சனி, 25 அக்டோபர், 2014

தற்கொலையை தடுக்கும் இஸ்லாம்


வாழ்வதற்கு எந்த வழியும் இல்லை என முடிவு செய்து தற்கொலைக்கு தயாராகும் ஒருவனுக்கு கத்தி, தூக்குக் கயிறு, விஷ பாட்டில், ரயில் தண்டவாளம் என ஏராளமான வழிகள் முன்னே தெரிகின்றன !
சாகவே இத்தனை வழிகளை கண்முன் காட்டும் இறைவன், வாழ்வதற்கா காட்ட மாட்டான்?? என்கிற கண நேர சிந்தனையிருந்தால் கூட அவன் தன்னை மாய்த்துக் கொள்ள எண்ண மாட்டான்.
வறுமையின் வெளிப்பாடாய் வயிற்றில் கற்களை கட்டி பசி போக்கிய அந்த உத்தம சஹாபாக்கள் தான் பிற்காலத்தில் மக்காவை வெற்றி கொண்டு உலகம் முழுக்க இஸ்லாத்தை பரப்பினார்கள் !
நாம் கற்பனை கூட செய்திராத பெரும் துயரங்களை எல்லாம் சந்தித்த நபிமார்களும் சஹாபாக்களும் இறுதி வரை அல்லாஹ்வுக்காகவே வாழ்ந்து காட்டினார்கள் என்பதை புரிந்தால்
அற்பத்திலும் அற்பமான காரணங்களுக்கெல்லாம் தன்னையே மாய்த்துக் கொள்ளும் மூடத்தனம் இந்த சமூகத்தில் உருவெடுத்திருக்காது !
மார்க்க கல்வி, இஸ்லாமிய சட்ட திட்டங்கள் இவற்றை கற்பதோடு சேர்த்து, ஈமான் என்றால் என்ன, மறுமை நம்பிக்கை எப்படியிருக்க வேண்டும் என்பன போன்ற போதனைகளும் இந்த தலைமுறையினருக்கு அவசியம் !
இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக