறக்கணிப்பது மட்டும் ஹதீசையே மறுப்பதாக ஆகாதா?
அந்த அறிவிப்பாளர் தான் பலமானவராயிற்றே? அவரது செய்தியை புறக்கணிப்பது மட்டும் ஹதீசையே மறுப்பதாக ஆகாதா?
பலர் கூறியதற்கு மாற்றமாக ஒரு பலமானவர் ஒன்றை அறிவிக்கிறார், அவரது அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறீர்கள் என்றால் உங்கள் கருத்துப்படி அவர் பொய்யரா?
அவர் பொய்யரில்லை என்றால் அவர் அறிவிப்பாளர் தரத்தில் பலமானவர் என்று பொருள். அறிவிப்பாளர் தரத்தில் பலமானவர் என்றால் இவர்கள் கருத்துப்படி அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று பொருள்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை இவர்கள் மட்டும் மறுக்கலாமோ ?
மறுக்கலாம் என்று விதி வகுத்துக் கொள்ளும் அளவிற்கு ஹதீஸ் விஷயத்தில் அலட்சியம் காட்டலாமோ?
மறுக்கலாம் என்று விதி வகுத்துக் கொள்ளும் அளவிற்கு ஹதீஸ் விஷயத்தில் அலட்சியம் காட்டலாமோ?
என்பன போன்ற கேள்விகளை இவர்களிடம் கேட்பதன் மூலம் இது போன்ற மூடர்களின் முரண்பாடுகளையும், தனி மனிதரின் பேரிலுள்ள வெறுப்பிற்காக மார்க்கத்தை கூட குழி தோண்டி புதைக்க தயங்காத இவர்களது கீழ்நிலையையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஐந்து பலமான அறிவிப்பாளர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக ஒரு பலமானவர் அறிவித்தால் அதன் காரணமாக அவரையே புறந்தள்ளி விடலாமென்றால், ஆயிரக்கணக்கான சஹாபாக்கள் அறிவித்த குர்ஆனுக்கு மாற்றமாக ஐம்பது அறிவிப்பாளர்கள் ஒன்றை அறிவித்தால் கூட, அதை தூக்கிப்போட என்ன தயக்கம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக