வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஒரு தினம் மட்டுமேனும் இயக்க வேறுபாடுகளை மறப்போம்..!

1999 ல் தவ்ஹீத்வாதிகள் சென்னை கடற்கரையில் கூட்டிய வாழ்வுரிமை மாநாடு ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரிடம் இஸ்லாமிய சமுதாயத்தின் இடஒதுக்கீடு அவசியத்தை உணர்த்தியது. அரசியல் கட்சிகளின் 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு இடம்பிடிக்க இம்மாநாடே வழிகோ­லியது.

  • தவ்ஹீதுவாதிகள் நடத்திய 2004 தஞ்சைப் பேரணி அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது.

  • குடந்தையை குலுக்கிய டிஎன்டிஜே வின் இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி அப்போதைய அதிமுக அரசையே ஆணையம் அமைக்க வைத்தது.

  • டிஎன்டிஜே வின் தொடர் முழக்க தர்ணா பேரணி திமுக அரசின் மவுனத்தையும் மரண உறக்கத்தையும் கலைத்தது.

  • டிஎன்டிஜே நடத்திய நாடுதழுவிய சிறைநிரப்பும் போராட்டம் மாநில அரசை மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கச் செய்தது.
  • இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில் பலசோதனைகளைக் கடந்து சாதனை படைத்த டிஎன்டிஜே போராட்ட களத்தில் போர்க்குணத்துடன் நின்று தமிழகத்தில் இடஒதுக்கீட்டை வென்று தந்தது.

  • இப்பொழுது நாடுதழுவிய இட ஒதிக்கீடு கோரிக்கைக்கான நேரம் !!

  • இன்றைய தேர்தலை குறியாக கொள்ளாமல் நாளைய தலைமுறையை குறியாகவும் வெறியாகவும் கொண்ட டிஎன்டிஜே, மத்தியில் ரங்கனாத் மிஸ்ரா பரிந்துரைப் படி பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தர மீண்டும் படையெடுக்கிறது!!.
  • கட்சிகளை வளர்ப்பதற்காக கூட்டம் கூட்டுபவர்கள் மத்தியில் சமுதாய நலனுக்காக ஒரு மாபெரும் கூட்டம் !!
  • ஆட்சியாளர்களை திரும்பிப்பார்க்க வைப்பதே இதன் ஒரே நோக்கம்.

.

  • ஒரு தினம் மட்டுமேனும் இயக்க வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றுபட்டால், நாளைய நமது சந்ததியினர் பெரும் சுகம் அடைவார்கள் என்ற நம்பிக்கையை இந்த மாநாடு நிச்சயம் அளிக்கும், இன்ஷா அல்லாஹ். !!
  • ஒன்றுபடுவோம், வரும் ஜூலை நான்கில் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக