ஒட்டு மொத்த வாழ்க்கையும் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் தாலியில் தான் அடங்கியிருக்கிறது என்று நம்புகிற பெண்களே அதிகம்.
கணவனை செருப்பால் கூட அடிப்பாளாம் ஒரு பெண்.
குடிக்க சோறு, கஞ்சி கொடுக்காமல் கூட துரோகம் செய்வாள், கணவன் இருக்கவே இன்னொருவனுடன் கள்ளத் தொடர்பு கூட வைத்திருப்பாள்.
குடிக்க சோறு, கஞ்சி கொடுக்காமல் கூட துரோகம் செய்வாள், கணவன் இருக்கவே இன்னொருவனுடன் கள்ளத் தொடர்பு கூட வைத்திருப்பாள்.
அதுவெல்லாம் ஒழுக்கத்திற்கோ, குடும்பப் பாங்கிற்கோ களங்கம் சுமத்தவல்ல காரியமாக எவரும் சொல்வதில்லை, சமூகமும் அவ்வாறு பார்ப்பதில்லை.
ஆனால், இத்தனையையும் செய்கிற அந்த பெண், கழுத்தில் கட்டியிருந்த தாலியை கழற்றியெறிந்து விட்டால் அவள் ஏதோ கொலை குற்றம் செய்தது போல் திட்டி தீர்க்கிறது இந்த சமூகம்.
ஒரு பெண்ணின் மானமும் மரியாதையும், அவளது ஒட்டு மொத்த எதிர்காலமும் ஒரு மஞ்சள் கயிறில் தான் அடங்கியிருக்கிறது என்பதாக நம்புகிற இந்த சமூகம் பெண்களுக்கு சம உரிமை பற்றி பேசுவது தான் முரண்பாட்டின் உச்சம் !
ஒரு வேளை திருமணமாகி விட்டதற்கான அடையாளமாய் தாலி கட்டிக் கொள்வதும் காலில் மெட்டி அணிந்து கொள்வதும் தான் ஒரு பெண்ணுக்கு மரியாதையென்றால்அதே மரியாதையையும் சம உரிமையையும் (?) ஆண்களுக்கும் இந்த சமூகம் வழங்கட்டுமே?
அதை செய்யாமல் ஆண்களுக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது??
தாலி அணிவது பெண்களுக்கான உரிமையென்றால் ஆணை விட பெண்ணுக்கு கூடுதல் உரிமை வழங்கி விட்டு பெண்ணுரிமைக்காக ஏன் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலை கொள்ளாதது ஏனோ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக