உடன் தங்கியிருக்கும் போரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு
போரா மதத்தவர்களின் தொழுகை, நோன்பு என அவர்கள் செய்யும் எல்லா அமல்களும் நூதனமாகவும் கேலிக்கூத்தாகவும் இருக்கும்.
அவர்களுக்கென பிரத்தியேக வகையான தொப்பி.. அந்த வகையான தொப்பியை அணிந்தால் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாம். அப்படி யார் சொன்னது என்று கேட்டால், எங்கள் முல்லாக்கள் சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
தொழுகையின் துவக்கமே சலாம். சலாத்தைக் கொண்டு தொழுகையை முடிக்க சொல்லி நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கும் போது, இவர்கள் சலாத்தைக் கொண்டு துவக்குவர்.
தொழுகை விரிப்பில், இவர்களது முல்லா தொகுத்தெழுதிய துஆ புத்தகம் ஒன்று மற்றும் ஒரு தஸ்பி மணி ஆகிய இரண்டும் கட்டாயமிருக்க வேண்டும்.
விரிப்பை விரித்து, இந்த இரண்டையும் எங்கேயிருந்தாலும் தேடி எடுத்து, சஜதா செய்யும் இடத்திற்கு அருகே வைத்த பிறகு தான் தொழ ஆரம்பிக்கின்றனர்.
பின் தொழுகை முறையிலும் ஏக குழப்பம். தக்பீர் இல்லை, முழுமையாக ஃபாத்திஹா சூரா ஓதக் கூட மாட்டார்கள், நாம் அரை ரக்காஅத் தொழுகிற நேரத்தில் இவர்கள் நான்கு ரக்காஅத்தை முடிப்பார்கள்.
தொழுகை முடிந்ததும், நெஞ்சின் இடப்புறத்தில் (இதயம் இருக்கும் இடத்தில்) படார் படார் என தன் வலது கையால் ஐந்தாறு முறை அடித்துக் கொள்வார்கள்..
(இந்த சத்தம் கேட்டு ஒரு முறை நான் தூக்கத்திலிருந்தே முழிச்சிருக்கிறேன்னா பாத்துக்கோங்க..)
(இந்த சத்தம் கேட்டு ஒரு முறை நான் தூக்கத்திலிருந்தே முழிச்சிருக்கிறேன்னா பாத்துக்கோங்க..)
மார்க்கத்தை இப்படி குழி தோண்டி புதைக்கிறார்களே என நமக்கு ஏக கடுப்பு வரும்.
சஹர் நேரத்தில் உணவு உண்கிறார்களோ இல்லையோ, தொழுகை விரிப்பில் இவர்கள் வைத்திருந்த துஆ புத்தகத்தை கையில் வைத்திருப்பார்கள், சஹர் உணவு உண்ண அதுவும் தொப்பியும் கட்டாயம் அவசியம். (இல்லையென்றால் நோன்பே கூடாது போல..)
இன்னொரு வேடிக்கை, இரு தினம் முன்பு அந்த நபர் என்னிடம், உங்களுக்கு லைலத்துல் கத்ர் முடிந்து விட்டதா? என்று கேட்டார். நானும், ஐந்து இரவுகளில் ஒரு இரவு முடிந்தது, இன்னும் 4 இரவுகளில் தேடலாம் என்றேன்.
நம்மை ஏற இறங்க பார்த்தார் (கேலி செய்கிறாராம்
"எங்களுக்கு இன்றும் (அதாவது 21 உம்) பின்னர் 30 ஆம் இரவும் மட்டும் தான்.. என்றார்.
ஒரு வேளை 29 உடன் மாதம் முடிந்து விட்டால் என்ன செய்வது? என்று திருப்பிக் கேட்டேன்,
இல்லை இல்லை, எங்களுக்கு இந்த மாதம் முப்பது தான் என்று சொன்னார்.
இல்லை இல்லை, எங்களுக்கு இந்த மாதம் முப்பது தான் என்று சொன்னார்.
(அது சரி!)
சரி, நான் கியாமுல் லைல் தொழுகைக்கு செல்கிறேன் என்று சொல்லி புறப்பட்டார்.
பின் அறைக்கு திரும்பியது இரவு 3 மணிக்கு. வந்தவர் அப்படியே படுத்து தூங்கி விட்டார்..
நான் சஹர் முடித்து, ஃபஜ்ர் தொழுகையையும் முடித்து வரும் போது தூங்கி எழுந்தவர், அவசர அவசரமாக தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு (?!!), பேரீத்தப்பழம், தண்ணீர் எல்லாம் சாப்பிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டார்.
பிரதர், பாங்கு சொல்லி அரை மணி நேரமாச்சு, இப்போ சாப்பிடுறீங்களே? என்று கேட்டேன்.
இது மக்ரூஹ், செய்யாமல் இருந்தால் நல்லது தான், ஆனால் செய்வது குற்றமில்லை என்று பாடம் நடத்தினார்.
என்ன கொடுமை சார்.. என்று அந்த தூக்க கலக்கத்தில் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
அவர் பேசும் ஹிந்திக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என்பதால் இவரை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே சற்று முன்பாக அவரிடம், "நீங்களும் ஷியாக்களும் ஒரே மாதிரியான கொள்கை கொண்டவர்கள் தானா?| என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் சும்மா கேட்டுப் பார்த்தேன்.
"இல்லை இல்லை, அவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்கே மாற்றமானவர்கள், நாங்கள் ஒன்றும் அவர்களைப் போல் இல்லை.. என்று மேப்படியாரிடமிருந்து பதில் வந்தது !!
இங்க மட்டும் என்ன வாழுதாம்? என்று ஹிந்தியில் கேட்க தெரியவில்லை. அமைதியாகி விட்டேன் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக