ஒரு வாகனத்தை நாள் வாடகைக்கு விடுவது வட்டி என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?
- அப்துல் ராஸிக்
P.Zainul Abideen:
வட்டி என்பது என்ன? இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.
நம்முடைய பணம் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு காலம் அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் பெறுவது தான் வட்டி என்பது.
நம்முடைய பொருள் ஒருவரிடம் இருப்பதற்காக எவ்வளவு கால, அவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் அடைவது வாடகை எனப்படும்.
இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும். நமது பணத்தை ஒருவன் பயன்படுத்தினால் அதனால் பணத்தின் மதிப்பு குறையப் போகிறது. நோட்டு பழையதாக் ஆனாலும் பனத்தின் மதிப்பு குறையாது. பழைய நோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளுக்கும் மதிப்பு ஒன்று தான்.
ஆனால் ஒருவனது வீட்டை வாகனத்தைப் பயன்படுத்தினால் அதனால் தேய்மானம் ஏற்படுகிறது. இந்த வகையில வாடகையும் வட்டியும் வேறுபடுகிறது.
ஒருவனது பணத்தை நாம் ஏதோ ஒரு துறையில் பயன்படுத்தினால் அதில் லாபமும் நட்டமும் ஏற்படலாம். நிச்சயமான ஆதாயம் இல்லை. ஆனால் ஒரு பொருளை வாடகைக்கு எடுத்தால் அதை நாம் அனுபவித்து விடுவது நிச்சயமானது.
எனவே வாடகையை வட்டி என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற தொடர் உறையில் இது பற்றி விரிவான விளக்கம் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக