செவ்வாய், 5 நவம்பர், 2013

சலஃபிகளின் ஜிஞ்ச‌ர் சிக்கன்


இனி முதல் நீ சிக்கன் சாப்பிடக் கூடாது என்று நோயாளியிடம் டாக்டர் அறிவுறுத்துகிறார்.

இதை கேட்ட நோயாளி, டாக்டர், சிக்கன் தந்தூரியை தான் சொன்னார், ஜிஞ்சர் சிக்கனை சாப்பிட தடை சொல்லவில்லை என்று புரிந்தால் அந்த நோயாளியின் அறிவை குறித்து என்ன எடை போடுவோம்.

தம்பி, டாக்டர் பொதுவாக தானே சொன்னார்? பொதுவாக சொன்னா சிக்கன் ல எந்த வகையையுமே சாப்பிடக் கூடாது என்று தானே புரியணும்? என்று அந்த நோயாளிக்கு நாம் அறிவுரை கூறுவோம்.

இதற்கு மீண்டும் பதில் சொன்ன நோயாளி, ஜிஞ்சர் சிக்கனை சாப்பிடக் கூடாது என்று டாக்டர் சொன்னாரா? அப்படி அவர் சொன்னதாக எடுத்துக் காட்ட முடியுமா? என்று கேட்டால் இவர் உண்மையில் மன நோயாளி தான் என்கிற முடிவுக்கு நாம் வரலாம்.

சலஃபிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் மனமுரண்டு கூட்டத்தினர் சிலருக்கும், மேலே குறிப்பிடப்பட்ட நோயாளிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஹதீஸ் குர் ஆனுக்கு முரணாக இருந்தால். அதை நிராகரிக்க வேண்டும் என்று நாம் சொல்வது போல் பல இமாம்களும் சொல்லியிருக்கிறார்கள்.

இதை நாம் எடுத்துக் காட்டும் போது, அது சனது சரியில்லாத ஹதீஸை பற்றி தான் சொல்கிறார்கள் என்று இந்த கூட்டம் சொல்கிறது.

இமாம்கள், பொதுவாக தானே சொன்னார்கள்? பொதுவாக சொன்னா குர் ஆனுக்கு முரணாக ஹதீஸில் எந்த வகை இருந்தாலும் ஏற்க கூடாது என்று தானே புரியணும்? என்று இவர்களுக்கு சொன்னால்,

சனது சரியான ஹதீஸை ஏற்க கூடாது என்று இமாம்கள் குறிப்பிட்டு சொல்லியுள்ளார்களா? என்று மீண்டும் கேட்டு சிந்தனைக்கும் தங்களுக்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியை தெளிவாக காட்டுகிறார்கள்.

இவர்கள் தான் நேர்வழியை குத்தகைக்கு எடுத்திருப்பவர்களாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக