சனி, 25 அக்டோபர், 2014

சஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது?


சஹாபாக்கள் கொண்டிருந்த ஈமானை நாம் கொண்டிருக்கும் ஈமானோடு ஒப்பிடவே முடியாது. நம்மை விடவும் ஆயிரம் மடங்கு அதிக இறை நம்பிக்கை அவர்களிடம் மிளிர்ந்தது.
அதன் வாயிலாக, மார்க்க சட்டங்களாக அவர்கள் அறிந்து வைத்திருப்பவற்றை செயல்படுத்துவதில் அவர்கள் காட்டிய ஆர்வமும் உத்வேகமும் கூட நம்மை விட பல மடங்கு அதிகம் !
ஆனால், மார்க்க சட்டங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா? என்று பார்த்தால் இல்லை என்பது தான் பதில். 
இல்லையென்று சொல்வதில் எந்த கண்ணியக்குறைவும் இல்லை.
சஹாபாக்கள் வாழ்ந்த காலம் என்பது அந்த அளவிற்கு வெறுமையான காலம்.
பிறை பார்த்து விட்டோம், இனி என்ன செய்வது? என்று கேட்பதற்காகவே ஒரு சஹாபிக் கூட்டம் ஒரு நாள் பயணப்பட்டிருக்கிறது.
மார்க்கத்தில் ஒரேயொரு சட்டத்தை அறிய பல மைல் தூரம் பயணப்படுவார்கள் என்றால் அவ்வாறு பயணப்படாத பலருக்கு அந்த சட்டம் தெரிந்திருக்காது என்பது நிதர்சன உண்மை.
நுபுவத்தின் கடைசி காலங்களில் கூட தொழுகையில் செய்யும் ருக்கூஹ்வின் போது கைகளை தொடைகளுக்கிடையில் வைத்தவாறு தொழுத சஹாபி இருந்தார்.
நபி (சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகும் கூட, மூன்று முறை சலாம் சொல்லியும் பதில் கிடைக்கவில்லையென்றால் அன்னியரின் வீட்டு வாசலில் நின்று கொண்டேயிருக்காமல் திரும்பி சென்று விட வேண்டும் என்கிற சட்டத்தை மிகப்பெரிய சஹாபியான உமர் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இது தான் உண்மை, இதை சொல்வதால் சஹாபாக்களை இழிவுப்படுத்தியதாக ஆகாது. அவர்கள் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது.
அவர்களை சிலாலித்துப் பேசும் இறைவன் கூட, அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்று கூறவில்லை, அவர்கள் கொண்டிருந்த தக்வாவையும் இறை நம்பிக்கையையும் மட்டும் தான் சிலாகிக்கிறான்.
சஹாபாக்களை மதிப்போம் , ஆனால் பின்பற்ற மாட்டோம் என்று செய்யப்படுகிற பிரச்சாரத்தின் அடித்தளம் இது தான் என்பதை நாம் புரிய வேண்டும்.
வஹி மட்டுமே பின்பற்றத்தக்கது !
சஹாபாக்களிடம் அல்லாஹ் பேச மாட்டான், வஹி அருள மாட்டான், நபியின் மரணத்திற்கு பிறகு அவர்கள் செய்யும் தவறுகளை திருத்தவும் மாட்டான் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக