புதன், 22 டிசம்பர், 2010

ஏர்வாடி சிராஜின் தவறான கொள்கைக்கு மறுப்பு - 2

அஸ்ஸலாமு அலைக்கும்..

ஒரு கேள்வியை ஒரு சஹாபி கேட்கிறார். அதற்கு பதிலாக, "இவ்வாறு தான் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், என்று இன்னொருவர் பதிலளிக்கிறார்.
இதை வைத்து ஒரு சாதாரண அறிவு உள்ளவன் என்ன புரிந்து கொள்வான்? இந்த கேள்விக்கு, இந்த பதிலை ரசூல் (ஸல்) அவர்களது மார்க்க சட்டமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், என்று புரிந்து கொள்வான்!

ஆனால், சிராஜ் கூறும் வேடிக்கையை பாருங்கள்.. கேள்வி, ஹதீஸ் இல்லையாம். அதை நாம் ஏற்க தேவையில்லையாம்.
பதில் மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டிய ஹதீசாம்.

எந்த கேள்விக்கு அந்த பதிலை ரசூல் சொன்னதாக சொல்கிறார்கள்? நாங்கள் வெள்ளிகிழமை பிறை பார்த்தோம், நீங்கள் சனி அன்று தான் பார்த்தேன் என்கிறீர்கள். நீங்கள் பிறை பார்த்து அல்லது முப்பதாக பூர்த்தி செய்து விட்டு தான் பெருநாள் கொண்டாடுவோம் என்கிறீர்களே, ஏன்? நாங்கள் வெள்ளிக்கிழமை பார்த்ததன் அடிப்படையில் நீங்கள் பெருநாள் கொண்டாடினால் என்ன?
இந்த கேள்விக்கு தானே அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எனக்கு இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள், என்று சொல்கிறார்கள்?
கேள்வியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பதிலும் அர்த்தமற்று தானே போகும்?

இதை கூட விளங்காமல், அல்லது விளங்கியும் விளங்காதது போல் இருப்பவர், கேள்வி வெறும் அறிவிப்பு தான், உரையாடல் தான். பதில் மட்டும் ஹதீஸ் என்று மழுப்புவதை எவர் அறிவாவது ஏற்கிறதா?
இவ்வாறு தான் அனைத்து ஹதீஸுக்கும் சட்டம் சொல்வாரா இவர்? இவ்வாறு தான் ஹதீஸ் கலை உள்ளதா?

சரி, அந்த கேள்வியை வெறும் உரையாடல் தான், ஹதீஸ் இல்லை என்று இவர் மழுப்புவதற்கு என்ன காரணம் சொல்கிறார்? அவற்றில் ரசூல் (ஸல்) அவர்களது அங்கீகாரம் இல்லையாம்.

கீழ் காணும் ஹதீஸ்களை பாருங்கள்.. (சாம்பிளுக்கு ஐந்து ஹதீஸ்கள்.. தேவைப்பட்டால் இன்னும் அடுக்குவோம்..)


முதல் ஹதீஸ்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அலற்ஜ் எனும் இடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம் . அப்போது ஒரு கவிஞர் பாடிக்கொண்டு எதிரில் வந்தார்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஷைத்தானை பிடியுங்கள். ஒரு மனிதனுடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விட சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று, என்று கூறினார்கள்.
முஸ்லிம் : 4548


இதில், ரசூல் (ஸல்) அவர்கள் அல் அர்ஜ எனும் இடத்திற்கு செல்லும் போது ஒரு கவிஞனை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. ரசூல் (ஸல்) அல் அல் அர்ஜ எனும் இடத்திற்கு சென்றார்கள் என்பது ஹதீஸா வெறும் அறிவிப்பா? அதை நாம் நம்ப வேண்டுமா நம்ப தேவையில்லையா?
அவர்கள் ஒரு கவிஞனை பார்த்தார்கள் என்பது வெறும் அறிவிப்பா அல்லது ஹதீஸா?



இரண்டாம் ஹதீஸ் :

வாகனக்கூட்டம் ஹதீஸில், நாங்கள் ரசூல் (ஸல்) அவர்களுடன் நோன்பு வைத்தவாறு மாலை பொழுதை அடைந்தோம்.. என்று வரக்கூடிய அறிவிப்பில், மாலை பொழுதை அடைந்தனர் என்ற அறிவிப்பில் ரசூலின் அங்கீகாரம் இருக்கிறதா? வாகனக்கூட்டம் வந்தார்கள் என்றதில் ரசூலின் அங்கீகாரம் இருக்கிறதா?
ரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தவாறு மாலை பொழுதை அடைந்தார்கள் என்பது ஹதீஸா அல்லது வெறும் அறிவிப்பா?
ஒரு வாகனக்கூட்டம் ரசூல் (ஸல்) அவர்களை தேடி வந்தார்கள் என்பது நாம் நம்ப வேண்டிய ஹதீஸா அல்லது வெறும் அறிவிப்பா?



மூன்றாவது,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க(ளுடைய பள்ளிவாசலு)க்கு, பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) தொழுகை அழைப்பாளராக (முஅத்தினாக) இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)


நபி (ஸல்) அவர்களது பள்ளிக்கு ஒரு பார்வையற்றவர் அழைப்பாளராக இருந்தார் என்பது வெறும் அறிவிப்பா அல்லது ஹதீஸா?


நான்காவது,

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் செய்யத் தொடங்கும் முதற் செயல் எது?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "பல் துலக்குவது" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக ஷுரைஹ் (ரஹ்).



இதில் ஷுரைஹ் (ரஹ் அவர்கள் ஆயிஷா அம்மா அவர்களிடத்தில் கேட்பது ஹதீஸா அல்லது வெறும் உரையாடலா?
அதற்கு பதில் சொல்வது வெறும் உரையாடலா அல்லது ஹதீஸா?



ஐந்தாவது,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறி, அவர்கள் ஸஜ்தாச் செய்யாதவரை எங்களில் எவரும் எங்கள் முதுகை (ஸஜ்தாவிற்காக) வளைக்க மாட்டோம்; (அவர்கள் ஸஜ்தாச் செய்த) பிறகுதான் நாங்கள் ஸஜ்தாச் செய்வோம்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)



இந்த அறிவிப்பில், நாங்கள் யாரும் முதுகை வளைக்க மாட்டோம் என்று சஹாபாக்களை குறித்து வருவது, ஹதீஸா அல்லது வெறும் அறிவிப்பா?
வெறும் அறிவிப்பை தான் உங்கள் இணையதள ஹதீஸ் பட்டியலில் வேறு போட்டிருக்கிறீர்களா?
இமாம் சஜ்தா செல்லாதவரை நாம் சஜ்தா செய்யகூடாது என்ற சட்டத்தை பெறுவதற்காக, ஹதீஸை சொல்லாமல் வெறும் அறிவிப்பை ஏன் உங்கள் இணையதளத்தில் சொல்லியிருக்கிறீர்கள்?
இது ஹதீஸ் என்றால், எப்படி ஹதீஸ் ஆனது? சஹாபி அறிவிப்பதை ரசூல் (ஸல்) அங்கீகரிதார்களா?




உங்களுக்கு சாதகமாக ஒரு ஹதீஸை வளைக்க முயற்சிக்கும் நீங்கள், அதே போன்று வரக்கூடிய மற்ற ஹதீஸ்களையும் வளைக்க வேண்டுமல்லவா? அதை செய்யாமல் முரண்படுவது ஏன்?
உங்களுக்கு நீங்களே இவ்வாறு முரண்படுவது எதை காட்டுகிறது?

அப்படியே ஒரு வாதத்திற்கு, நீங்கள் கூறுவதை சரி என்று வைத்துக்கொண்டாலும், இப்னு அப்பாஸ் அவர்கள் சனிக்கிழமை பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். அடுத்த பிறை பார்க்கும் வரை அல்லது முப்பதாக முழுமைப்படுத்தும் வரை நோன்பை தொடருவோம் என்கிறார்கள்.
பிறையை அவர்கள் கணிக்கவில்லை, கணக்கிடவில்லை, பார்த்து தான் முடிவு செய்தார்கள் என்பதற்கு இது உறுதியான ஆதாரமே தவிர வேறில்லை, என்பதையும் நான் முன்னரே விளக்கினேன்.

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    உரையாடல்களை அனைத்தையும் பதிந்தால் தன்னுடைய இயலாமை வெளிப்பட்டுவிடும் என்று பயந்து கடைசி செய்திகளை மட்டும் எடுத்து போட்டு மக்களை தன் பக்கமே இருங்கள் என கெஞ்சுவதால் மக்கள் கண்மூடி உங்களை பின்பற்றுவார்கள் என நாஷித் நினைப்பது எந்த அளவிற்கு சரி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தைரியம் இருந்தால் நமக்குள் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் பதிவிடுங்கள் பார்ப்போம்.
    இப்படிக்கு
    சிராஜ் ஏர்வாடி

    பதிலளிநீக்கு