திங்கள், 13 டிசம்பர், 2010

விவாதம் செய்யத்தூண்டும் இஸ்லாம்!

விவாதத்தை தூண்டும் இஸ்லாம்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16 : 125


வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! ”எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்என்று கூறுங்கள்!
அல் குர்ஆன் 29 : 46

நபிமார்களும் விவாதம் செய்துள்ளனர்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ”என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, ”நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். ”அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல் குர்ஆன் 2 : 258.


நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.
அல் குர்ஆன் 11 : 32


விவாதம் செய்யலாம் என்பதற்கான குர்ஆன் தரும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்.

அர்த்தமுள்ள விவாதத்துக்கு அனுமதி. 2:258
அறிவின்றி விவாதம் செய்யலாகாது 3:66, 22:3, 22:8, 31:20, 40:5, 40:35, 40:56, 43:58
விவாதத்துக்கு அனுமதி 11:32, 16:125, 29:46
அழகிய விவாதத்துக்கு அனுமதி. 16:125, 29:46
அறிவுப்பூர்வமாக வாதம் செய்யலாம். 3:65, 7:195, 21:63, 22:73, 26:72, 37:95, 43:81
ஆதாரம் கேட்பது 2:111, 3:93, 21:24, 27:64, 28:75, 37:157
எதிர் தரப்பினரிடம் ஆதாரம் கோருதல் 3:93, 6:143, 6:144, 6:148, 6:150, 28:49, 37:157, 46:4


விவாதம் கூடாது என்று கூறும் விபரமற்றவர்களும் தங்கள் விபரமற்ற கொள்கையை நிலைநாட்டுவதற்காக விவாதம் தான் செய்து வருகின்றனர் என்பதே இங்கு நகைப்புக்குரிய உண்மை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக