திங்கள், 20 டிசம்பர், 2010

TMB குழுமம் காழ்புணர்ச்சியின் காரணமாக என்னை நீக்கிய போது, நான் எழுதிய கண்டன மெயில்கள்.





fromNashid Ahmed



TMB குழும நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
.

ஒருவரை ஒரு இயக்கத்தை விட்டோ, ஒரு குழுமத்தை விட்டோ நீக்குவதாக இருந்தால், என்ன காரணத்திற்க்காக நீக்கப்படுகிறார் என்பதை நீக்கப்படுபவருக்கும் இயக்கத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

அதை செய்யாமல், வெறுமனே, தன்னிச்சையாக முடிவெடுப்பது தவறு என்று குழும உறுப்பினர்களில் எத்தனை பேர் வாதிடுகிறீர்கள்?

நாஷிதுக்கு அவர் சார்ந்திருக்கும் இயக்கம் அதை தான் கற்றுக்கொடுத்திருக்கிறது, என்று ஒருவர் கூறினால், அதற்கு வரிந்து கட்டிக்கொண்டு விளக்குமும், மறுப்பும் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களே, எந்த காரணத்தையும் கூறாமல், அவர்களாகவே நீக்க வேண்டும் என்றால் நீக்குவார்கள், சேர்க்க வேண்டுமென்றால் சேர்ப்பார்கள் என்ற ரீதியில் செயல்படுவது பற்றி இங்கு எத்தனை பேருக்கு அக்கறை இருக்கிறது?

குழுமத்தில் இருந்து விலக்கம் பெற்று விடக்கூடாது, என்பதற்காக அவர்கள் செய்கின்ற தவறான அணுகுமுறைகளை விமர்சிப்பதை விட்டும் தூரமாக சென்று, வளைந்து நெளிந்து கொண்டிருக்கும் உறுப்பினர்கள் , நான் ஏகத்துவ வாதி, கொள்கை வாதி என்று மார்தட்டுவதன் பயன் என்ன?

இவர்கள் எந்த மெயிலை குறிப்பிடடு என் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள் என்பதை நான் ஊர்ஜிதப்படுத்தியதால் அது பற்றிய விளக்கத்தை நான் இப்போது தருகிறேன்.

குழுமத்தின் வழியாக எழுப்பப்படும் விமர்சனங்கள் போக, தனிப்பட்ட முறையிலும் எனக்கு, தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும், பிஜே பற்றியும், தவ்ஹீத் கொள்கைகள் பற்றியும் அதிக அளவில் விமர்சன மெயில்கள் வருவதுண்டு.

அதிலும், கடந்த சில வாரங்களாக , அவதூறான விமர்சனங்கள் அதிக அளவில் எனக்கு அனுப்படுகிறது.
தனிப்பட்ட முறையில் வரக்கூடிய அத்தகைய மெயில்களுக்கு , சிலவற்றிற்கு பதில் எழுதியும், மற்றவைகளை அலட்சியம் செய்தும் வருகிறேன்.

இதே போன்றதொரு மெயில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழுமத்தின் வழியாகவும் வந்தது.

தவ்ஹீத் ஜமாஅத் எப்போதுமே விளம்பரதிற்காக செயல்படும் கூட்டம், விளம்பரம் அடைவதற்காக எத்தகைய அவதூறையும் சொல்வார்கள் என்ற அர்த்தத்தில் ஒரு மெயில் பதியப்பட்டது.
இதை அனுப்பியது ஒரு நபர் என்றாலும், அந்த மெயிலை முடிக்கும் போது, "இவ்வாறு பொது ஜனம் சொல்கிறது", என்று எளக்காரமாக முடித்திருந்தார்.

சொல்வது அவர் தான் என்றாலும், பொது ஜனத்தின் மீது பழியை போட்டு ,அவதூறுகளையும், பொய்களையும் பேசுவது என்பது பத்திரிக்கை துறையில் உள்ள ஒரு "escapism " முறை!

அதே போன்று இவர் உபயோகித அந்த முறைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நான் அந்த மெயிலுக்கு பதில் எழுதியிருந்தேன்.

இவர் கூறும் பொது ஜனம் என்பது, தன்னுடைய கொள்கைக்கு என்ன ஆதாரம் என்பதையும் அறிந்திருக்க மாட்டார்கள், பிறரை விமர்சனம் செய்வதற்கும் ஆதாரம் வைத்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய கொள்கை எந்த அடிப்படையில் சரி என்ற அடிப்படை விஷயத்தை கூட அறிந்து வைத்திருக்காமல், பிஜே என்ற பெயரை கேட்டவுடனேயே தலையை பிய்த்துக்கொண்டு ஆடும் இந்த பொது ஜனம், பேடிகளை போன்றவர்கள் என்றும் ஆடு மாடுகள் போன்றோரும் ஆவர் என்று , அவர் கூறிய , இத்தகைய பொது ஜனத்தை பற்றி விமர்சனம் செய்து, அந்த சகோதரருக்கு பதில் எழுதினேன்.

அருவருக்கத்தக்க வார்த்தை என்று குழுமம் கண்டிப்பது இதுவாக தான் இருக்கும் என்று நான் நினைப்பதால், காரணமே சொல்லாமல், அவர்களாக என் மீது குற்றம் ச்மதியிருக்கும் நிலையில், குழும உறுப்பினர்கள், அந்த காரணம் என்னவென்று புரியாமல் ஏதேதோ கற்பனை செய்ய , இதுவே வழி செய்திருக்கிறது என்பதால், நானே இதை விளக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

நான் கூறிய வார்த்தைகள் கூட, குர் ஆனில் அல்லாஹ் கூறும் வார்த்தைகளை மனதில் வைத்து தான், என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

குர் ஆனில், 7 :179 ஆம் வசனத்தில், அல்லாஹ், சிந்திக்க மறுக்கும் முஷ்ரிக்குகளை மிகக்கடுமையாக கண்டிக்கிறான்.

இவர்கள், மூளை இருந்தும் முட்டாள்கள், கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள், இவர்கள் கால்நடையை போன்றவர்கள், இல்லையில்லை, அதை விடவும் தாழ்ந்தவர்கள், என்று எச்சரிக்கை செய்கிறானே, நான் அனுப்பிய அந்த மெயிலும் கூட, அந்த வசனத்தை அடிப்படையாக வைத்து தான்.

எந்த பொது ஜனம், அறிவிருந்தும் சிந்திக்க மறுக்கிறதோ, எந்த பொது ஜனம், காழ்ப்புணர்ச்சியின் மிகுதியால், கொண்ட கொள்கைகளை எல்லாம் மறந்து ஏகத்துவத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு செயல்படுகிறார்களோ, அத்தகைய பொது ஜனம் ஆடு மாடுகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதை இங்கு மீண்டும் நான் பதிவு செய்கிறேன்.

ஏகத்துவத்தை எத்தி வைப்பதற்கும், அல்லாஹ்வின் எதிரிகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி, அவர்களை காணாமல் போக செய்வதற்கும், வரம்பு மீறுபவர்களிடம் நாமும் வரம்பு மீறுவதற்கும்,, குழுமம் ஒரு தடையாக இருக்குமானால், அந்த குழுமம் நமக்கு தேவையில்லை., என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

ஆத்திர மிகுதியில், "பேடிகள்", என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியுள்ளேன்.

இது குர் ஆனில், அல்லாஹ் சொல்லாத வார்த்தை தான்.
யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடாமல், அந்த சகோதரர் கையாண்ட முறையை போல், பொது ஜனத்தை தான் இவ்வாறு திட்டினேன் என்றாலும், வார்த்தையின் கடுமையை கணக்கில் கொண்டு, அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொள்ளுமாறு, அந்த சகோதரிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------


காரணம் கேட்ட சகோதரர் நாஷிதுக்கு உடனேயே அவரின் கண்ணியமற்ற அந்த மடல் அனுப்பி விளக்கமளிக்கப்பட்டு விட்டது. எந்த மடலால் அவருக்குக் குழும அக்ஸஸ் நீக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் நிலையிலும் இதுவரை அவரைக் குழுமத்தை விட்டு நீக்காமல் இருக்கும் நிலையிலும், காரணமறிவிக்காமல் வரைக் குழுமத்தை விட்டு நீக்கி விட்டதாக கண்டனம் தெரிவிப்பதுஅவதூறான செயல்என்பதைச் சகோதரர்கள்அறியவும் - TMB

குழும நிர்வாகிகளின் இந்த கூற்று தவறான ஒன்று!

அவர்களிடமிருந்து இது குறித்து எந்த மடலும் இதுவரை என் கவனத்திற்கு வரவில்லை. எனது இன்பாசில் நான் தேடிப்பார்த்தவரை , நான் நீக்கப்படுவதற்கான காரணத்தை விளக்கி குழும நிர்வாகிகளிடமிருந்து எந்த மெயிலும் வரவில்லை என்பது தான் உண்மை.

ஒன்று, இவர்கள் பொய் சொல்கிறார்கள், அல்லது, வேறு ஏதேனும் தொழில் நுட்பக்கோளாறினால், இவர்களது மெயில் என்னை வந்தடையாமல் இருக்கலாம்.
காரணத்தை இவர்கள் சொல்லாததால், நானாக, இன்ன மெயிலாக தான் இருக்கும் என்று யூகித்து அளித்த விளக்கம் தான், முன்னர் நான் எழுதிய விளக்க மடல்.



-------------------------------------------------------------------------------------------------

அன்பு சகோதரர் ......... வ அலைக்குமுஸ்ஸலாம்.

எந்த குழுமத்தை விட்டும் பிரியும் எண்ணம் எனக்கு இல்லை.
குழுமத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் இருந்தாலும் கூட, குழுமத்தின் வாயிலாக, ஏகத்துவத்தை பலருக்கும் எத்தி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால், மற்றவற்றை புறந்தள்ளி அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தேன்.

நீங்கள் கூறியதை போல், எனது வார்த்தையின் கடுமையை காரணம் காட்டி நீக்குவது என்பது என்னை பொருத்தவரை, நடுநிலையாக எடுக்கப்பட்ட முடிவல்ல!
என்ன காரணம் என்பதை கூட அறிவிக்க மனமில்லாமல், என்னை நீக்குவதிலேயே முழு குறிக்கோளையும் கொண்டு செயல்படுபவர்களிடம் நடுநிலையை எதிர்ப்பார்க்க முடியாது.
அவர்கள் என்ன காரணத்திற்க்காக என்னை நீக்கினார்கள் என்பதை நான் ஏற்கனவே விளக்கினேன்.

நான் மீண்டும் எழுதுவதை அவர்கள் விரும்பவில்லை எனும்போது, அது குறித்து அவர்களிடம் வற்புறுத்த வேண்டியதில்லை என்பது எனது கருத்து.

எழுத வாய்ப்பிருந்தால் மீண்டும் எழுதுவேன், அல்லது என்னால் இயன்ற வேறு வழிகளில் தாவாவை எடுத்து வைப்பேன், இன்ஷா அல்லாஹ் .
உங்கள் மெயிலுக்கு எனது நன்றி..


அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக