அஸ்ஸலாமு அலைக்கும்..
சில அரைகுறைகள் நம்மிடம் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் அறைகூவல் விடுவதும், தொடர்ந்து அது பற்றி cc யுடன் பேச தயாரா? என்று கேட்டால் தலை மறைவாகி விடுவதையும் சில நாட்களாக கவனித்து வருகிறோம்.
இது போன்ற அரைகுறைகளுக்கு நாம் சொல்லிக்கொள்வது, ஏகத்துவக்கொள்கை சம்மந்தமாக எந்த தலைப்பிலும் எந்த வகையிலும் வாதிப்பதற்கு நான் தயார்.
நம்மோடு வாதிக்கும் போது, ஆதாரங்கள் பேச வேண்டும். நையாண்டிகளும், மறைமுக தனி நபர் தாக்குதல்களும் நம்மிடம் எடுபடாது. அவற்றை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.
ஆதாரங்கள் கேட்டால் அதை தரும் நிலையில் உள்ள ஒருவர் மட்டுமே நம்மோடு வாதிக்க தகுதி பெற்றவர் ஆகிறார். அவர் நம்மிடம் கேட்டால் அதை தரும் நிலையில் நாம் இருக்கிறோம்.
மேற்கூறிய சிறு நிபந்தனைக்கு உட்பட்டு, எவரும் எந்த மார்க்க கொள்கை குறித்தும் என்னோடு வாதிக்கலாம். எனக்கு எந்த தலைப்பை குறித்து ஞானம் இல்லையோ, அதை குறித்து நான் பேச மாட்டேன். நான் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ள கொள்கைகளில் மட்டும் தாராளமாக வாதிக்கலாம்.
அதே போன்று, வாதிப்பது, இருவர் மட்டுமாக இருக்ககூடாது. வாதம் என்று வந்து விட்டால், அதனால் நேரடி பயன் அடையக்கூடிய பலர் இருக்க வேண்டும். இன்று புழக்கத்தில் உள்ள தமிழ் பேசும் குழுமங்களோ, அல்லது வேறு தனி நபர்களோ, நம்முடைய வாதத்திற்கு பார்வையாளர்களாக இருக்க வேண்டும்.
பார்வையாளர்கள் இருந்தால் தான் எந்த ஒருவரும் உண்மை பேசுவர்! ஆதாரத்தோடு பேச வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் ஏற்ப்படும்.
மேற்கூறிய இரண்டு நிபந்தனைகளை மனதில் கொண்டு நம்மிடம் சவால் விட்டவர்கள் மீண்டும் எழுதட்டும்..
வறட்டு சவால் வைத்து விட்டு, ஆதாரங்களுடனும், cc உடனும் பேச தயாரா? என்ற கேட்ட நொடியில் காணாமல் போனவர்கள் வைத்த விவாத தலைப்புகளில் என் நினைவுக்கு வருபவை.. (வாதத்தை துவக்கியவர்களுக்கு தனது தலைப்பு எது என்பது தெரியும்..!)
இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்வது குபுர் என்று கூறிவது சரியா?,
கபுறு ஜியாரத் செய்வதை விமர்சிக்கலாமா?,
வலிமார்களிடம் உதவி தேடலாமா,
பிறையில் குழப்பங்கள் செய்தது தவ்ஹீத் ஜமாத்தா?,
பிறையை கணிப்பது இஸ்லாத்திற்கு எதிரானதில்லையா?,
தொழுகையில் விரல் அசைப்பது குழப்பம் விளைவிப்பதா?,
வஹீ மட்டும் தான் மார்க்கமா?,
சஹாபாக்களை பின்பற்றக்கூடாதா?,
குர்ஆனுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் முரண்படாதா?,
ஏகத்துவ ஒற்றுமை குலைந்ததற்கு யார் காரணம்?,
பெரியார்களின் காலை முத்தமிடலாமா?,
வசீலா தேடுவது குற்றமா?,
விவாதம் செய்யலாமா?மத்ஹப்களை பின்பற்றுவது கூடுமா?
ஜனநாயகம் இணை வைப்பு செயலா?
TNTJ அல்லது பிஜே குறித்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக