சகோதரர் நாஷித் அவர்கள் என்னுடன் நடத்தும் உரையாடல்களை தனித்தனித் தலைப்பாக பிரிக்காமல் இருக்க வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்..
ஒவ்வொரு இழையிலும் தனித்தனியான ஆதாரங்களையும், தனி தனியான கேள்விகளையும் உங்களை நோக்கி நாம் கேட்டு வருகிறோம்.
அனைத்தையும் ஒரே இழையில் பேசினால் நம் இருவர் மட்டும் தான் வாதித்துக்கொண்டிருப்போமே தவிர, மற்றவர்களுக்கு விளங்காது.
வாதங்களை சந்திக்க தகுதியுடையவர் எத்தனை கேள்விகள் எத்தனை இழைகளில் வைக்கப்பட்டாலும் அதை எதிர்க்கொண்டு பதில் அளித்து தன் கொள்கையை நிலைநாட்ட தான் செய்ய வேண்டுமே தவிர, தனி தனி இழைகளில் ஆதாரங்கள் வைப்பதைஎல்லாம் விமர்சித்து உங்களை நீங்களே பலகீனம் ஆக்கக்கூடாது.
இன்னும் சொல்லப்போனால், ஒரே தலைப்பை நாம் பிரிக்கவில்லை. ஒவ்வொரு ஆதாரத்தையும் தான் தனி தனியாக பிரித்தோம். ஒரு இழைக்கு என்று ஒரு ஹதீஸ் ஆதாரம், என்ற வகையில் தான் வாதம் செல்கிறது. நான் வைத்த நான்காம் ஆதாரம் கூட, தனி இழையில் வைத்ததற்கும் இது தான் காரணம். தனி தனியாக பிரித்தால் தான் சொல்வது அனைவருக்கும் தெளிவாக சென்று சேரும். உங்கள் வாதம் சரியில்லை!
சிராஜ் அவர்களிடம் எஞ்சியுள்ள ஒரே ஆதாரம், குர் ஆனில், அல்லாஹ் பிறையை காலம் காட்டி என்று சொல்கிறான்.
இதை எந்த ஹதீஸ் மறுக்கிறது? என்று திரும்ப திரும்ப கேட்டுகொண்டிருக்கிறார்.
இதற்கு நாம் முன்னரே பதில் சொல்லி விட்டோம். பிறை உங்களுக்கு காலம் காட்டுவதை போல், தத்தமது பிறையை ஒவ்வொரு மாதமும் பார்த்து முடிவு செய்யும் எனக்கும் அது காலம் காட்ட தான் செய்கிறது என்று சொன்னேன்.
அதை இவர் மறுத்தாரா? மறுக்க முடிந்ததா?
உங்களுக்கு காலம் காட்டுகிறது என்றால் 100 வருட காலண்டரை அடியுங்கள் பார்க்கலாம் என்று சிறு பிள்ளை தனமாக ஒரு கேள்வியை கேட்டார்.
அதற்கும் நான் கேட்டேன், "சரி, 100 வருடக்காலண்டரை அடிக்க முடிந்தால் தான் காலம் காட்டும் என்று பொருளா?
சூரியன் கூட தான் காலம் காட்டி என்று குர் ஆன் சொல்கிறது. ரசூல் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் இதே கிழமையில் சூரியன் எந்த திசையில் இருக்கும் என்று அறிந்து வைத்திருந்தார்களா?
அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதால் சூரியன் அவர்களுக்கு காலம் காட்டவில்லை என்று சொல்வீர்களா? என்று கேட்டோம், இதற்கும் இவர் வாய் திறக்கவில்லை.
இவைகளுக்கு இவர் பதில் சொல்லாததிலிருந்தே தெரிகிறது, பிறை காலம் காட்டி என்று குர் ஆன் சொல்வதற்கும், இவர்கள் கணித்து செயல்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கணித்து செயல்படாத எனக்கும் அது காலம் காட்ட தான் செய்கிறது.
இவர் அடுக்கிய அனைத்து வசனங்களையும் நீங்கள் படித்துப்பார்த்தால் , அவை கூறுவது என்னெவெனில், பிறை காலம் காட்டி.!
இந்த ஒற்றை வாசகத்தை தான் அனைத்து வசனங்களும் சொல்கிறது. அனைத்து வசனங்களையும் உங்களை விடவும் முழுமையாக நான் நம்புகிறேன்! காலம் காட்டுகிறது என்பதற்கும், 100 வருடக்காலண்டரை இன்றே அச்சிட்டு விநியோகம் செய்வதற்கும் என்ன தொடர்பு? அது தானே இங்குள்ள கேள்வி?
ஏதோ, இவர்கள் போன வாரம் தான் பிறையை கண்டுபிடித்ததைப்போலவும், அல்லது நேற்று தான் இந்த குர் ஆன் வசனங்கள் இறங்கியது போலவும் பேசுகிறார்!!
குர் ஆன், பிறையை காலம் காட்டி என்று சொல்கிறது. அந்த வசனங்களின் படி ரசூல் (ஸல்) அவர்கள் நடந்தார்களா? அல்லது அதை மீறினார்களா?
மாதங்களை அவர்கள் எவ்வாறு முடிவு செய்தார்கள் என்று ஆதாரங்கள் ஹதீஸ்களில் இருக்க தானே செய்கிறது?
அவைகள் அனைத்திலும் பிறையை பார்த்தார்கள், பார்த்தார்கள் பார்த்தார்கள், என்று தானே வருகிறது , எங்காவது கணித்தார்கள் என்று வருகிறதா?
கேட்டோமே, பதில் வந்ததா?
நாம் வைத்த நான்கு ஹதீஸ்களும் இவர் கண்ணுக்கு தெரியவில்லை. அதிலிருந்து நாம் அடுக்கிய பல பல கேள்விகள் இவர் கண்ணுக்கு தென்படவில்லை.
பொருத்தமில்லாத குர் ஆன் வசனத்தை வைத்து இவர் கொள்கையை நிறுவ பார்க்கிறார், அது மக்களிடம் எடுபடாது.
மீண்டும் ஹதீஸ் ஆதாரங்கள் சுருக்கமாக..
முதல் ஆதாரம்:
மாதத்திற்கு 29 நாட்கள். தான். பிறையை பார்க்காமல் நோன்பை விடாதீர்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். கணிக்காமல் விடாதீர்கள் என்று சொல்லவில்லை. ஏன்?
பிறை தெரியவில்லை என்றால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்.
கணிக்கலாம் என்றால், பிறை தெரிந்தால் / தெரியவில்லை என்றால், போன்ற வாசகமே அர்த்தமற்றதாகி விடும்!
தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், கணித்து முடிவு செய்யுங்கள் என்று அவர்கள் சொல்லியிருக்கலாமே !
இரண்டாம் ஆதாரம் :
குறைப் ஹதீஸில், இப்னு அப்பாஸ் அவர்கள் சனிகிழமை பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். கணித்ததாக சொல்லவில்லை.
பிறையை பார்க்காமல் ரமலானை முடிக்க மாட்டோம் என்கிறார்கள். கணிக்காமல் முடிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
பிறை தெரியாவிட்டால், 30 ஆக மாதத்தை முழுமைப்படுதுவோம், என்கிறார்கள்.
கணித்து முடிவு செய்யலாம் என்றால், 30 ஆக பூர்த்தி செய்வது என்ற பேச்சே தேவையில்லை.
மூன்றாம் ஆதாரம் :
வாகனக்கூட்டம் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். கணிக்கதான் வேண்டும் என்றால், நேற்று அவர்கள் ஏன் பிறை பார்த்தார்கள்? அவர்கள் பிறை பார்த்ததை வைத்து ஏன் நோன்பை விட ரசூல் (ஸல்) சொன்னார்கள்? கணித்து அல்லவா நீங்கள் முடிவு செய்ய வேண்டும்> ஏன் பிறையை பார்க்கிறீர்கள்? என்று அவர்கள் ஏன் கேட்கவில்லை?
நான்காம் ஆதாரம்:
இப்னு அப்பாஸ் அவர்களின் மற்றொரு அறிவிப்பில், சில சஹாபாக்கள் பிறையை பார்த்து இரண்டா மூன்றா என்று ஏன் குழம்ப வேண்டும்? கணித்தால், இரண்டாம் பிறையா மூன்றாம் பிறையா என்று ஏன் குழப்பம் ஏற்படுகிறது?
நீங்கள் பிறை பார்க்கும் வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டி தருகிறான் என்று ரசூல் (ஸல்) அவர்கள் எதற்கு சொல்ல வேண்டும்? கணிக்கும் வரை மாதத்தை நீட்டி தருவதில் அர்த்தம் இருக்குமா பார்க்கும் வரை நீட்டி தருவதில் அர்த்தம் இருக்குமா?
ஐந்தாம் ஆதாரம் :
இன்னொரு அறிவிப்பில், பிறையை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் அல்லாஹ் பிறையை சிறிது நேரம் வானில் தென்பட செய்கிறான் என்று ரசூல் (ஸல்) சொல்லியுள்ளார்களே, கணித்து விடலாம் என்றால், ரசூல் (ஸல்) இவ்வாறு ஏன் சொல்ல வேண்டும்?
மேலே உள்ள ஹதீஸ் ஆதாரங்களில் நாம் வைத்திருக்கும் வாதங்களை முதலில் இவர் முறியடிக்கட்டும்.
பிறை காலம் காட்டி, அதனால், கணிக்கலாம் என்று இவர் சொல்லியிருப்பதில் உள்ள சிறு பிள்ளைதனத்தை விளக்கி நாம் கேட்ட கேள்விக்கும் இவர் பதில் அளிக்கட்டும். அதை செய்தாலே தவிர, இவரது கொள்கையை இவரால் என்றைக்கும் நிலைநாட்ட இயலாது!!
அதை தவிர்த்து, அவர் எந்த கிழமையில் பிறை பார்த்தார், எந்த கிழமை நோன்பு வைத்தார், அந்த ஹதீஸில் அந்த வார்த்தை இருக்கிறதா? இந்த ஹதீஸில் இந்த வார்த்தை இருக்கிறதா? என்ற கேள்விகளெல்லாம், நம்மை மடையனாக்கி, தன்னை தற்காத்துக்கொள்ள இவர் எடுக்கும் முயற்சிகள் தான் என்பதை விபரமுள்ள அனைவரும் புரிந்துக்கொள்வார்கள்.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
நாஷித் அஹமத்
தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته
-----------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
சகோதரர் நாஷித் அவர்கள் என்னுடன் நடத்தும் உரையாடல்களை தனித்தனித் தலைப்பாக பிரிக்காமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நானும் என் சார்பாக நீங்களும் வைக்க வேண்டும்.
ஒரு தலைப்பின் கீழ் வரும் உரையாடலை பிரிந்தால் அந்த தலைப்பின் முக்கிய கலந்துரையாடல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு யாருடைய உரையாடல்கள் சரி தவறு என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் போகும்.
எனவே எவ்வளவு பெரிய கலந்துரையாடலாக இருந்தாலும் அதை நாஷித் பிரிப்பது அவருடைய நேர்மை தன்மையில் குறையுள்ளதாக புரிய வாய்ப்பாகிவிடும்.
எனவே எக்காரணத்தை கொண்டும் ஒரு இழையில் வரும் செய்திகளை பிரிக்க நான் அனுமதிக்கவில்லை. என்னுடைய அனுமதியை நான் தரவில்லை. என்னுடன் நடத்தும் கலந்துரையாடல்களில் உள்ளதை அவர் எந்த வித கட்டிங் எடிட்டிங் வேலைகள் செய்வதையும் நான் அனுமதிக்க மாட்டேன். மேலும் பிளாக்கில் முழு கலந்துரையாடல்களையும் பதியாமல் அவருடைய வாதத்திற்கு தேவையானதை மட்டும் பதிந்தால் அவர் நேர்மையற்றவர் என்பதை நீங்களும் அவருக்கு கூறி முழு கலந்துரையாடலையும் பதிய சொல்லவும்.
என்னுடன் நடத்தும் கலந்துடையாடல் என்பதால் என் கோரிக்கை அவர் ஏற்றே ஆக வேண்டும்.
என்னுடைய கணக்கிடுதலுக்கு ஹதீஸில் ஆதாரம் இல்லை என்று மறுக்கின்றார். 10:5 திருக்குர்ஆன் வசனம் ஆண்டுகளின் எண்ணிக்கை கணக்கிட முடியும் என்று கூறும் வசனத்தை நான் செயல்படுத்துவதை நபியவர்கள் என்றாவது தடை விதித்துவிட்டு சென்றார்களா? என்ற எனது கேள்விக்கு பதில் அளிக்காமல் மழுப்பல் கேள்விகளை கேட்டு மக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றார். நேர்வழி என்பது அல்லாஹ்வின் முடிவில் உள்ளது என்பதை நாம் அறிந்துள்ளதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
அவர் பிறை பார்க்க வேண்டும் என்று கூறும் அனைத்து ஹதீஸ்களும் ரமளானை மையப்படுத்தியது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன். எனவே என்னுடைய கணக்கிடுதலுக்கு அவர் இது வரை எந்த நியாமான மறுப்பையும் தரவில்லை. எத்தனை ஆண்டுகளானாலும் தர முடியாது என்பது தான் உண்மை .
நான் காட்டும ஆதாரங்களோ எக்காலத்திலும் யாராலும் இட்டுகட்ட முடியாத, இதுவரை எந்த இட்டுகட்டுதலுக்கும் உள்ளாகாத அல்லாஹ்வின் பாதுகாப்பில் இட்டுகட்டபட்ட செய்திகளே இல்லாத திருக்குர்ஆன் வசனமாக உள்ளது.
மேலும் நான் அவருடைய ஆதாரங்களில் இருந்து நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவதால் அவர் பல விதமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துகிறார். என்னை கேவலமாக சித்தரிக்க அவர் பயன்படுத்தும் அனைத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து நான் அவனிடமே பாதுக்காப்பு கோரியவனாக இருக்கின்றேன். என் வார்த்தைகளில் அவரை நான் ஏளனப்படுத்தும் செயல்களை செய்திருந்தால் சகோதரர் நாஷித் அவர்களிடம் மன்னிப்பு கோரி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே சகோதரர் நாஷித் அவர்கள் சத்தியம் புரிந்தும் நிர்பந்தமாக இஸ்லாம் கூறும் சந்திர நாட்காட்டி கணக்கு முறைகளை எதிர்ப்பதால் அவருக்கு ஈருலகிலும் எந்த பிரயோஜனமும் இருக்காது. அல்லாஹ்வை எதிர்த்து யாரும் வெல்ல முடியாது என்பதை நாம் அனைவரும் அறிந்தே உள்ளோம்.
அவருடைய பிறை கொள்கை சரி என்றால் இது வரை நான் கேட்ட பார்வை சம்மந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதை நம்மில் யாரும் மறுக்க முடியாது. என்னுடைய ஆதாரத்தை நான் குர்ஆனில் இருந்து வைத்துவிட்டேன். அதற்கு தடையை அவர் இதுவரை காட்டவில்லை என்பதையும் நம்மில் யாரும் மறுக்க முடியாது.
அவருடைய ஆதாரத்தை முழுமையாக முறியடிக்க கூடிய பல கேள்விகளை நான் கேட்டுள்ளேன். முக்கியமாக எந்த மாதப்பிறையைப்பார்த்து எந்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவரால் இது வரை பதில் சொல்ல முடியவில்லை. குரைப் சம்பவத்தில் அவரே எழுதியதை நான் கோடிட்டு காட்டியுள்ளேன். அதன்பின்னும் நான் பொய்யர் என கூறுகின்றார். அதன் பின் தவறுதலாக எழுதியுள்ளதாக அவரே ஒப்புக்கொள்கின்றார்.
இவர் நம்முடன் நடத்தும் கலந்துரையாடலை துண்டாக்கி பதிவதால் அவர் பொய் என்று சொன்னாலும் நீங்கள் சென்று தேடி பார்ப்பது கடினம் எனவே தான் என்னுடைய கலந்துரையாடல்களை பிரிக்காமல் பதியும் படி கேட்டுக்கொள்கின்றேன். எந்த பிளாக்கில் பதிந்தாலும் பிரிக்கக் கூடாது.
அவர் ஏற்கனவே பதிந்ததில் இப்னு அப்பாஸ் என்று நோன்பு வைத்தாக எழுதியுள்ளார் என்பதை பாருங்கள் சகோதரர்களே
இவை எல்லாம் வைத்து பார்க்கும் போது அவருடைய தடுமாற்றங்கள், குழப்பங்கள், தெளிவாக நமக்கு புரிகின்றது. எனவே அவர் சத்தியத்தை மறைக்காமல் அவருடைய பிறை கொள்கை உண்மை என்றால் அவர் என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் சுய கருத்தை திணிக்காமல் பதில் கூற வேண்டும். கூறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம் சகோதரர்களே!!!
பிறை கலந்துரையாடல் என்பதால் பிறை சம்மந்தமில்லாத அவருடைய எந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்து அதிலிருந்து நாஷித் அவர்கள் மக்களை திசை திருப்புவதை நான் விரும்பவில்லை.
இப்படிக்கு
என்றும் எனக்காக பிரார்த்திக்கும் உங்களை போன்ற நல்லுள்ளம் கொண்டோர்களை நேசிக்கும் உங்கள் அன்புச்சகோதரன்
சிராஜ் ஏர்வாடி
------------------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
முன்கூட்டியே கணிக்க முடிவதால் தான் பிறை காலம் காட்டுகிறது என்று நீங்கள் தான் ஒரு அருமையான வாதம் ஒன்றை வைத்திருக்கிறீர்கள்.
அந்த பிரமாதமான வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, கீழே உள்ள கேள்வியையும் என்னை நோக்கி நீங்கள் கேட்டீர்கள்.
இந்த கேள்விக்கு, கீழ்க்காணும் பதிலை நான் தந்தேன். சூரியன் குறித்து என்ன சொல்கிறீர்கள்? அதுவும் காலம் காட்டுகிறதா இல்லையா என்று.
அந்த பதில் இங்கே.
இதில், உங்கள் வாதம் அனைத்துமே முழுமைபெறும்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
---------------------------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
நான் செய்து வரும் கொள்கையின் படி பிறை எவ்வாறு எனக்கு காலம் காட்டாமல் போகிறது என்று கேட்டேன். அதற்கு ஏதாவது பதில் சொன்னாரா?
குர் ஆனுக்கு, பிறை சம்மந்தமாக வரும் எந்த ஹதீசும் முரண் இல்லை என்பது தான் எனது வாதம்.
குர் ஆனுக்கு எந்த பிறை சம்மந்தமான ஹதீசும் முரண்படவில்லை.
குர் ஆனை இவர் புரிந்து கொண்ட விதத்தில் தான் தவறு உள்ளது.
இவர் ஆதாரம் தரும் நிலையில் இருந்து கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்பது வேடிக்கையிலும் வேடிக்கை.
புரிந்து தான் வாதம் செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
இதே கேள்வியை ரசூல் (ஸல்) அவர்களிடம் கேட்டால் அவர்கள் என்ன பதில் தருவார்கள்?
அவர்கள் என்ன பதில் தருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அது தான் எனது பதிலும். இந்த கேள்விக்கு ரசூல் (ஸல்) அவர்களுடைய பதில் என்ன என்பதை முடிந்தால் இங்கு சொல்லுங்கள் பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
வெறும் பேச்சளவில் சொல்கிறீர்களே தவிர , நான் எடுத்து வைத்த ஹதீஸ்கள் அனைத்தையுமே ஹதீஸ்கள் இல்லை, அவை குர் ஆனுக்கு முரணாக இருக்கின்றன என்று மறுக்க தயாரென்றால் சொல்லுங்கள்.//Nashid Ahmed
--------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
குர் ஆன் வசனம், எனது கொள்கைக்கு முரணாக இருக்கிறது என்பது உங்கள் வாதம் என்றால், அதில் நீங்கள் உண்மையாளர் என்றால், குர் ஆனுக்கு முரண்படக்கூடிய ஹதீஸ்களை நீங்கள் மறுக்க தயாரா?
வெறும் பேச்சளவில் சொல்கிறீர்களே தவிர , நான் எடுத்து வைத்த ஹதீஸ்கள் அனைத்தையுமே ஹதீஸ்கள் இல்லை, அவை குர் ஆனுக்கு முரணாக இருக்கின்றன என்று மறுக்க தயாரென்றால் சொல்லுங்கள்.
அடுத்து, நான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் தராமல் ஏதேதோ பேசுகிறீர்கள்.
நான் கேட்டது, நான் கொண்ட கொள்கை படி பிறையை முடிவு செய்து வருகின்ற போதும் கூட பிறை எனக்கு காலம் காட்டுகிறது. நான் எந்த வகையிலும் நீங்கள் கூறும் குர் ஆன் வசனத்தை மீறவில்லை என்கிறேன். அதை நீங்கள் மறுக்க வேண்டும்.
இதற்கு பதில் தரும் நிலையில் இருந்து கொண்டு, ஏதோ, அந்த குர் ஆன் வசனம் உங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதை போல் பேசுவது அறிவார்ந்த வாதம் அல்ல!
தத்தமது ஊரில் பிறை பார்த்து முடிவு செய்தாலும் பிறை காலம் காட்டும்.
குர் ஆன் இறங்கிய சமயத்தில் வாழ்ந்த மக்களுக்கு எப்படி அது காலம் காட்டியதோ, அதே போன்று இன்றைக்கு எனக்கும் காலம் காட்டுகிறது.
ஏதோ பிறையை நேற்று கண்டுபிடித்ததை போல பேசாதீர்கள்.
பிறை காலம் காட்டுகிறது என்ற வசனத்தை வைத்துக்கொண்டு, முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்று முடிவு செய்வது முட்டாள்தனமே தவிர வேறில்லை. அந்த வசனத்தை ரசூல் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படுத்தினார்கள்? சஹாபாக்கள் எவ்வாறு செயல்படுத்தினார்கள்? அவர்கள் எவ்வாறு செயல்படுதினார்களோ, அதே போன்று நாமும் செயல்படுத்தலாம். எந்த சிரமமும் இல்லை.
ரசூல் (ஸல்) அவர்கள் செய்தது ஒன்று, நாம் செய்வது வேறொன்று என்கிறீர்கள்.
நான், நாங்கள் இருவர் செய்வதும் ஒன்றே என்று சொல்கிறேன். யார் முரண்படுவது?
நான் கேட்பது நேரடி கேள்வி.. இன்றைக்கு எனது கொள்கைப்படி பிறையை முடிவு செய்வதனால், பிறை எனக்கு எந்த வகையில் காலம் காட்டாமல் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தவும்.
------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
//இமாம் சுயூத்தி அவர்களின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்த செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூல்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்தவகையில் அடங்கும்.
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276//Nashid Ahmed
---------------------------------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
அஸ்ஸலாமு அலைக்கும்..
பல வருடங்களின் கணக்கை பிறைகளை வைத்து கணக்கிட்டு கொள்ள முடியும் என்று குர் ஆன் கூறுகிறது என்பது உண்மை தான்!
இது எந்த ஹதீஸுக்கும் முரணாக இல்லை! எந்த ஹதீசுக்கு, எந்த வகையில் முரண் என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.
இந்த குர் ஆன் வசனம், உங்கள் கொள்கைக்கு சாதகமாக நீங்கள் எடுத்துக்கொள்வது வெறும் அறியாமையே!
பிறையை ஒவ்வொரு மாதமும் கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்ற கொள்கை, இந்த குர் ஆன் வசனத்தை எவ்வாறு முரணாக்குகிறது என்பதை நீங்கள் நிரூபித்தாலேயொழிய, இந்த வசனம் எனது கொள்கைக்கு எதிராக நிற்காது.
பிறை என்பது காலம் காட்டி தான். பல வருடங்களின் கணக்கை காட்டக்கூடியது தான். இத்தனை வருடங்களாக அது எனக்கு காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
இத்தனை வருடங்களாக எனக்கு அது காலம் காட்டவில்லை, கணக்கை பின்பற்றக்கூடிய உங்களுக்கு மட்டும் தான் அது காலம காட்டி வருகிறது என்பதை நிரூபியுங்கள், உங்கள் கருத்தை சரி எனலாம்.
பிறை காலம் காட்டி என்ற வாசகத்தை வைத்து, முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்ற கொள்கையை நிலைநிறுத்த முயற்சிப்பது எந்த வகையிலும் அறிவுக்கு உகந்ததல்ல!
ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்து மாதங்களை முடிவு செய்தாலும் பிறை காலம் காட்டும்.
ஆகவே, இது போன்ற வாதம் உங்கள் கொள்கையை தூக்கி நிறுத்தாது!
-----------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
நீங்கள் வைத்த ஆதாரத்தின் அடிப்படையில்
//இமாம் சுயூத்தி அவர்களின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்த செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூல்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்தவகையில் அடங்கும்.
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276//Nashid Ahmed
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
ஆங்கில காலண்டர் படி, 31 நாட்களும் காலம் காட்டுகின்றன என்று ஒருவர் சொல்கிறார். அது எப்படி? 1 ஆம் தேதியை வைத்து தானே மாதத்தின் முதல் நாளை தீர்மானிக்கிறீர்கள்? பின்பு ஏன் அனைத்து நாட்களும் காலம் காட்டுவதாக சொல்கிறீர்கள்? என்று இன்னொருவர் கேட்டால் அது எப்படி முட்டாள்தனமான கேள்வியோ, அதே போன்று தான் நீங்கள் கேட்கும் கேள்வியும் இருக்கிறது.
மாதம் பிறந்து விட்டதா என்பதை தீர்மானிக்க, முதல் பிறையை பார்க்கிறோம். அதை வைத்து மாதத்தின் அனைத்து நாட்களையும் முடிவு செய்கிறோம். முதல் பிறை தெரிந்து விட்டால் பத்தாம் பிறையும் தெரிந்து விடும்.
அனைத்து நாட்களிலும் பிறைகள் காலம் காட்ட தான் செய்கின்றன.
ஹதீஸ் ஆதாரங்களை வைத்து நான் கேள்வி கேட்டிருக்கும் நிலையில், ஹதீசுக்கு உரிய பதிலை தராமல், சுய விளக்கங்களையும், சுய சிந்தனையின் படி எழும் கேள்விகளையும் கேட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
வாகனக்கூட்டம் நேற்று பிறை பார்த்ததாக ஏன் சொல்ல வேண்டும்? கணக்கிட்டு முடிவு செய்யலாம் என்றால், நேற்று பிறையை அவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
ரசூல் (ஸல்) அவர்களும் கணக்கிட்டு தான் முடிவு செய்வார்கள் என்றால் தகவல் சொல்ல எதற்க்காக அவர்கள் வர வேண்டும்?
அவர்களது தகவலை வைத்து ரசூல் (ஸல்) எதற்கு சட்டம் சொல்ல வேண்டும்? நான் கணக்கிட்டு கொள்வேனே, நீங்கள் ஏன் இதை சொல்ல இத்தனை தூரம் வந்தீர்கள்? என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை?
அதே போன்று,
பிறை மூன்றாவதா இரண்டாவதா என்று சஹாபாக்கள் ஏன் குழம்ப வேண்டும்?
நீங்கள் பிறையை பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டி தந்துள்ளான் என்று ரசூல் (ஸல்) ஏன் சொல்ல வேண்டும்?
கணித்து முடிவு செய்யலாம் என்றால் மேலே உள்ள எந்த ஒன்றும் அவசியமற்றதாகி விடுமே!
இவைகளுக்கு பதில் சொல்லி தான் உங்களது நிலையை விளக்க வேண்டுமே அல்லாமல், அர்த்தமற்ற கேள்விகள் மூலம் அல்ல!
---------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
இமாம் சுயூத்தி அவர்களின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்த செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூல்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்தவகையில் அடங்கும்.
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276
பிறை பற்றிய ஹதீஸ்கள் 2:189 வசனத்திற்கு முரண் இல்லை என்றால் அதை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்தவும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
வளர் பிறை, தேய் பிறை என்பது காலம் காட்டிகள் தான். இதை யாரும் மறுக்கவோ, விமர்சிக்கவோ இல்லை.
இதை வைத்து ஹதீஸ் குரானுக்கு முரண்படுகிறது என்று முடிவு செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை!
----------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
------------------------------------------------------------------------------------------------------------------
நாஷித் :
ஏற்கனவே வாதிக்கப்பட்டவைகளுக்கு இதுவரை பதில் தராமல் காலம் தாழ்த்தி வருபவர், இதற்கு முந்திக்கொண்டு கருத்து தெரிவிப்பது வேடிக்கை தான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக