சனி, 25 அக்டோபர், 2014

மார்கோ போலோ


மொபைலை எங்கேயாவது வைத்து விட்டு தேடுகிற வழக்கம் பலருக்கும் உண்டு. சமயத்தில், மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டோ அல்லது சைலன்டிலோ இடப்பட்டிருந்தால், இன்னொரு மொபையிலிலிருந்தும் அழைத்துப் பார்க்க முடியாது.
அந்த மாதிரி இக்கட்டான சூழலில் நமக்கு உதவும் அப்ப்ளிகேஷன் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதாம்.
இதற்கு பெயர் மார்கோ போலோ.
அதாவது, நமது மொபைலில் இந்த அப்ளிகேஷன் இருந்தால், மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் கூட, அதை எளிதில் கண்டுபிடித்து விடலாமாம்.
மொபைல் காணவில்லையென்றால், மார்கோ, மார்கோ என்று சத்தமாக அழைத்துக் கொண்டே தேட வேண்டும்.
நமது சத்தம், அந்த மொபைல் இருக்கும் குறிப்பிட்ட வரையறைக்குள் செல்கையில், நமது குரலை மொபைல் உள்வாங்கி, பதிலுக்கு "போலோ" என்று அது சத்தமிடுமாம் !
அதான் மார்கோ போலோ !
இது இயல்பாக அதில் ஸ்டோர் செய்யப்பட்டிருக்கும் அழைப்புக் குரல் தான்.
நாம் இதை மாற்றி கூட அமைக்கலாமாம்.
அடேய் எங்க இருக்கே? என்று நாம் கூப்பிட்டால், நான் இங்க தான்டா இருக்கேன்.. என்று மொபைல் பதில் சொல்லும் வகையிலும் அதை செட் செய்யலாம் ! 
நல்லா இருக்கே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக