வெள்ளி, 31 டிசம்பர், 2010

சண்டை மூட்ட வந்த சமாதானப் பிரபு


இங்கே கிறிஸ்தவர்களோ, இயேசுவை சமாதானத் தூதர், சமாதானப் பிரபு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இயேசுவோ, நான் சண்டை மூட்டத்தான் வந்தேன்; என்னை சமாதானத்தை உண்டு பண்ண வந்தவன் என்று சொல்லாதீர்கள்” என்று பிரகடனம் செய்கின்றார். இதோ ஏசுவின் பிரகடனம் பைபிளிலிருந்து,

நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.
தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக் கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோ தமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
(லூக்கா 12 : 49, 51, 52, 53)

பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
(மத்தேயு 10 : 34, 35)

இயேசுவின் மற்றொரு முகம்:

ஏசுவை கவலை தோய்ந்த முகத்தோடு பரிதாபப்படக் கூடிய தோற்றத்தில், அப்பாவி யைப்போல முகத்தையுடையவராகவும், சாந்த சொரூபியைப் போலவும்தான் நம்மில் ஒவ் வொருவரும் வரைபடத்தில் பார்த்து இருக்கின்றோம்.

ஆனால், ஏசுநாதரை மிகப்பெரிய ஒரு வாளை தனது கையில் ஏந்திக் கொண்டு, போர் புரியச் செல்லும் போர் படைத் தளபதியாக போர் வீரராக, மனதில் கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்?

இயேசுவை அப்படி எப்படி நாங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும்? என்று கிறிஸ்தவர்கள் கேட்கலாம். ஆனால், பைபிள் அவரைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

மேலும் அவர், “நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன்படுகொலை செய்யுங்கள்” என்று சொன்னார்.
லூக்கா 19:27

என்னை அரசனாக ஏற்றுக் கொள்ளாதவர்களை என் முன் கொண்டுவந்து படுகொலை செய்யுங்கள் என்று சொன்னவர்தான் சாந்த சொரூபியா? சமாதானப் பிரபுவா?

மேலும், யூதர்களுக்கு எதிராக போர் புரிவதற்காக ஆடைகளை விற்றாவது வாள் வாங்குங்கள் என்று தனது சாந்தசொரூப (?) சீடர்களுக்கு கட்டளைட்ட சம்பவத்தையும் பைபிள் விவரிக்கின்றது.

இதோ, பைபிளின் வாசகங்கள்:

இயேசு சீடர்களிடம், “நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்டார். அவர்கள், “ஒரு குறையும் இருந்த தில்லை” என்றார்கள். அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்”
லூக்கா 22:35, 36

இவ்வாறு யூதர்களுக்கு எதிராக வாளேந்தி போர்புரிவதற்கு போர்பிரகடனம் செய்த ஏசுநாதரை, சண்டை மூட்ட வந்தவன் தான் நான், நான் தகப்பனுக்கும் பிள்ளை களுக்கும் மத்தியிலும், இதுபோன்ற ஒன்றாக இருக்கக்கூடிய மக்கள் மத்தியில் சண்டை மூட்ட வந்தவன்தான் என்று சொன்ன ஏசு நாதரை சாந்த சொரூபியாக காட்ட முயல்வது மாபெரும் வரலாற்று மோசடி என்பதையும் கூடுதலாக இங்கு பதிவு செய்கின்றோம்.

- tntj.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக