தர்ஹா கட்டுவது கூடாது!
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!
கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
கப்ரிருந்து வெளியேற்றப்பட்ட மண்ணை விட அதிகமான மண்ணை (வைத்து கப்ரை மூடுவது) வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் கப்ரின் மீது மண்ணை அதிகரிப்பது அதனைக் கட்டுவதைப் போன்றதாகும்
(ஹனபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 2 பக்கம் : 209)
கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்!
(ஷாஃபி மத்ஹப் நூல் : முக்னில் முஹ்தாஜ் பாகம் : 1 பக்கம் : 364 )
நபிமார்கள் மற்றும் அவ்யாக்களின் பொருட்டால் வஸீலா தேடுவது கூடாது!
ஒருவன் ”இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பொருட்டால்” என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் படைத்தவனிடத்தில் படைக்கப்பட்ட பொருளுக்கு எந்த அதிகாரமும் இல்லை
(ஹனஃபி மத்ஹப் நூல் : ஹிதாயா பாகம் : 4 பக்கம் : 459)
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்!
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)
இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்!
மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு : பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836.)
(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர) அவர்கள் ‘உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (35: 22) மற்றும் ” உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது ” (27 : 80) ஆகிய வசனங்களை காட்டி மறுத்துள்ளார்கள்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836)
இறந்தவர் பெயரில் ஃபாத்திஹா ஓதி பார்சல் செய்ய முடியாது!
”ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” (53 : 39) இந்த திருவசனத்திருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள் : ” குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது. ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத்தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது (மறைமுகமான) சுட்டிக்காட்டுதன் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்த செய்தியும்) பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள்.
(நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் 53 : 39 வசனத்தின் விரிவுரை)
ஜும்மாவிற்கு ஒரு பாங்குதான்
ஸாயிப் பின் யஸீத் (ர) அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூபக்ர் (ர), மற்றும் உமர் (ர) அவர்களுடைய காலத்திலும் இமாம் மிம்பரில் அமரும்போது சொல்லப்படுகின்ற முதல் பாங்குதான் ஜýம்ஆவிற்குரிய பாங்காக இருந்தது. உஸ்மானுடைய ஆட்சிக்காலம் ஏற்பட்டபோது, மக்கள் அதிகமானார்கள். எனவே உஸ்மான் இரண்டாவது அறிவிப்பை செய்யுமாறு கட்டளையிட்டார்கள். எனவே அது அறிவிக்கப்பட்டது. இவ்வாறே அக்காரியம் நிலைபெற்று விட்டது.
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ” அதாவு என்ற அறிஞர் உஸ்மான் (ர) அவர்கள்தான் இதனை புதிதாக உருவாக்கினார் என்பதை மறுத்து, முஆவியா (ர) அவர்கள்தான் இதனை புதிதாக உருவாக்கினார் என்று கூறியுள்ளார். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
மேலும் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள் : எது எப்படி இருந்தாலும் நபி (ஸல்) அவர்களூடைய காலத்தில் இருந்த (ஒரு பாங்கு கூறும்) முறைதான் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.
(ஷாஃபி இமாம் அவர்கள் தொகுத்த நூல், அல்உம்மு பாகம் : 1 பக்கம் 195)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக