வியாழன், 2 டிசம்பர், 2010

கூக்குரலால் இறுகட்டும் (அ) நீதியின் குரல்வளை !







அன்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..

நமது சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகள் எந்த அளவிற்கு நியாயமானதாக இருப்பினும், நாம் வைக்கும் கோரிக்கையில் வலிமை இல்லாதவரை, அவை அரசாங்கத்தின் கவனங்களை ஈர்க்காது என்பதை அனுபவ ரீதியில் உணர்ந்தவர்கள் முஸ்லிம் சமூகத்தினர்.

கோரிக்கை வலுவாக வேண்டுமெனில், எண்ணிக்கையை வலுப்படுத்த வேண்டும்
.

ஒன்றுபட்டால் சாதிக்க இயலாதது ஏதும் இல்லை இந்த ஜனநாயக நாட்டில்!

தவ்ஹீத் ஜமாஅத் எழுப்பும் எந்த கோரிக்கையும் அரசாங்கத்தை திரும்பிப்பார்க்க வைக்கிறது என்பதை நிதர்சனமாக கண்டு விட்ட நாம், இனிமேலும் தாமதிக்க தேவையில்லை.

கடந்த பதினெட்டு வருடங்களாக ஏதோ, டிசம்பர் மாதம் ஆகி விட்டால், கூச்சலிட்டோம், கலைந்தோம் என்று , நமது உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல் வெளிப்படுத்தினோம் என்பதாலோ என்னவோ, அரசாங்கம் நம் சமூகத்தை வஞ்சிக்க துணிந்து விட்டது.


இது போன்ற துரோகிகளுக்கு நாம் செய்து வந்த வழிமுறைகள் சரி வராது என்பதை அவர்களே நமக்கு பாடம் புகட்டி விட்ட நிலையில், நமது அடுத்த
கட்ட நடவடிக்கை என்ன? என்பதை சிந்திக்க வேண்டிய தருணத்திற்கு நாம் ஆட்பட்டுள்ளோம்!

உயர்நீதி மன்றம் நம்மை வஞ்சிதாலும், இன்னுமொரு வாய்ப்பு இருக்க தான் செய்கிறது. அது உச்ச நீதி மன்றம்!!

இன்னும் ஒரு முறை - இறுதியாக ஒரு முறை, உரக்க கூச்சலிடுவோம்.. இம்முறை நம் கூச்சல் மத்திய அரசை குலுங்க செய்ய வேண்டும்! உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் மத துவேஷத்திற்கு சமாதி கட்டும் முகமாக நமது கூச்சல் அமைய வேண்டும் !


அலஹபாத் உயர்நீதி மன்ற நீதிபதிகள் செய்த துரோகத்தை போன்று இனி எவனுமே நினைத்துகூட பார்க்காத அளவிற்கு இந்த முஸ்லிம் சமுதாயம் விடும் எச்சரிக்கை அமைய வேண்டும் !!


நமது கோரிக்கையில் வலிமை இல்லாதவரை, நம் தெருக்களில் , ஊர்களில் உள்ள எந்த மசூதிகளும் நம் சந்ததியினருக்கு மிஞ்சாது என்ற அச்சுறுத்தல் நம் மனதை ஆட்கொண்டு விட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாளைய நம் சந்ததிகள் இந்த நாட்டில் முஸ்லிம்களாக நிம்மதியுடன் வாழ, இன்றைய சில தியாகங்களை நாம் செய்ய வேண்டியது அவசியம்!

ஜனநாயக ரீதியில் அந்த தியாகத்திற்கு இறுதியாக ஒரு முறை தயாராவீர்களா?

இன்ஷா அல்லாஹ் ,
வருகிற ஜனவரி மாதம் 27 அன்று , சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு பெருநகரங்களில், தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளதை அறிவீர்கள்.
பல இயக்கங்களால் இந்த சமுதாயம் சிதறுண்ட போதிலும், சமுதாய நலன் என்று வரும்போதெல்லாம், தவ்ஹீத் ஜமாஅத் இறைவனுக்கு அஞ்சி செயல்படுவதை நாம் கண்டு வருகிறோம். இயக்க வெறிகளை மறந்து இந்த ஜமாத்திற்கு ஒத்துழைப்பு நல்குவது நமது கடமை!!

தங்களுக்கென எந்த எதிர்ப்பார்ப்புகளையும் கொண்டிராமல், சமுதாய நலனுக்காக போராடி வருபவர்களுக்கு இந்த சமுதாயம் நன்றி கடன்பட்டிருக்கிறது!


அந்த கடனை திருப்பி செலுத்தும் முகமாகவும் , நம் பிற்கால சந்ததிகளை தலை நிமிர செய்வதற்கும் இந்த மாபெரும் போராட்டம் நமக்கு பயனளிக்கட்டும்.
கடந்த பல மாநாடுகளிலும் பேரணிகளிலும் இந்த சமுதாயம் காட்டிய வலிமையை விடவும் அதிகமான வலிமையை இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் வெளிப்படுத்தினால் மட்டுமே அரசாங்கத்தின் சூழ்ச்சியிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

சூழ்சிக்காரனுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் நம்மை கண்காணிக்கிறான். நமது தியாகங்கள் மூலம், அந்த ஏகனிடம் துஆ செய்வோம்.

நம் சந்ததிகள் நிம்மதியுடன் வாழும், இன்ஷா அல்லாஹ்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக