அல்லாஹ்வின் திருப்பெயரால்…
1400 வருடங்களுக்கு முன், அறியாமை காலத்திலே வாழ்ந்த மக்கள், சிலைகளை தங்கள் தெய்வங்களாக வணங்கி கொண்டிருந்தனர். விபச்சாரத்தை ஒரு தவறாகவே கருதாமல் இருந்தனர். படைத்தவனை மறந்து விட்டு படைப்பினங்களான சூரியனையும் நெருப்பையும் வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் தான் அல்லாஹூதஆலா அவர்களிடத்திலே முஹம்மது (ஸல்) எனும் தூதரை அனுப்புகின்றான். அந்த தூதர் அந்த மக்களிடத்திலே அல்லாஹ்வை பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார். ஒழுக்கமுடன் நடக்கவேண்டுமென்றும் ஒரே இறைவனையே வணங்க வேண்டுமென்றும் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
மக்களோடு மக்களாக நன்னடத்தையுடன் வாழ்ந்து வந்த அந்த முஹம்மதுவை(ஸல்) அந்த மக்கள் எதிரியாக கருதினர். நம்முடைய தெய்வங்களெல்லாம் பொய்யானவை என்று இவர் சொல்கிறாரே இவரை சும்மா விடக்கூடாது என்கின்றனர் ஒரு சிலர். நம்முடைய மூதாதையரின் கொள்கையை இவர் விடச்சொல்கிறாரே இவரை கொலை செய்து விடுவோம் என்கின்றனர் ஒரு சிலர். நம்முடைய பிழைப்புக்கு பங்கம் விழைவிக்கிறாரே இவரை ஒழித்துக் கட்டுவோம் என்கின்றனர் ஒரு சிலர். தங்களில் யாராவது ஒருவர் தனியாக சென்று அவரை கொலை செய்தால், அந்த சமுதாயம் பழிக்கு பழி என்று சொல்லி அவரையும் கொலை செய்து விடுமே என அஞ்சி அனைத்து கோத்திரத்தாரையும் ஒன்று கூட்டி அவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கின்றனர். அனைவரும் சேர்ந்து கொன்றால், இவர் அனைவருக்கும் எதிரி தான் என்பதை சொல்லி தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினர். அதற்கான நாளை குறித்து, நபிகளாரின் (ஸல்) வீட்டை எதிரிகள் முற்றுகையிட்டனர். ஆனால் அல்லாஹ் நபிகளாரை பாதுகாத்து அசத்தியவாதிகளை ஏமாற்றமடைய செய்தான்.
இது நபிகளாரின்(ஸல்) மக்கா வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்
எதிரிகளின் தொந்தரவினால் சொந்த நாட்டை துறந்து வேறு பகுதிக்கு சென்றபோதும் எதிரிகள் விட்டபாடில்லை. இவர் சத்தியத்தை சொல்வதால் நம்முடைய பலம் குன்றுகிறது. நம்மிடமிருப்பவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் முஹம்மது(ஸல்)வின் அணியிலே சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அவருடைய அணி வலுப்பெற்றுவிட்டால் நம்முடைய பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும், வருமானம் போய்விடும், எனவே அவரை வீழ்த்துவது தான் நம்முடைய குறிக்கோள் என்று மக்கா காஃபிர்கள் சூளுரைத்தனர். பரம்பரை பரம்பரையாய் தங்களுக்குள்ளே சண்டையிட்டு கொண்டிருந்தவர்கள் கூட இதற்காக இணைந்தனர். அனைத்து குலத்தாரும் அனைத்து கோத்திரத்தாரும் ஒன்று கூடினர். எந்த அளவிற்கென்றால், இயேசுவை (ஈஸா நபி (அலை)) வேசி மகன் என்று சொன்ன யூதர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைந்து, மக்கா காஃபிர்களோடு சேர்ந்து கொண்டு முஹம்மதுவை (ஸல்) வீழ்த்த திட்டமிட்டனர்.
இது நபிகளாரின்(ஸல்) மதீனா வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்
தமிழகத்திலே புரையோடி போயிருந்த இணைவைப்பை விரட்டுவதற்காக எத்தனையோ அறிஞர்கள் களமிறங்கி போராடினர். நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக பிரிவினைகள் ஏற்பட்டது. ஆனால் அதற்காக, ஒரு அறிஞரை தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மக்கா காஃபிர்கள் செய்த வேலையை ஒரு தவ்ஹீத்வாதி என்று சொல்லக்கூடியவர் செய்யலாமா? இதை படிப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை.
தமிழகத்திலே தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் பி.ஜெய்னுல் ஆபிதீனும் ஒருவர். முக்கியமானவரும் கூட. அவருடைய சத்திய பிரச்சாரத்தினால் தமிழக மக்கள் நரகத்தின் விளிம்பிலிருந்து தப்பித்து, சொர்க்கம் புறப்பட தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டனர். தன்னை சீண்டுவார் யாருமில்லை என்றதும் சினம் கொண்ட ஜாக்கின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி, மக்கா காஃபிர்கள் செய்த வேலையை செய்ய துவங்கினார். தான் ஒருவன் மட்டும் அதை செய்துகொண்டிருப்பதால் மக்களின் கோப பார்வை தம்மீது விழுந்து விடுமென்பதால், பி.ஜே யை ஒழித்துக் கட்ட வேண்டி அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்தார். ‘தன்னுடைய இயக்கத்தை சேராதவர்களை பி.ஜே, காஃபிர் என்று சொல்கிறார், இவரை இப்படியே விடக்கூடாது. எனவே அனைவரும் ஒன்று கூடுவோம்’ என்று எஸ்.கமாலுதீன் மதனி, தன் கைப்பட தன்னுடைய லெட்டர்பேடில் எழுதி, கையெழுத்திட்டு அனைத்து அமைப்புகளுக்கும் இரகசியமாய் அனுப்பினார். (இப்படி எஸ்.கே எழுதவில்லை என்றோ, அழைப்பு கொடுக்கவில்லை என்றோ கூறுவாரானால் பொது மேடையிலே குமரி முஸ்லிம் ஆதாரங்களை சமர்பிக்கும் இன்ஷாஅல்லாஹ்)
அந்த அழைப்பின் பேரில் பி.ஜேயை ஒழித்து கட்டுவதற்காக பல அமைப்புகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஒரு மண்டபத்திலே ஒன்று கூடினர்.
முஜிபுர்ரஹ்மான் உமரி
கே.எம்.இக்பால் மதனி
கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
எம்.எம்.அப்துல்காதர் உமரி
முப்தி.உமர் ஷெரிஃப் காஸிமி
கோவை.மசூது உட்பட
பிஜே யின் பிரச்சாரத்தால், வளர்ச்சியால் நம்முடைய வருமானம் தடைபடுகின்றது, பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என அஞ்சிய இன்னும் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் அதிலே கலந்து கொண்டு பி.ஜே யை என்ன செய்ய வேண்டும், அவரை பற்றி நாம் வெளி உலகுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.
அங்கே என்ன பேசப்பட்டது?
என்ன திட்டங்கள் தீட்டப்பட்டது?
அந்த சூழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சொன்னவை என்ன?
என்பதை இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் ஆதாரங்களோடு காண்போம்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
இவர்கள் அனாதை ஆசிரமம் நடத்துகின்றார்கள், எனவே அனாதைகளை பராமரிக்க நாம் உதவி செய்வோம், இவர்கள் அழைப்பு பணி செய்வதாக பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள், எனவே அல்லாஹ்விடத்தில் நன்மையை பெற்று தரும் அழைப்பு பணிக்காக இவர்களிடம் நன்கொடையளிப்போம் என தங்கள் செல்வங்களை வாரி கொடுப்பவர்களே! சிந்திப்பீர்!! இவர்கள் தனக்கு பிடிக்காதவனை என்ன செய்வது, அவனை எப்படி பழிவாங்குவது என்று திட்டம் தீட்டுவதற்காக மக்கள் பணத்திலே மண்டபம் எடுத்து, வந்திருந்தவர்கள் அனைவருக்கும் விருந்து படைக்கின்றனர். அங்கே என்ன நடந்தது என்பதனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் வெளியிடப்படவில்லை. நிதி கேட்டு உங்களிடத்திலே வரும்போது, அவர்களிடத்திலே இந்த சம்பவத்தின் சிடியை கேட்டு வாங்குங்கள். உங்கள் பணத்தை அவர்கள் எப்படி செலவிடுகிறார்கள் என்பதை உணருங்கள் !!
Posted by Kumari Muslim
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக