குறைப் ஹதீஸை மனமுரண்டாக மறுத்து வரும் ஏர்வாடி சிராஜ் அவர்களிடம் நாம் தொகுத்து அனுப்பிய கண்டன மெயில்கள் மற்றும் கேள்விகள்..
நடந்த ஒட்டு மொத்த உரையாடலில், கீழ்கண்ட வாசகத்தை மட்டும் தான் நபியவர்களின் கட்டளையாக இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறுகின்றார்கள் என்பது தான் என்னுடைய நிலைபாடு. மற்ற அனைத்தும் அவர்களுக்குள்ளே நடைபெற்ற உரையாடல்கள் தானே தவிர அதில் நபியவர்களின் அங்கீகாரம் அதற்கு இல்லை என்று கூறுகின்றேன்
- ஏர்வாடி சிராஜ்
நாஷித் பதில் :
அஸ்ஸலாமு அலைக்கும்..
சகோதரர்கள் அனைவரும் கவனத்துடன் எனது இந்த இழையை படியுங்கள்..
வேடிக்கையான வாதத்தை வைத்து, தனது கொள்கையை நிலைநாட்ட எந்த நிலைக்கும் இறங்குவேன் என்பதை பகிரங்கமாக கூறும் சகோ. சிராஜ் அவர்களது வாதத்தை கவனியுங்கள்.
ஆரம்பத்தில், பல பல காரணங்களை கூறி அந்த ஹதீஸை மறுத்த அவர், அவை எதுவும் பலன் தராது என்ற நிலையில், இப்போது அந்த ஒரு ஹதீசையே இரண்டாக பிரித்து, ஒரு பகுதி ஹதீஸ் இல்லை, வெறும் உரையாடல் தான் என்றும் மற்றொரு பகுதி மட்டும் ஹதீஸ் என்றும் கூறுகிறார்.
அதாவது..
இப்னு அப்பாஸ் :
"நீங்கள் எப்போது பிறையை பார்த்தீர்கள் ?. இது ஹதீஸ் இல்லை, வெறும் உரையாடலாம்!
குறைப்:
நாங்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தோம். இதுவும் ஹதீஸ் இல்லை, வெறும் உரையாடலாம்!!
இப்னு அப்பாஸ் :
நீயே பிறையை பார்த்தாயா? இதுவும் ஹதீஸ் இல்லை, வெறும் உரையாடல்!! !!
குறைப் : .
ஆம், மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியாவும் நோன்பு பிடித்தார்கள்.
இதுவும் ஹதீஸ் இல்லை, வெறும் உரையாடல்!! !!ஆம், மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியாவும் நோன்பு பிடித்தார்கள்.
இப்னு அப்பாஸ்:
நாங்கள் சனிக்கிழமை தான் நோன்பு பிடித்தோம்,
ஆகவே, மறு பிறை பார்க்கும் வரை, அல்லது முப்பதாக பூர்த்தி செய்யும் வரை நோன்பு வைதுக்கொண்டிருப்போம்.
இது ஹதீஸ்!!
குறைப் :
ஏன்?, முஆவியா அவர்கள் பார்த்ததும், நோன்பு வைத்ததும் உங்களுக்கு போதாதா?
இப்னு அப்பாஸ்:
இதுவும் ஹதீஸ் இல்லை, வெறும் உரையாடல்!! !!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒரே உரையாடலில், இடையிடையே வரும் இரு வாசகங்களும் (அவர்களது கொள்கைக்கு எந்த வாசகம் தடையாக இல்லை என்று அவர்கள் எண்ணுகிறார்களோ அந்த இரு வாசகம்) மட்டும் தான் ஹதீஸ் என்றும், அதற்கிடையே வரக்கூடியவை வெறும் உரையாடல், ஹதீஸ் இல்லை என்று எவ்வளவு துணிச்சலாக பேசுகிறார் பாருங்கள்.
குறைப் அவர்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தார்கள் என்பது ஹதீஸ் இல்லையாம். ஏன்? அவர்கள் பார்த்தார்கள் என்பதில் ரசூலின் அங்கீகாரம் இல்லையல்லவா? அதனால்.
நாங்கள் சனிக்கிழமை தான் பார்த்தோம், என்று இப்னு அப்பாஸ் கூறுவதும் ஹதீஸ் இல்லையாம்.அவர்கள் பார்த்தார்கள் என்பதில் ரசூலின் அங்கீகாரம் இல்லையல்லவா? அதனால்.
சரி.. நாங்கள் பிறை பாப்போம், அல்லது முப்பதாக முழுமைப்படுதும்வரை நோன்பு வைப்போம், என்று இப்னு அப்பாஸ் அவர்கள் கூறுவது மட்டும் எப்படி ஹதீஸ் ஆனது?
அதுவும் இடையில் உரையாடலோடு சேர்ந்து வரும் வாசகம் தானே?
இவ்வாறு இப்னு அப்பாஸ் சொல்லும் போது , குறைப் அவர்கள், ஏன்? நாங்கள் பார்த்தது உங்களுக்கு போதாதா? என்று கேட்க்கிறார்களே இந்த கேள்வி ஹதீஸ் இல்லையா?
இந்த கேள்வி ஹதீஸ் இல்லை என்றால், இந்த கேள்விக்கு பதிலாக தான், இப்னு அப்பாஸ் அவர்கள் போதாது, ரசூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
ஹதீஸ் இல்லாத வெறும் கேள்வி ஒன்றுக்கு ஒருவர் சொல்லும் பதில் மட்டும் ஹதீஸ் ஆகுமா?
கேள்வி ஹதீஸ் இல்லை, வெறும் உரையாடல் தானாம். அதற்கு சொல்லும் பதில் மட்டும் எப்படி ஹதீஸ் ஆகும்?
படிப்பவர் அனைவரும் முட்டாள்கள் என்று நினைப்பதால் மட்டுமே அவ்வாறு ஆகும்!
அடிப்படை விபரம், சொல்பவருக்கு இல்லை என்றாலும் படிப்பவர் எவருக்கும் இல்லை என்ற எண்ணமா இவருக்கு?
இறைவனை பயந்து கொள்ளுமாறு சகோ. சிராஜிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து, ஒரு பகுதியை வெறும் உரையாடல் தான், அதில் ரசூலின் அங்கீகாரம் இல்லை என்று மறுக்கிறாரே, மைமூனா அவர்கள் மாதவிடாய் சமயத்தில் ரசூல் (ஸல்) அவர்கள் கீழாடையை அணிய சொல்வார்கள் என்று வரும் அறிவிப்பில் ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லையே, இதற்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்டோமே, பதில் வந்ததா?
ஜிப்ரீல் (அலை) வந்து சென்ற சமயத்தில் ரசூல் (ஸல்) அவர்கள் நடுங்கினார்கள் என்று ஆயிஷாம்மா அறிவிக்கிறார்களே, இதிலும் ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லையே!
இவை ஹதீஸ் அல்ல, மைமூனா அவர்கள் மற்றும் ஆயிஷா அவர்களது சொந்த வாசகம் தான் என்று நாம் சொல்லலாமா?
குறைப் ஹதீஸை வைத்து "தகிடதோம்" ஆடும் சகோ. சிராஜ் இவ்வாறு சொல்வாரா?
இதற்க்கெல்லாம் இவர் பதில் சொன்னாரா? போகிற போக்கில், அவருக்கு வசதியாக ஒரு ஹதீஸை இவ்வாறு மறுத்து, மற்ற மற்ற ஹதீஸ்களில் அதே காரணம் இருந்த போதிலும் அந்த ஹதீஸ்களைஎல்லாம் அவர் மறுக்காமல் இருந்தால், ஒரு குறிப்பிட்ட ஹதீசுக்கு மட்டும் இவர் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி என்ன? என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இவர் தனது கொள்கையை நிலைநாட்ட எத்தகைய கீழ்நிலைக்கும் செல்வார். ஹதீஸ்களை மனமுரண்டாக மறுப்பார். தெரிந்துகொண்டீர்களா?
இவைகளுக்கு எல்லாம் இவர் பதில் சொல்லாதவரை, இவர் வாயாலேயே அனைத்து ஹதீஸ்களையும் நாம் மறுக்க வைப்போம், இன்ஷா அல்லாஹ்.
மற்றொரு தொடரில், வாகனக்கூட்டம் ஹதீஸை இவர் மனமுரண்டாக மறுக்கப்போவதை அனைவரும் விரைவில் அறிவீர்கள்.
அடுத்து.. ஒரு பேச்சுக்கு, ஒரு வாதத்திற்கு, சிராஜ் சொல்வதை சரி என வைத்துக்கொண்டாலும்.. இப்னு அப்பாஸ் அவர்கள் கூறுவது என்ன?
நாம் அதை பார்த்துக்கொண்டிருக்கும் வரை, அல்லது أو نراه
2. நாம் முப்பதை முழுமைப்படுத்தும் வரை حتى نكمل ثلاثين
3. நாம் நோன்பு வைத்துக்கொண்டே இருப்போம்
இதில் அவர்கள் கணிப்பதாக எங்கு சொல்கிறார்கள்? கணக்கிட்டு பின்பற்றுவதற்கு இந்த வாசகத்தில் ஆதாரம் உள்ளதா? அல்லது பிறையை பார்த்து பின்பற்றுவதற்கு இந்த வாசகத்தில் ஆதாரம் உள்ளதா?
சகோ. சிராஜ் அவர்களே, எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும்,உங்களது எந்த வாதமாவது ஏற்ப்புடையதாக இருக்கிறதா?
ஒரு கொள்கையை நிலைநிறுத்த இந்த அளவிற்கா தரை இறங்க வேண்டும்? இறைவனை பற்றிய பயம் கொண்டவர் இவ்வாறு ஹதீஸ்களை மனமுரண்டாக மறுப்பதை நம்மால் ஜீரணிக்க இயலவில்லை.
நாம் மேலே எழுப்பியிருக்கும் பல பல கேள்விகளுக்கு நியாயமான பதில் சொல்லாதவரை, உங்கள் எந்த வாதமும் எடுபடாது.
வாகனக்கூட்டம் சம்மந்தமாக நான் மற்றொரு இழையில் எழுப்பியிருக்கும் கேள்விக்காவது நியாயமாக பதில் சொல்ல முயற்சியுங்கள்..
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஉரையாடல்களை அனைத்தையும் பதிந்தால் தன்னுடைய இயலாமை வெளிப்பட்டுவிடும் என்று பயந்து கடைசி செய்திகளை மட்டும் எடுத்து போட்டு மக்களை தன் பக்கமே இருங்கள் என கெஞ்சுவதால் மக்கள் கண்மூடி உங்களை பின்பற்றுவார்கள் என நாஷித் நினைப்பது எந்த அளவிற்கு சரி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தைரியம் இருந்தால் நமக்குள் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் பதிவிடுங்கள் பார்ப்போம்.
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
சகோதரர் சிராஜ் அவர்களின் வாதத்தையும் சகோதரர் நாஷித் அவர்களின் வாதத்தையும் ஆரம்பம் முதல் பார்த்து வருபவன்.சிராஜ் அவர்கள் நேரடியாக பிறை சம்மந்தமான ஹதிஸ்களை வளைத்து தன்னுடைய கருத்துக்கு ஏற்ப வளைக்கின்றாரே தவிர நேரடியாக பொருள் கொள்ளக்கூடிய இப்னு அப்பாஸ் அவர்களின் ஹதிஸையும் தன்னுடை கருத்துக்கு வளைக்கின்றாரே தவிர நேரடியாக அர்த்தம் செய்ய அவரால் மட்டும் அல்ல உலகப் பிறை மற்றும் கணிப்பையும் மன முரண்டாக பின்பற்றுவோராலும் செய்ய முடியாது.ஏன் என்றால் நேரடி அர்த்தம் செய்வார்களானால் தமது கொள்கைகளெல்லாம் தவிடு பொடியாகிவிடும் என்பதினாலே." நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்கள்" எவ்வாறு
பதிலளிநீக்கு"மறு பிறை பார்க்கும் வரை, அல்லது முப்பதாக பூர்த்தி செய்யும் வரை "இதில் தெளிவில்லையாம் சகோ சிராஜ் அவர்களுக்கு.சத்தியத்தை விளங்க அல்லாஹ் அனைவருக்கும் துணை புரிவானாக.