Ifham Mohamed
நபி(ஸல்) கூறுகின்றார்கள்:-
உங்களில் எவரும் தனது கட்டிலிலே சாய்ந்திருக்கும் நிலையில் (நான்) ஏவியவற்றிலிருந்து அல்லது (நான்) தடுத்த வற்றிலிருந்து ஒரு விடயம் அவரிடம் வரும்போது “(இவை எதுவும்) எங்களுக்குத் தெரியாது. அல்லாஹ்வின் வேதத்தில் எதனை (நாம்) காணுகின்றோமோ அதனை (நாம்) பின்பற்றுவோம் எனக்கூறுவதை (நான்) அறவே காணக்கூடாது. (அபூ தாவூத் - கி. ஸுன்னா 06)நான் நபி(ஸல்) அவர்கள் தடுத்த செய்தியை முன்வைக்கின்றேன் ஆனால் நீங்கள் அல்லாஹ் சொல்லாத ஒரு நிபந்தனை என்கின்றீர்கள். சிந்தியுங்கள்.28:55, 25:63, 43:89 ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டுள்ளது மீண்டும் பார்க்கவும்.
முஸ்லிம் காபிர் என்று இருபாலரும் இருக்கக் கூடிய இடத்தில் ஸலாம் சொல்வதும் ஒரு வழிமுறையாகும். நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்கள், வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு ஸலாத்தை ஆரம்பிக்காதீர்கள் என்று கூறிவிட்டு அதற்கு முரணாக நபி(ஸல்) அவர்கள் செயற்படுத்தினார்கள் என்று கூறுகிறீர்களா? நஊதுபில்லாஹி மின்ஹா. முரண்பாடாக விளங்க வேண்டாம். அடுத்து, முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாத்தை ஆரம்பிக்காதீர்கள் என்று 2 ஆதாரங்கள் முன்வைத்து “முஸ்லிம்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்” என்ற குறிப்பான ஆதாரங்களையும் முன்வைத்த பிறகு,
பொதுவான அறிவிப்புக்களை கொண்டு வந்து காபிர்களுக்கும் ஸலாம் சொல்லலாம் என்பது இஸ்லாத்தில் இல்லாத விதிமுறையாகும். “ஸலாத்தில் ஆரம்பிப்பதை நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துவிட்டார்கள். ஆகவே பொதுவாக வரக்கூடிய அனைத்து அறிவிப்புக்களும் வரையறைக்குள் வந்துவிடும். ஏழைகளுக்கு உணவளித்தல் , உறவை பேணுவதற்கு நபி(ஸல்) அவர்கள் வரையறுக்கவில்லை. ஒரு ஹதீஸை வைத்து முடிவெடுக்காமல் குறிப்பிட்ட விடயம் பற்றி கூறப்படும் எல்லா ஹதீஸ்களையும் எடுப்பதினுாடாகவே சரியான முடிவை எட்ட முடியும். நீங்கள் தவறிய இடங்களில் இதுவும் ஒன்று.நேர்வழியில் உள்ளவருக்கு ஸலாம் என்பது மறுமையில் என்பதற்கு ஆதாரம் முன்வைக்கப்படவில்லை. சுயகருத்து மார்க்கமல்ல நான் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். அபூதாவுத் ஹதீஸ் – “உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்புங்கள்” என்று வருகிறது. நபி(ஸல்) அவர்கள் உங்களுக்கு என்று கூறுவது முஸ்லிமல்லாதவர்களையும் சேர்த்தா..??
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் “உங்களுக்கு” “நீங்கள்” என்ற வார்த்தைகளால் நாடுவது முஸ்லிமல்லாதவர்களையும் என்றால் இப்பதிவில் மேலே நான் வைத்துள்ள ஹதீஸூக்கும் விளக்கம் அது தானா?
முஸ்லிம்களுக்கு தான் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் – நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி¬)நூல் : அபூ தாவூத் (4523)சகோதரர் என்று கூறுவது காபிர்களையும் குறிக்கும் என்று வாதம் வைக்கட்டும் பார்க்கலாம்.
புஹாரி – 1202 ஒரு துஆவை கற்றுக்கொடுத்து “பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியவர்களாவீர்கள்' எனக் கூறுகிறார்கள்.
அஹமத் 27280 – “போர் செய்ய போகிறோம்” என்ற வாசகத்தை ஹதீஸில் இருந்து காட்டவும். ஹதீஸில் இல்லாத வார்த்தையை ஹதீஸில் புகுத்தி சட்டத்தை பிழையாக வரையறுக்க முயற்சி செய்கின்றீர்கள். அடுத்த பதிவில் கட்டாயமாக காட்ட வேண்டும். எனது இறுதிப்பதிவில் பதில் அளிக்க வசதியாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.ஒரு வாதத்திற்கு, போரின் போது தடை செய்ததால் சட்டம் குறிப்பானது என்று எடுப்பீர்களானால் கைபர் போரில் தடை செய்யப்பட்ட கழுதை இறைச்சி போரில்லாத காலத்தில் சாப்பிடுவது கூடும் எனக் கூறுவீர்களா?
யஹூதிகள் அஸ்ஸாமு என்று சென்னதால் தான் இவ்வாறு சொன்னார்கள் என்று கூறுவீர்களானால் நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு மாத்திரம் ஆரம்பிப்பதை தடைசெய்யாமல், கிறிஸ்தவர்கள், இணைவைப்பவர்கள் என்று ஒட்டுமொத்தமாக தடைசெய்துள்ளார்களே. இதிலிருந்து நீங்கள் முன்வைக்கும் காரணங்கள் ஆதாரமில்லாத சுயகருத்துக்கள் என்பது புரியவில்லையா?
மேலும் இங்கு ஸலாத்தை ஆரம்பிப்பது தொடர்பாக வரவில்லை. பதில் அளிப்பது பற்றியே வந்துள்ளது. இவர்கள் இவ்வாறு ஸலாம் கூறியதாலே ஸலாத்தை இவர்களுக்கு சொல்ல வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்பது சுயவிளக்கமேயன்றி வேறில்லை.இதற்கு தான் என்றால் எதற்காக இணைவைப்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆகவே நீங்கள் கொண்ட கொள்கையை நிலைநாட்டுவதற்கு ஹதீஸிற்கு மாற்றுவிளக்கம் கொடுக்காதீர்கள். உங்கள் முழு வாதங்களுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குத்தான் ஸலாம் என்பதற்கு பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இன்னும் ஒரு சரியான ஆதாரம் கூட முன்வைக்கவில்லை. ஆகவே சுருக்கம்
1.முஸ்லிமல்லாதவர்களுக்கு தடை
2. நேர்வழியில் உள்ளவர்களுக்கு கூறுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.3.நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்புங்கள் என்று கூறுகிறார்கள்.
4. யூசுப்(அலை) அவர்களின் சுஜூது போன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியது நபியின் உம்மத்திற்கு கிடையாது.
5. அறிவீனர்களுக்கு ஸலாம் சொல்வீராக என்று கூறுவதை மொழிரீதியாக எடுக்க வேண்டும். மீறி ஸலாம் தான் என்றாலும் நீங்கள் கூறிய விதியின் பிரகாரம் அவர்களுக்கு விதிவிலக்காகவே எடுக்க வேண்டும்.
தொடருங்கள் தொடர்கிறேன்.
Nashid Ahmed
அறிவீனர்களுக்கு சலாம் சொல்வது விதிவிலக்கு என்கிறீர்கள்.அதற்கு காரணம்,ஹதீஸில் சலாம் சொல்ல தடை வந்திருப்பதை காட்டுகிறீர்கள்.இது அடிப்படையிலேயே தவறான அணுகுமுறை.
ஹதீஸில் ஒன்றை புரிந்து அதனடிப்படையில் குர்ஆனுக்கு அர்த்தம் வைக்க கூடாது.
குர்ஆனில் அறிவீனர்களுக்குசலாம் சொல்லுமாறு வந்தால் அது தான் முதல் அர்த்தம்.பிறகு ஹதீஸில் சலாம் சொல்ல தடை வந்தால் அந்த ஹதீசை தான் குர்ஆனுக்கு ஏற்றாற்போல மாற்றி புரிய வேண்டுமே அல்லாமல்,ஹதீசில் தடை உள்ளது,ஆகவே குர்ஆன் வசனத்திற்கு இப்படி பொருள் கொள்ள வேண்டும் என்பது மிக மிக தவறான போங்கு.
அறிவீனர்கள் என்றாலும் சலாம் சொல்லுங்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டால் அது தான் அர்த்தம். காஃபிர்களை அலட்சியப்படுத்த வேறு வார்த்தைகளை அல்லாஹ்வால் சொல்ல முடியாதா? ஏன் சலாம் என்று சொல்ல சொல்ல வேண்டும்? என்பதை சிந்தித்தாலும் காஃபிர்களுக்கு முன்கூட்டியே சலாம் சொல்ல அல்லாஹ் அனுமதிப்பதை புரியலாம்.
யூதர்களுடன் தாக்குதலுக்கு போகிறோம் ஆகவே சலாத்தை கொண்டு முந்தாதீர்கள் என்கிற ஹதீஸிலிருந்தே மற்ற நேரங்களில் சலாத்தை கொண்டு முந்தலாம் என்று தெரிகிறது என்பதை சொலியிருந்தேன்.
அப்படியானால் கைபர் போரில் கழுதை உண்ண தடை என்பதால் மற்ற நேரங்களில் சாப்பிடலாமா? என்று கேட்கிறீர்கள்.
கழுதை சாப்பிட தடை என்று பல்வேறு ரிவாயத்களில் தனியாக வந்திருக்கிறது.அத்துடன்,மேற்படி ஹதீசை போன்று, நாம் கைபர் போருக்கு போகிறோம், எனவே கழுதை சாப்பிடாதீர்கள் என்று ரிவாவயத்தில் இல்லை.கைபர் போரின் போது கழுதை முழுமையாக தடுக்கப்பட்ட சட்டம் இறங்கியது என்று தான் உள்ளது.
கைப்ருக்கு செல்கிறோம் ஆகவே கழுதை உண்ணாதீர்கள் என்று வந்திருந்தால் தான் மற்ற நேரங்களில் அனுமதி என்று புரிய இடமிருக்கும்.
யூதர்கள் வரம்பு மீறீயதால் அவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டாம் சரி, அப்படியானால் காஃபிர்களுக்கு என்று பொதுவாக ஏன் நபி சொல்ல வேண்டும்? காஃபிர்கள் என்று சொல்லப்படும் ரிவாயத்தும் கூட அந்த குறிப்பிட்ட யூத கிறித்தவர்களை தான் குறிக்கும்.இதற்கு இரண்டு காரணங்களை தருகிறேன்.
ஒன்று,யூதர்கள் வரம்பு மீறியதாக வரக்கூடிய புஹாரி 4384 இன் இறுதியில் இதை 58:8 வசனம் மூலம் அல்லாஹ் கண்டிப்பதாய் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த குறிப்பிட்ட வசனத்தில் யூதர்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டு கண்டிக்காமல் நிராகரிக்கும் கூட்டம் என்று பொதுவாகவே சொல்கிறான். ஆக, நிராகரிக்கும் கூட்டம் என்று அல்லாஹ் பொதுவாக சொன்னாலும் அது அந்த குறிப்பிட்ட யூத கிறித்தவர்கள் தான் என்று ஹதீஸின் மூலம் புரியலாம்.அந்த அடிப்படையில் தான் யூதர்களுக்கு சலாம் சொல்லாதீர்கள் என்பதையும் பொதுவாக காஃபிர்களுக்கு சலாம் சொல்லாதீர்கள் என்றும்சொல்லப்படுவதையும் புரிய வேண்டும்.
இரண்டு,யூதர்களுக்கு ஸலாத்தினை கொண்டு ஆரம்பம் செய்யாதீர்கள் என்று நபியவர்கள் கட்டளையிட்டதாக 3 நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.அபூ பஸ்ரா (அஹ்மத் 22278,22279,22280),அப்துர் ரஹ்மான் அல் ஜூஹ்னி (அஹ்மத் 17334, 18074),அபூ ஹூரைரா (ரலி) (அஹ்மத் 7606)இந்த மூவரில்,அபூ ஹூரைரா அறிவிக்கும் சில அறிவிப்பாளர்கள் மாத்திரமே யூதர்களுடன், கிறித்தவர்கள் என்ற வார்த்தையை அதிகப்படுத்தி அறிவிக்கின்றனர்.
அஹ்லுல் கிதாப் என்பது இஸ்ரவேலர் சமுதாயத்தைச் சார்ந்த யூதர்களையும், கிறித்தவர்களையும் மட்டுமே குறிப்பதாகும்.எனவே முஷ்ரிகீன்கள் என்பது அனைத்து இணைவைப்பாளர்களையும் குறிக்காது.மாறாக யூத கிறித்தவர்களை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகிவிட்டது.
இப்ராஹிம் நபியிடம் பாவ மன்னிப்பை தவிர மற்ற அனைத்திலும் முன் மாதிரி இருப்பதாய் அல்லாஹ் சொல்லி விட்ட பிறகு, இல்லை இல்லை, பாவன்னிப்பு மற்றும் சலாம் சொல்லுதல் என்று நபி அவர்கள் சொல்வார்களா? வழக்கம் போல் ஹதீசிலிருந்து குர்ஆனை அணுகுகிற மிகத்தவறான போக்கே இவ்வாறான புரிதலுக்கு அடிப்படை காரணம்.பாவமன்னிப்பு கோரியதை தவிற ஏனைய அனைத்திலும் இப்ராஹிமிடம் முன் மாதிரி இருப்பதாய் அல்லாஹ் சொல்கிறான் என்றால் (60:4) சலாம் சொல்வதையும் சேர்த்து தான். இதை அடிப்படையாய் மனதில் வைத்துக் கொண்டு பிறகு நபி என்ன சொல்கிறார்கள் என்று அணுக வேண்டும். அப்படி அணுகும் போது,
காஃபிர்களுக்கு சலாம் சொல்லலாம் என்பது தான் பொதுவான விதி என்பதும், அது தான் இப்ராஹிம் நபியின் வழிகாட்டல் என்பதும், முஹம்மது நபி கூட வேறு சந்தர்ப்பங்களில் சலாம் சொல்ல அனுமதிக்கிறார்கள் என்பதும், ஒரு சில காரணங்கலை கருத்தில் கொண்டு தான் இந்த விதிவிலக்கை அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்பதும் அழகாக புரியும்.
அது அல்லாமல் நீங்கள் புரிவது போல் ஹதீஸிலிருந்து குர்ஆனை அணுகும் புரிதலை கொண்டால் இப்படி தான் ஏறுக்கு மாறாய் விளங்க வேண்டி வரும்.
இது தவிர, புஹாரி 3326 இல் மலக்குகளுக்கு சலாம் சொல்லுமாறு ஆதம் நபிக்கு அல்லாஹ் சொல்லி, இது தான் உங்கள் சந்ததிக்கான முகமன் என்கிறான். ஆதம் நபியின் சந்ததி என்பது காஃபிர்களையும் உள்ளடக்கும்.
மேலும், வரம்பு மீறும் யூத கிறித்தவர் விஷயத்தில் சலாத்தைக் கொண்டு முந்தக் கூடாது என்கிற சட்டத்திலிருந்து, மற்றவர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தலாம் என்கிற அனுமதி உள்ளது என்பதற்கு 60:8 வசனம் சான்று பகர்கிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து நம்முடன் வரம்பு மீறாத காஃபிர்களுக்கு சலாம் சொல்லி நன்மை செய்வதில் தவறில்லை !
இரண்டு கமன்ட் என்பது மிகவும் சுருக்கமான அளவு என்பதால் வாதங்களை விரிவாக வைக்க இயலாத சூழல் உள்ளது, சில ஆதாரங்கள் விடுபட்டிருக்கிறது என்றாலும் நடுனிலையுடன் படிப்பவர்களுக்கு இதுவே போதுமானது என்று கருதுகிறேன். அடுத்த வாய்ப்பே இருவருக்கும் இறுதி என்பதால் புது ஆதாரங்கள் எதுவும் வைக்க வேண்டாம்.
IfhamMohamed
குர்ஆன் ஹதீஸ் இரண்டுமே அல்லாஹ்வின் வஹி என்று ஏற்றுக்கொண்டு விட்டு அவற்றுக்கிடையில் வித்தியாசம் காட்டப்படுகின்றமேயே மிகப் பெரும் தவறான அணுகுமுறையாகும்.
எனது இறுதிக்கருத்துப்பதிவில் -(அபூ தாவூத் - கி. ஸுன்னா 06) ஹதீஸின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ள அறிவிப்பை முன்வைத்தால் ”இவை அல்லாஹ்வின் வேத்ததில் இல்லை” என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்த அதே வார்த்தையை கூறுகின்றீர்கள்.
53:3,4 வசனம் நபி(ஸல்) அவர்கள் வஹியை தவிர பேசுவதில்லை எனக் கூறுகிறது. அப்படிப்பட்ட ஒரு வஹியை கொண்டு வந்து இரண்டாம் தரமாக வைப்பது பெரும் மோசடியாகும்.
தெளிவாக குர்ஆனும் நேர்வழியில் உள்ளவர்களுக்கு ஸலாம் சொல்லுமாறு தான் நபி(ஸல்) அவர்களை பணிக்கின்றது. மூஸா(அலை) ஹாரூன் (அலை) அவர்களும் அவ்வாறு தான் கூறுகிறார்கள்.
20:47, 27:59 6:54. ஆகியவற்றிற்கு ஒரு சுயவிளக்கம் கொடுக்கப்பட்டது ஆதாரம் முன்வைக்கப்படவில்லை. அவற்றுக்குரிய பதில்கள் வழங்கப்பட்டும் விட்டது.நபி(ஸல்) அவர்கள் தடையும் விதித்து, நேர்வழியில் உள்ளவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்பு அறவீனர்களுக்கு ஸாலம் கூறுமாறு கட்டளையிட்டதை காபிர்களுக்கு கூறலாம் என அல்லாஹ்வின் வசனங்களையே முரண்பாடாக்குகின்றீர்கள்.
//காஃபிர்களுக்கு முன்கூட்டியே சலாம் சொல்ல அல்லாஹ் அனுமதிப்பதை புரியலாம்.// உங்கள் சுயவிளக்கம் ஆதாரத்தை முன்வையுங்கள்.
இப்ராஹீம்(அலை) அவர்களின் விடயம் மிகத் தெளிவாக பல கோணங்களில் முன்வைக்கப்பட்டது எனினும் அதற்கு பதில் அளிக்காமல் திரும்ப முன்வைக்கப்பட்டுள்ளது.
யூசுப்(அலை) அவர்களின் சுஜூது விடயம் போன்று இப்ராஹீம்(அலை) அவர்கள் செய்த செயலை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உம்மத்திற்கு தடைசெய்துவிட்டார்கள். ஆனால் நாம் ஏலவே சுஜூதை சேர்த்தும் பேசுவோம் என்று ஒப்புக்கொண்டும் சுஜூது விடயம் பற்றி நீங்கள் வாயே திறக்கவில்லை.
குர்ஆனில் இருந்து ஹதீஸை பார்ப்பதா? ஹதீஸில் இருந்து குர்ஆனை பார்ப்பதா? என்ற கேள்விக்கே இடம் கிடையாது. இரண்டும் வஹி. இரண்டையும் எடுத்து வைத்து தான் முடிவெடுக்க வேண்டும் அதுவே சரியான அணுகுமுறை.
மேலும் ஏற்கனவே நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்பிக் கொள்ளுங்கள் என்று ஸலாத்தை வரையறுத்த்தற்கு ஆதாரம் முன்வைக்கப்ட்டது. எனினும் அதற்கும் பதில் அளிக்காமல் மீண்டும் புஹாரி – 3326 யை கொண்டு வந்து ஆதம்(அலை) அவர்களின் சந்த்தி என்று கூறிவிட்டு அதில் காபிர்களும் உள்ளடக்கப்படுவர் என்று கூறுகிறீர்கள்.
ஸலாத்தை முஸ்லிம்களுக்கு என்று குறிப்பாக்கிய பின்பு பொதுவாக வரக்கூடிய அத்தனை அறிவிப்புக்களும் குறிப்பாக்கியதில் அடங்கிவிடும் என்ற ஹதீஸ்கலை விதி பற்றி அறியாமல் தான் கொண்ட நிலையை சரி காண முயற்சி செய்யப்படுகிறது.
முதலக்காக வரும் அணைத்து அறிவிப்புக்களும் முஸ்லிம்களுக்கு/நேர்வழியில் உள்ளவர்களுக்கு என முகையிதாக வந்துள்ளதை கண்டுகொள்ளாமல் உங்கள் தரப்பு வாதத்தை நிலை நிறுத்துவதற்காக அந்த விதிக்கு உட்படாத தடை பற்றிய அறிவிப்பை அதற்குள் கொண்டு வருகிறீர்கள்.
அடுத்து ஹதீஸில் நீங்கள் செய்த ஒரு மோசடியை சுட்டிக்காட்டி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தும் நீங்கள் மௌனமாக இருக்கின்றீர்கள் இது பெரும் தந்திரமாகும். இதற்கப்பால் எனக்கு எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறியும் கண்டுகொள்ளாமல் விடுவது பெரும் மோசடி என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். மீண்டும்
உங்கள் இறுதி வாய்ப்பிலாவது காட்டுங்கள். நீங்கள் செய்த மோசடியை யாவரும் கண்டு கொள்ளட்டும்.ஹதீஸில் இல்லாத வார்த்தையை ஹதீஸாக்கி விதிக்கு உட்படாத அறிவிப்புக்களை உட்படுத்தி முதலக் முகையித் விதியை தலைகீழாக புரட்டிவிட்டீர்கள்.
58:8 வசனம் முதலக்காகவும் ஹதீஸ் முகையிதாகவும் வந்தால் அதன் அர்த்தம் முகையிதாகவுள்ள கூட்டம் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதனை கொண்டு வந்து வேதங்கொடுக்கப்பட்டவர்கள் இவ்வாறு சென்னதால் தான் நபி(ஸல்) அவர்கள் ஸலாத்தை ஆரம்பிக்க வேண்டாம் என்று கூறினார்கள் என உங்கள் சுயவிளக்கத்தினை புகுத்தி நீங்கள் சரிகாணும் கொள்கைக்கு சார்பாக அடிப்படையின்றி விளக்கம் கொள்வது வியப்பாக உள்ளது.முஸ்லிம்களுக்குத் தான் ஸலாம் என்பதற்கு கிட்டதட்ட ஆறு ஆதாரங்களும் பொதுவாக வரக்கூடிய அணைத்தும் முஸ்லிம்களையே குறிக்கும் என்பதனையும் முன்வைத்து முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாத்தை ஆரம்பிப்பதற்கு தடையையும் முன்வைக்கப்பட்டுள்ளது.இணைவைப்பவர்கள், வேதங்கொடுக்கப்பட்டவர்கள், யூதர்கள் என்று வரும் அறிவிப்புக்களில் முதலக் முகையித் எடுக்க முடியாது எதுவும் பொதுவாக கூறப்படவில்லை. முகையிதிற்கு தெளிவான ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் அப்படியான ஒரு ஆதாரம் உங்களிடம் கிடையாது. ஏற்கனவே ஹதீஸ் இல்லாத ஒரு வார்த்தையை ஹதீஸில் சேர்க்கப்பட்டும் முயற்சி நடைபெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது.எனது பல வாதங்களுக்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை ஆனால் உங்கள் கொள்கையை நிலைநாட்டுவதற்கு, வஹியில் பாகுபாடு,விதிகள் தலைகீழ்,ஹதீஸில் இட்டுக்கட்டு,அல்லாஹ்வின் பெயரால் சுயவிளக்கம் என்று எல்லாவகையான பிழையான அணுகுமுறைகளையும் காணக் கூடியதாக உள்ளது. நடுநிலையுடன் வாசிக்க கூடிய யாவரும்,அல்லாஹ் கூறியதன் பிரகாரம்,நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில்,ஸலாம் நேர்வழியில் உள்ளவர்களுக்கே என்பதை கண்டுகொள்வார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
ஹதீஸில் இல்லாத வார்த்தையை ஹதீஸாக்கி விதிக்கு உட்படாத அறிவிப்புக்களை உட்படுத்தி முதலக் முகையித் விதியை தலைகீழாக புரட்டிவிட்டீர்கள்.
58:8 வசனம் முதலக்காகவும் ஹதீஸ் முகையிதாகவும் வந்தால் அதன் அர்த்தம் முகையிதாகவுள்ள கூட்டம் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதனை கொண்டு வந்து வேதங்கொடுக்கப்பட்டவர்கள் இவ்வாறு சென்னதால் தான் நபி(ஸல்) அவர்கள் ஸலாத்தை ஆரம்பிக்க வேண்டாம் என்று கூறினார்கள் என உங்கள் சுயவிளக்கத்தினை புகுத்தி நீங்கள் சரிகாணும் கொள்கைக்கு சார்பாக அடிப்படையின்றி விளக்கம் கொள்வது வியப்பாக உள்ளது.
முஸ்லிம்களுக்குத் தான் ஸலாம் என்பதற்கு கிட்டதட்ட ஆறு ஆதாரங்களும் பொதுவாக வரக்கூடிய அணைத்தும் முஸ்லிம்களையே குறிக்கும் என்பதனையும் முன்வைத்து முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாத்தை ஆரம்பிப்பதற்கு தடையையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இணைவைப்பவர்கள், வேதங்கொடுக்கப்பட்டவர்கள், யூதர்கள் என்று வரும் அறிவிப்புக்களில் முதலக் முகையித் எடுக்க முடியாது எதுவும் பொதுவாக கூறப்படவில்லை. முகையிதிற்கு தெளிவான ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் அப்படியான ஒரு ஆதாரம் உங்களிடம் கிடையாது. ஏற்கனவே ஹதீஸ் இல்லாத ஒரு வார்த்தையை ஹதீஸில் சேர்க்கப்பட்டும் முயற்சி நடைபெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது.
எனது பல வாதங்களுக்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை ஆனால் உங்கள் கொள்கையை நிலைநாட்டுவதற்கு,
வஹியில் பாகுபாடு,விதிகள் தலைகீழ்,ஹதீஸில் இட்டுக்கட்டு,அல்லாஹ்வின் பெயரால் சுயவிளக்கம் என்று எல்லாவகையான பிழையான அணுகுமுறைகளையும் காணக் கூடியதாக உள்ளது. நடுநிலையுடன் வாசிக்க கூடிய யாவரும்,
அல்லாஹ் கூறியதன் பிரகாரம்,நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில்,
ஸலாம் நேர்வழியில் உள்ளவர்களுக்கே என்பதை கண்டுகொள்வார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
நேர்வழி பெற்றவர்களுக்கு சலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் உங்கள் கொள்கை
நிலைபெற்று விடும் என்கிற தப்புக்கணக்கை மறுபடி இட்டுள்ளீர்கள்.
நேர்வழியில்
இருப்பவர்களுக்கு தான் சலாம் என்றால் காஃபிர்களுக்கு பதில் சலாம் சொல்லலாம் என்று மட்டும் ஏன் கூறி முரண்படுகிறீர்கள்?என்கிற கேள்விக்கு முறையான விடை வந்ததா?
இருப்பவர்களுக்கு தான் சலாம் என்றால் காஃபிர்களுக்கு பதில் சலாம் சொல்லலாம் என்று மட்டும் ஏன் கூறி முரண்படுகிறீர்கள்?என்கிற கேள்விக்கு முறையான விடை வந்ததா?
அல்லது,நேர்வழி பெற்றவர்களுக்கு "தான்" சலாத்தை கொண்டு முந்த வேண்டும் என்று அல்லாஹ் எங்கேயேனும் குறிப்பிட்டு கூறீயிருக்கிறானா?
நேர்வழியில் இருப்பவர்களுக்கும் சலாம் சொல்லப்பட்டுள்ளது,நேர்வழியில் இல்லாதவர்களுக்கும் சலாம் சொல்ல அனுமதி இருக்கிறது.
நேர்வழியில் இருப்பவர்களுக்கு சலாம் என்று வருகிற எல்லா இடங்களிலும் மறுமை வெற்றியை தொடர்புபடுத்தியோ நரகத்தின் வேதனையை ஒப்பீடு செய்தோ தான் வருகின்றன.இவற்றை ஏற்கனவே நான் காட்டியுள்ளேன்.
அதற்கு விடை சொல்வதை விட்டு, நேர்வழி பெற்றவர்களுக்கு தான் சலாம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டால் நம் கருத்து பதிந்து விடும் என்று எண்ணுகிறீர்கள்.
அந்த ஹதீஸில் போர் என்கிற வார்த்தையை காட்ட முடியுமா? என்று கேட்டிருக்கிறீர்கள். வார்த்தையில்லாவிட்டாலும் அதன் கருத்து போரிடுவதை தான் குறிக்கும்.நெருக்கடியான பாதையை நோக்கி செல்ல நிர்பந்தியுங்கள் என்பன போன்ற வாசகம் அவர்களுடன் கசப்பான ஒரு மோதல் போக்கை எதிர்கொள்ளும் கருத்தில் தான் சொல்லப்படும்.முற்பகலில் போர்கள் செய்யப்படும் என்பதற்கு வேறு பல செய்திகளில் சான்றும் உள்ளன. ஒரு வாதத்திற்கு போர் பற்றி இது பேசவில்லை என்றாலும் அதனால் எனது கருத்தில் பின்னடைவேதும் இல்லை.அதை புரிய, சலாத்தை கொண்டு முந்தலாம் என்பதற்கு நான் அடுக்கிய ஏராளமான சான்றுகளை மீண்டும் கவனிக்கவும்.
இப்ராஹிம் நபி சொன்ன சலாம்,
குதர்க்கமாக பேசுவோருக்கு சலாம்,
தெரிந்த, தெரியாதவர்களுக்கு சலாம்,
முஸ்லிம்களுடன் கலந்திருந்த சபையில் காஃபிர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக சலாம், ஏழைகளுக்கு உணவளிப்பதுடன் சேர்த்து சொல்லப்பட்ட சலாம்,என பல்வேறு சான்றுகளை காட்டியுள்ளேன்.
நீங்களோ, முஸ்லிம்களுக்கு சலாத்தை பரப்புமாறு,((கவனிக்க, முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சலாம் என்று அல்ல, முஸ்லிம்களுக்கு சலாம், அவ்வளவுதான்))அல்லாஹ் சொல்வதை எடுத்துக் காட்டி பார்த்தீர்களா, முஸ்லிம்களுக்கு சலாம் சொல்வது சிறந்தது என்று அல்லாஹ் சொல்லி விட்டான், ஆகவே முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சலாம், என்று உங்கள் திறமையை காட்டுகிறீர்கள்.
நீங்களோ, முஸ்லிம்களுக்கு சலாத்தை பரப்புமாறு,((கவனிக்க, முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சலாம் என்று அல்ல, முஸ்லிம்களுக்கு சலாம், அவ்வளவுதான்))அல்லாஹ் சொல்வதை எடுத்துக் காட்டி பார்த்தீர்களா, முஸ்லிம்களுக்கு சலாம் சொல்வது சிறந்தது என்று அல்லாஹ் சொல்லி விட்டான், ஆகவே முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சலாம், என்று உங்கள் திறமையை காட்டுகிறீர்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால்,நாவினாலோ கரத்தினாலோ ஒரு முஸ்லிமிற்கு தொல்லை தராதவன்தான் உண்மையான முஸ்லிம் என்ற ஹதீஸின் அடிப்படையில் காஃபிர்களுக்கு தொல்லை தரலாம் என்று ஒருவர் விளங்கினால் அதுவும் சரி தானே? என்று தான் கேட்பீர்கள் போல..
முஸ்லிம்களுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்றால் முஸ்லிம்களுக்கு செய்யாதீர்கள் என்று மட்டும் புரிய வேண்டும்.அதனால் காஃபிர்களுக்கு தீங்கு செய்யலாம் என்று அர்த்தம் வராது.
அது போல்,முஸ்லிம்களுக்கு சலாம் சொல்லுங்கள் என்றால் முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய கடமையை குறிக்கிறது, அவ்வளவுதான். அதை வைத்து காஃபிர்களுக்கு சொல்லகூடாது என்று அர்த்தம் வராது.
அப்படி அர்த்தம் வர வேண்டுமெனில், முஸ்லிம்களுக்கு "மட்டும்" சலாம் சொல்லலாம் என்று வர வேண்டும். நீங்கள் திறமையை காட்டிய எந்த செய்தியிலாவது முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சலாம் என்று சொல்லபட்டுள்ளதா? இல்லை.ஆக, யார் சுய விளக்கம் கொடுப்பது என்பது தெளிவாக புரிகிறது. யூதர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தாததற்கு அவர்களின் வரம்பு மீறல் காரணம்.பொதுவாக காஃபிர்களுக்கு என்று வந்ததையும் அப்படி தான் புரிய வேண்டும்.
காரணம், 58:8 வசனத்தில் அல்லாஹ் பொதுவாக தான் சொல்கிறான்.அல்லாஹ் பொதுவாக காஃபிர்களுக்கு,என்று சொன்னதற்கு விளக்கம் தான் நபி சொன்ன இரண்டு ஹதீஸ்.
ஒன்று,அல்லாஹ் சொன்னதை போலவே முதலக்கான (காஃபிர்களுக்கு)என்ற செய்தி.
இன்னொன்று, காஃபிர்களில் யூதகிறித்தவர் என்கிற முகையிதான செய்தி.
இதில் எந்த குழப்பமுமில்லை.இதை கூட ஏன் சொன்னார்கள் என்பதற்கு நான் கூறீய காரணம் எனது சுயவிளக்கம் என்கிறீர்கள்,யூதர்களின் வரம்பு மீறிய பேச்சு தான் அதற்கு காரணம் என்பதற்கு சான்றை காட்டித் தான் சொல்லியிருந்தேன்.
காஃபிர்கள் என்கிற பொது அறிவிப்பின் முக்கய்யித் தான் யூதர்கள் என்கிற மற்றொரு அறிவிப்பு என்று நான் சொல்வதை மறுத்து விட்டு,யூதர்கள் என்கிற முகயித்திலிருந்து காஃபிர் என்கிற மற்றொரு அறிவிப்பு முத்லக் (பொது)என்று விஷயத்தை அப்படியே உல்டாவாக்குகிறீர்கள்.குழப்பம் உங்களுக்கு தான்.
மறுப்பதும் திரிப்பதும் யார்?
இப்ராஹிம் நபி பாவ மன்னிப்பு தேடியதை தவிர மற்ற அனைத்திலும்(சலாம் உட்பட)அவரிடம் முன்மாதிரி உண்டு என்று அல்லாஹ் சொல்லி விட்ட பிறகு,அதை திரித்து,பாவமன்னிப்பு மற்றும் சலாம் சொல்லுதல் என்று அல்லாஹ்வுக்கு எதிராக பேசியது நீங்கள்.
அறிவீனர்கள் தர்க்கத்திற்கு வந்தால் அவர்களுக்கு சலாம் சொல்லி சென்று விடுங்கள் என்கிற இறை வசனத்தில் வரும் சலாத்திற்கு அதன் நேரடி அர்த்தமில்லை,அது அந்த இடத்தை விட்டு செல்வதற்கு சொல்லும் ஒரு வார்த்தை என்று மென்று விழுங்கி,இறை வசனத்தின் பொருளை மாற்ற முயற்சித்தது நீங்கள்.
நேர்வழி பெற்றவர்களுக்கு தான் சலாம் என்று உங்கள் நிலைபாட்டிற்கே மாற்றமாய் பேசியதும் நீங்கள்.
முஸ்லிம்களுக்கு சலாம் சொல்லுங்கள் என்று சொல்வதற்கும் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சலாம் சொல்ல வேண்டும் என்று சொல்வதற்கும் இடையேயுள்ள சாதாரண வேறுபாட்டை கூட புரியாமல் குழம்பியதும் நீங்கள்.
அனைத்தையும் விட, ஹதிஸில் சலாம் சொல்லாதீர்கள் என்று உள்ளது, ஆகவே குர்ஆனின் வசனத்திற்கு இப்படி தான் அர்த்தம் வைக்க வேண்டும் என்று மார்க்கத்தை அணுக வேண்டிய விதியையே தலைகீழாக மாற்றியதும் நீங்கள் தான்.
இவையனைத்தும் இந்த விவாதத்தில் நடந்தவை !
எனது நிலையின் சாராம்சம் என்ன?
குர்ஆனில் முஸ்லிம்களுக்கு சலாம் சொல்லுமாறு அல்லாஹ் சொல்கிறான்,
சில இடங்களில் காஃபிர்களுக்கு சலாம் சொல்லவும் அனுமதிக்கிறான்.
நபி (சல்) அவர்களும் முஸ்லிம்களுக்கு சலாம் சொல்ல சொல்லியிருக்கிறார்கள், காஃபிர்கள் இருக்கும் சபையில் அவர்களை நோக்கியே சலாம் சொல்லியும் இருக்கிறார்கள்.
இவை பொது விதிகள்.
இப்போது, ஒரு சில சந்தர்ப்பங்களில் காஃபிர்களுக்கு சலாத்தைக் கொண்டு முந்தாதீர்கள் என்றும் கட்டளையிடுகிறார்கள் என்கிற வகையில் மேல்கூறப்பட்ட பொது விதியிலிருந்து ஏதும் விதிவிலக்குகள் உள்ளனவா? என்று சிந்திக்கவேண்டுமேயல்லாமல், இதை கண்ணை மூடி பின்பற்றுகிறேன் என்று சொல்லி ஏனைய அனுமதிகளை மறுக்கக் கூடாது.
இங்குள்ள விதிவிலக்கு என்ன என்பதை ஆராய்வதற்கும் வேறொரு ஹதீஸ் துணையாக நிற்கிறது.
இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாய் சிந்திக்கையில், நமக்கு தீங்கு செய்யாத காஃபிர்களுக்கு சலாத்தைக் கொண்டு முந்துவதில் தவறில்லை, அதே சமயம், நம்மை அழிக்க நினைக்கும் காஃபிர்கள் என்றால் அவர்களுடன் நாம் சலாத்தை பரப்ப தேவையில்லை என்கிற முடிவுக்கு எளிதில் வரலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக