வெள்ளி, 31 டிசம்பர், 2010

பதில் இல்லாத அந்த ஐந்து ஆதாரங்கள்!




பிறையை கணக்கிட்டு முடிவு செய்யக்கூடாது, ஒவ்வொரு மாதமும் கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஐந்து ஹதீஸ் ஆதாரங்கள்.


முதல் ஆதாரம்:
(அறிவிப்பவர் : இப்னு உமர், நூல்: புஹாரி )

மாதத்திற்கு 29 நாட்கள். தான். பிறையை பார்க்காமல் நோன்பை விடாதீர்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். கணிக்காமல் விடாதீர்கள் என்று சொல்லவில்லை. ஏன்?
பிறை தெரியவில்லை என்றால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்.
கணிக்கலாம் என்றால், பிறை தெரிந்தால் / தெரியவில்லை என்றால், போன்ற வாசகமே அர்த்தமற்றதாகி விடும்!
தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், கணித்து முடிவு செய்யுங்கள் என்று அவர்கள் சொல்லியிருக்கலாமே ! கணித்து முடிவு செய்து விடலாம் என்றால், உறுதியாக இந்த மாதத்திற்கு 29 தான் அல்லது 30 தான் என்பதை முன்கூட்டியே கணித்து விட முடியும். பிறை தெரிந்தால் 29, தெரியவில்லை என்றால் 30 என்று இரு நிலை எடுக்க தேவையில்லை. ஆனால், ரசூல் (ஸல்) அவ்வாறு எடுத்திருக்கிறார்கள்.


இரண்டாம் ஆதாரம் :
(அறிவிப்பவர் : குறைப், நூல் :முஸ்லிம் )

குறைப் ஹதீஸில், இப்னு அப்பாஸ் அவர்கள் சனிகிழமை பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். கணித்ததாக சொல்லவில்லை.
பிறையை பார்க்காமல் ரமலானை முடிக்க மாட்டோம் என்கிறார்கள். கணிக்காமல் முடிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
பிறை தெரியாவிட்டால், 30 ஆக மாதத்தை முழுமைப்படுதுவோம், என்கிறார்கள்.
கணித்து முடிவு செய்யலாம் என்றால், 30 ஆக பூர்த்தி செய்வது என்ற பேச்சே தேவையில்லை.
முன்னர் சொன்னது போல், கணித்து முடிவு செய்து விடலாம் என்றால், உறுதியாக இந்த மாதத்திற்கு 29 தான் அல்லது 30 தான் என்பதை முன்கூட்டியே கணித்து விட முடியும். பிறை தெரிந்தால் 29, தெரியவில்லை என்றால் 30 என்று இரு நிலை எடுக்க தேவையில்லை. ஆனால், ரசூல் (ஸல்) அவ்வாறு எடுத்திருக்கிறார்கள். சஹாபாக்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள்.


மூன்றாம் ஆதாரம் : (அறிவிப்பவர் : அபு உமைர், நூல் : நசஈ)

வாகனக்கூட்டம் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று பிறை பார்த்ததாக சொல்கிறார்கள். கணிக்கதான் வேண்டும் என்றால், நேற்று அவர்கள் ஏன் பிறை பார்த்தார்கள்?
அவர்கள் பிறை பார்த்ததை வைத்து ஏன் நோன்பை விட ரசூல் (ஸல்) சொன்னார்கள்? கணித்து அல்லவா நீங்கள் முடிவு செய்ய வேண்டும், ஏன் பிறையை பார்க்கிறீர்கள்? என்று அவர்கள் ஏன் கேட்கவில்லை?




நான்காம் ஆதாரம்: (அறிவிப்பவர் : அபுல் பக்தரி, நூல் : முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் அவர்களின் மற்றொரு அறிவிப்பில், சில சஹாபாக்கள் பிறையை பார்த்து இரண்டா மூன்றா என்று ஏன் குழம்ப வேண்டும்? கணித்தால், இரண்டாம் பிறையா மூன்றாம் பிறையா என்று ஏன் குழப்பம் ஏற்படுகிறது?
நீங்கள் பிறை பார்க்கும் வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டி தருகிறான் என்று ரசூல் (ஸல்) அவர்கள் எதற்கு சொல்ல வேண்டும்? கணிக்கும் வரை மாதத்தை நீட்டி தருவதில் அர்த்தம் இருக்குமா பார்க்கும் வரை நீட்டி தருவதில் அர்த்தம் இருக்குமா?



ஐந்தாம் ஆதாரம் : (அறிவிப்பவர் : அபுல் பக்தரி, நூல் : முஸ்லிம்)

இன்னொரு அறிவிப்பில், பிறையை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் அல்லாஹ் பிறையை சிறிது நேரம் வானில் தென்பட செய்கிறான் என்று ரசூல் (ஸல்) சொல்லியுள்ளார்களே, கணித்து விடலாம் என்றால், ரசூல் (ஸல்) இவ்வாறு ஏன் சொல்ல வேண்டும்?
கணித்து செயல்படும் ஒருவருக்காக பிறையை வானில் ஏன் சிறிது நேரம் அல்லாஹ் தென்பட வைக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக