சனி, 25 அக்டோபர், 2014

சூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு


சூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை பாமரத்தனமான ஒரு உதாரணத்தின் மூலம் புரியலாம் !
நேற்று வரை ஊரில் இருந்த நண்பனை இன்று காலை திடீரென துபையில் சந்திக்கிறீர்கள்.
எப்போது வந்தாய், எந்த ஃபிளைட்.. என்றெல்லாம் விசாரிக்கிறீர்கள்.
ஃபிளைட்ல வர்றதுக்கெல்லாம் ஏதுப்பா காசு.. துபை போகணும், எவ்வளவு செலவாகும்னு சூனியக்காரன் ஒருத்தன் கிட்ட கேட்டேன், 500 ரூபாய் குடு, அஞ்சே நிமிஷத்துல நீ துபைல இருப்பே அப்படின்னு சொன்னான்.. கொடுத்தேன், மன்னார்குடியில் இருந்த நான் அஞ்சே நிமிஷத்துல துபை ஜுமேரா ஹோட்டல்ல நிக்கிறேன் !
என்று ஒருவன் சொன்னால் சூனியத்தை நம்பாதவர்கள் அவனை பொய்யன் அல்லது கிறுக்கன் என்பார்கள்.
சூனியம் கூட அல்லாஹ் நாடினால் நடக்கும் என்று நம்புகிறவர்கள், ஆமாம் ஆமாம், அல்லாஹ் நாடினால் ஏன் முடியாது, அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும் என்பது கூட இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு தெரியவில்லை என்று கூறி,
மேற்படி மன்னார்குடி டு துபை பறந்து வந்த அந்த அற்புத மனிதரை ஆரத்தழுவிக்கொள்வார்கள்.
ஐந்து நிமிட துபை பயணத்தை ஏற்றுக்கொள்வார்கள்!
(நம்பாமல் எப்படி? அவனென்ன சூனியக்காரனின் திறமையினாலா வந்தான் ? அல்லாஹ் நாடினான், அதனால் வந்தான் !!)
வேறுபாடு இது தான் !
மற்றபடி, இவர்களது காதில் பூ ஒன்று சுற்றப்பட்டிருக்கும், மற்றவர்களுக்கு அது இருக்காது. இதையும் வேறுபாடாக கொள்ளலாம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக