புதன், 29 டிசம்பர், 2010

குர்ஆன் பிறையை காலம் காட்டி என்று சொல்வதை எந்த ஹதீஸ் மறுக்கிறது?


சிராஜ் அவர்களிடம் எஞ்சியுள்ள ஒரே ஆதாரம், குர் ஆனில், அல்லாஹ் பிறையை காலம் காட்டி என்று சொல்கிறான்.
இதை எந்த ஹதீஸ் மறுக்கிறது? என்று திரும்ப திரும்ப கேட்டுகொண்டிருக்கிறார்.


இதற்கு நாம் முன்னரே பதில் சொல்லி விட்டோம். பிறை உங்களுக்கு காலம் காட்டுவதை போல், தத்தமது பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து முடிவு செய்யும் எனக்கும் அது காலம் காட்ட தான் செய்கிறது என்று சொன்னேன்.
அதை இவர் மறுத்தாரா? மறுக்க முடிந்ததா?
உங்களுக்கு காலம் காட்டுகிறது என்றால் 100 வருட காலண்டரை அடியுங்கள் பார்க்கலாம் என்று சிறு பிள்ளை தனமாக ஒரு கேள்வியை கேட்டார்.

அதற்கும் நான் கேட்டேன், "சரி, 100 வருடக்காலண்டரை அடிக்க முடிந்தால் தான் காலம் காட்டும் என்று பொருளா?
சூரியன் கூட தான் காலம் காட்டி என்று குர் ஆன் சொல்கிறது. ரசூல் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் இதே கிழமையில் சூரியன் எந்த திசையில் இருக்கும் என்று அறிந்து வைத்திருந்தார்களா?
அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதால் சூரியன் அவர்களுக்கு காலம் காட்டவில்லை என்று சொல்வீர்களா? என்று கேட்டோம், இதற்கும் இவர் வாய் திறக்கவில்லை.

இவைகளுக்கு இவர் பதில் சொல்லாததிலிருந்தே தெரிகிறது, பிறை காலம் காட்டி என்று குர் ஆன் சொல்வதற்கும், இவர்கள் கணித்து செயல்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
கணித்து செயல்படாத எனக்கும் அது காலம் காட்ட தான் செய்கிறது.

இவர் அடுக்கிய அனைத்து வசனங்களையும் நீங்கள் படித்துப்பார்த்தால் , அவை கூறுவது என்னெவெனில்,
பிறை காலம் காட்டி.!
இந்த ஒற்றை வாசகத்தை தான் அனைத்து வசனங்களும் சொல்கிறது. அனைத்து வசனங்களையும் உங்களை விடவும் முழுமையாக நான் நம்புகிறேன்! காலம் காட்டுகிறது என்பதற்கும், 100 வருடக்காலண்டரை இன்றே அச்சிட்டு விநியோகம் செய்வதற்கும் என்ன தொடர்பு? அது தானே இங்குள்ள கேள்வி?

ஏதோ, இவர்கள் போன வாரம் தான் பிறையை கண்டுபிடித்ததைப்போலவும், அல்லது நேற்று தான் இந்த குர் ஆன் வசனங்கள் இறங்கியது போலவும் பேசுகிறார்!!


குர் ஆன், பிறையை காலம் காட்டி என்று சொல்கிறது. அந்த வசனங்களின் படி ரசூல் (ஸல்) அவர்கள் நடந்தார்களா? அல்லது அதை மீறினார்களா?
மாதங்களை அவர்கள் எவ்வாறு முடிவு செய்தார்கள் என்று ஆதாரங்கள் ஹதீஸ்களில் இருக்க தானே செய்கிறது?
அவைகள் அனைத்திலும் பிறையை பார்த்தார்கள், பார்த்தார்கள் பார்த்தார்கள்,
கேட்டோமே, பதில் வந்ததா?

நாம் வைத்த நான்கு ஹதீஸ்களும் இவர் கண்ணுக்கு தெரியவில்லை. அதிலிருந்து நாம் அடுக்கிய பல பல கேள்விகள் இவர் கண்ணுக்கு தென்படவில்லை.
பொருத்தமில்லாத குர் ஆன் வசனத்தை வைத்து இவர் கொள்கையை நிறுவ பார்க்கிறார், அது மக்களிடம் எடுபடாது.
என்று தானே வருகிறது , எங்காவது கணித்தார்கள் என்று வருகிறதா?
மீண்டும் ஹதீஸ் ஆதாரங்கள் சுருக்கமாக..

முதல் ஆதாரம்:

மாதத்திற்கு 29 நாட்கள். தான். பிறையை பார்க்காமல் நோன்பை விடாதீர்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். கணிக்காமல் விடாதீர்கள் என்று சொல்லவில்லை. ஏன்?
பிறை தெரியவில்லை என்றால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்.
கணிக்கலாம் என்றால், பிறை தெரிந்தால் / தெரியவில்லை என்றால், போன்ற வாசகமே அர்த்தமற்றதாகி விடும்!
தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், கணித்து முடிவு செய்யுங்கள் என்று அவர்கள் சொல்லியிருக்கலாமே !

இரண்டாம் ஆதாரம் :


குறைப் ஹதீஸில், இப்னு அப்பாஸ் அவர்கள் சனிகிழமை பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். கணித்ததாக சொல்லவில்லை.
பிறையை பார்க்காமல் ரமலானை முடிக்க மாட்டோம் என்கிறார்கள். கணிக்காமல் முடிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
பிறை தெரியாவிட்டால், 30 ஆக மாதத்தை முழுமைப்படுதுவோம், என்கிறார்கள்.
கணித்து முடிவு செய்யலாம் என்றால், 30 ஆக பூர்த்தி செய்வது என்ற பேச்சே தேவையில்லை.


மூன்றாம் ஆதாரம் :

வாகனக்கூட்டம் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று பிறை பார்த்ததாக
சொல்கிறார்கள். கணிக்கதான் வேண்டும் என்றால், நேற்று அவர்கள் ஏன் பிறை பார்த்தார்கள்? அவர்கள் பிறை பார்த்ததை வைத்து ஏன் நோன்பை விட ரசூல் (ஸல்) சொன்னார்கள்? கணித்து அல்லவா நீங்கள் முடிவு செய்ய வேண்டும்> ஏன் பிறையை பார்க்கிறீர்கள்? என்று அவர்கள் ஏன் கேட்கவில்லை?
நான்காம் ஆதாரம்:

இப்னு அப்பாஸ் அவர்களின் மற்றொரு அறிவிப்பில், சில சஹாபாக்கள் பிறையை பார்த்து இரண்டா மூன்றா என்று ஏன் குழம்ப வேண்டும்? கணித்தால், இரண்டாம் பிறையா மூன்றாம் பிறையா என்று ஏன் குழப்பம் ஏற்படுகிறது?
நீங்கள் பிறை பார்க்கும் வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டி தருகிறான் என்று ரசூல் (ஸல்) அவர்கள் எதற்கு சொல்ல வேண்டும்? கணிக்கும் வரை மாதத்தை நீட்டி தருவதில் அர்த்தம் இருக்குமா பார்க்கும் வரை நீட்டி தருவதில் அர்த்தம் இருக்குமா?


ஐந்தாம் ஆதாரம் :


இன்னொரு அறிவிப்பில், பிறையை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் அல்லாஹ் பிறையை சிறிது நேரம் வானில் தென்பட செய்கிறான் என்று ரசூல் (ஸல்) சொல்லியுள்ளார்களே, கணித்து விடலாம் என்றால், ரசூல் (ஸல்) இவ்வாறு ஏன் சொல்ல வேண்டும்?



மேலே உள்ள ஹதீஸ் ஆதாரங்களில் நாம் வைத்திருக்கும் வாதங்களை முதலில் இவர் முறியடிக்கட்டும்.

பிறை காலம் காட்டி, அதனால், கணிக்கலாம் என்று இவர் சொல்லியிருப்பதில் உள்ள சிறு பிள்ளைதனத்தை விளக்கி நாம் கேட்ட கேள்விக்கும் இவர் பதில் அளிக்கட்டும். அதை செய்தாலே தவிர, இவரது கொள்கையை இவரால் என்றைக்கும் நிலைநாட்ட இயலாது!!

அதை தவிர்த்து, அவர் எந்த கிழமையில் பிறை பார்த்தார், எந்த கிழமை நோன்பு வைத்தார், அந்த ஹதீஸில் அந்த வார்த்தை இருக்கிறதா? இந்த ஹதீஸில் இந்த வார்த்தை இருக்கிறதா? என்ற கேள்விகளெல்லாம், நம்மை மடையனாக்கி, தன்னை தற்காத்துக்கொள்ள இவர் எடுக்கும் முயற்சிகள் தான் என்பதை விபரமுள்ள அனைவரும் புரிந்துக்கொள்வார்கள்.


வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக