சனி, 25 அக்டோபர், 2014

தங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு


ஆமாமா..
எங்க வீட்டு மொட்டை மாடியில் நின்று நாளை நான் பட்டம் விட்டால், அந்த பட்டம் நிலவில் கூட சிக்கிப் பிடிக்கும்.
அப்படி சிக்கவில்லையென்றால் அல்லாஹ் நாடவில்லை, அதனால் சிக்கவில்லை.
எங்க வீட்டு ஆலமரத்தில் ஆப்பிள் பழத்தை விளைய வைக்க முடியும்.
நடக்கவில்லையென்றால் அல்லாஹ் நாடவில்லை.. அதனால் தான் விளையவில்லை, அவ்வளவு தான்..
நாங்க வளர்க்கிற பசுமாடு தங்ககட்டியை தான் சாணமாக‌ போடும்.
அப்படி தங்கம் எதுவும் வரவில்லையென்றால் அல்லாஹ் நாடவில்லை, அதனால் வரவில்லை.
இப்படியே சொல்லி திரியலாம்.
இப்படியே சொல்லி விட்டால், உலகில் எதுவும், எங்கேயும், எப்போதும், யாராலும், யாரிடமும், எந்த காலத்திலும் நடக்கும், நடக்க வைக்க முடியும்.
உலகில் யாராலும் முடியாதது எதுவுமே இல்லை !
ஏதும் நடக்காமல் போய் விட்டால், அல்லாஹ் நாடவில்லை, அதனால் தான் நடக்கவில்லையே தவிர, அவருக்கு அது இயலாது என்பதால் அல்ல என்கிற ஒரு பதிலை சொல்லி விடலாம் !!
நல்லாயிருக்கு இந்த கூத்து.
இஸ்லாமா கேலிக்கூத்தா?
எந்த மார்க்கத்தில் இருந்து கொண்டு என்ன கழிசடை பேச்சு இது??
இதை தானய்யா கப்ர் வணங்கியும் சொல்றான்?
நான் என்ன செத்துப் போன அந்த அவ்லியாவுக்கே சக்தி இருக்குன்னா சொல்றோம்?
அல்லாஹ் அந்த சக்திய குடுப்பான்..
குடுக்குறப்போ அவர் செய்வார்.. குடுக்கலன்னா செய்ய மாட்டார்.. அப்படி தானே சொல்றோம்..
இப்படி பேசி திரிகிறவர்களை தான் கப்ர் வணங்கியென்றும் நாளை நிரந்தர நரகத்திற்கு முன்பதிவு செய்து வைத்திருக்கிறவர்கள் என்றும் சொல்கிறோம்.
அல்லாஹ் நாடினால் செத்துப் போனவர் அற்புதம் செய்வார் என்று சொன்னால் அவன் முஷ்ரிக்காம்.
அல்லாஹ் நாடினால் சூனியக்காரன் அற்புதம் செய்வான் என்று சொன்னால் மட்டும் இவர்கள் தவ்ஹீதை குத்தகைக்கு எடுத்தவர்களாக ஆகி விடுவார்க‌ளோ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக