சனி, 25 அக்டோபர், 2014

சூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை நேரில் காட்டு என்று சொல்வது போன்றதா?


சூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை நேரில் காட்டு என்று சொல்வது போன்றதா?
இரண்டுக்கும் என்ன வேறுபாடு??
இரண்டுக்கும் தெளிவான வேறுபாடு உள்ளது. அதை விளக்குவதற்கு முன், இது போன்று கேள்வியெழுப்புவதன் மூலம் எந்த அளவிற்கு வழிகேட்டின் உச்சத்திற்கே சென்று கொண்டிருக்கிறார்கள் எனபதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இறந்து போன நல்லடியார் நாம் பேசுவதை கேட்டு பதிலளிப்பார் என்று பரேலவிகள் சொன்ன போது, அத்தகைய ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உண்டு என்று நாம் மறுப்பு சொன்னோம்.
இதற்கு எதிர் கேள்வி கேட்ட அவர்கள், எங்கிருந்து எத்தனை பேர் அழைத்தாலும் அனைத்தையும் கேட்டு பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? என்று..
அல்லாஹ்வின் வல்லமை குறித்தே கேள்வியெழுப்பி தாங்கள் எந்த அளவிற்கு கடைந்தெடுத்த வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தனர்.
அதாவது, தங்களது தர்கா வழிபாட்டினை நியாயப்படுத்த இவர்கள் எத்தகைய நிலைக்கும் செல்வர், அல்லாஹ்வையே அதற்கு ஒப்புமையுமாக்குவர்.
அதே நிலையை தான் இன்று சூனியத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களிடம் காண் முடிகிறது. அதன் வெளிபாடு தான், மேற்கூறிய இவர்கள் கேள்வியும்.
அல்லாஹ்வை காண்பதைப் பொறுத்தவரை, அது இவ்வுலகில் மனிதனால் இயலாத காரியம் என்று அல்லாஹ் தெளிவாக சொல்லி விட்டான். எந்த கண்களும் அவனை காணாது.
அல்லாஹ் இருக்கிறான் என்பதை நிரூபிப்பதற்கு கூட, அவன் படைத்த இந்த பூமி, அண்ட சராசரங்களை பார்த்து அதன் மூலம் படைத்த ஒருவன் இருக்கிறான் என்று புரியுமாறு தான் அல்லாஹ் சொல்கிறானே அல்லாமல், அவனை கண்டு நம்புமாறு சொல்லவில்லை.
இவர்கள் சூனியத்திற்கு சக்தி இருப்பதாக குர் ஆனிலேயே அல்லாஹ் சொல்கிறான் என்று நம்புகின்றனர்.
அப்படி நம்பக்கூடியவர்கள், இதோ சூனியத்தின் ஆற்றலை கண்ணால் காண முடியாது என்று அல்லாஹ் சொல்வதாக எடுத்துக் காட்ட வேண்டும்.
அவ்வாறு காட்டினால், அல்லாஹ்வை பார்த்து தான் நம்புவேன் என்று சொல்வதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமோ, சூனியத்தின் ஆற்றலையும் கண்ணால் கண்டு நிரூபணம் செய்து தான் நம்புவேன் என்பதை ஏற்க மாட்டோம்.
அல்லாஹ்வை பார்க்காமலேயே நம்பிய நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தான், சிலைகளுக்கு சக்தி இருப்பதாக சொல்லப்பட்ட போது அதை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள்.
அது எனக்கு தீங்கு செய்யட்டும் பார்ப்போம் என்று சொன்னார்கள்.
இவ்வுலகில் ஒரு காரியத்திற்கு பிரத்தியேக ஆற்றல் இருப்பதாக சொல்லப்பட்டால் அதை கண்கூடாக‌ கண்டு தான் நம்ப வேண்டும். அல்லாமல், அல்லாஹ்வை பார்க்காமல் தானே நம்புகிறாய்? அது போல் இதையும் பார்க்காமல் நம்பு ..என்று சொல்வது, தங்கள் அறியாமையை மூடி மறைக்க் இவர்கள் பயன்படுத்தும் யுக்தி.
சரி, ஒரு வாதத்திற்கு இவர்களது இந்த மடமையான கேள்வியை ஏற்றுக் கொண்டால் கூட..
அல்லாஹ்வை காணா விட்டாலும், அல்லாஹ் இருக்கிறான் என்பதை எண்ணற்ற பல காரிணிகள் நமக்கு அன்றாடம் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அவன் படைப்புகள் ஒவ்வொன்றும், தன்னை படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதை அனுதினமும் பறைசாற்றிக் கொண்டு தான் உள்ளன.
அப்படி சூனியத்தை மெய்ப்படுத்தும் காரிணிகளையாவது இவர்கள் காட்ட வேண்டுமல்லவா?
சரி, சூனியம் செய்பவரின் முகத்தை காட்ட வேண்டாம், அவரது முகவரியை தர வேண்டாம், சூனியக்காரனை கொண்டு வந்து காட்டு என்று நாங்கள் கேட்கவில்லை,
அவன் சூனியம் என்று எதை செய்கிறானோ அதன் விளைவுகளையாவது நாங்கள் காண வேண்டுமே?
அப்படி காண்பதன் மூலம், எப்படி அல்லாஹ்வின் படைப்புகளையும் அவன் இவ்வுலகில் செய்யும் அற்புதங்களையும் கண்ணால் கண்டு விளங்கி அதன் மூலம் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நம்புகிறோமோ அது போல‌
சூனியக்காரன் ஒருவன் இருக்கிறான், அவனுக்கும் மகத்தான ஆற்றலெல்லாம் இருக்கின்றன என்பதை நாங்கள் நம்பிக் கொள்வோமே?
அதை செய்யலாமே?
ஆக, இவர்கள் மனமுரண்டாக தான் சூனியத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது, இவர்கள் எழுப்பும் இந்த கேள்வியின் மூலமும் நமக்கு புரிகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக